புதன், செப்டம்பர் 30, 2009

வணக்கம் ,

நேற்றைய சந்தைகள் வழக்கம் போல எதிர் பார்த்ததற்கும் மேலாக சற்று உயர்த்து ஏன் எனில் முந்தய தினம் வர்த்தக விடுமுறைஎன்பதால் முந்தின ஆசியா சந்தைகள் சரிவு மற்றும் நேற்றைய உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சந்தைகள் பிளாட் நிலைகளில் துவங்கலாம் என எதிர் பார்த்தேன் மாறாக சந்தைகள் சற்று உயர்ந்தன .

நேற்றைய ஆசியா சந்தைகள் முடிவில் 1% - 2% அளவிற்கு உயர்வில் முடிந்தன .அதன் பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் சிறிது சரிவில் துவங்கியது . அதன் பின்னர் நமது சந்தைகள் முடிவில் ஐரோப்பிய சந்தைகள் சற்று சரிவிலேயே வர்த்தகம் ஆகி கொண்டு இருந்தன .

நேற்று நமது சந்தைகள் 30 புள்ளிகள் வரையிலான ஒரு பெரிய கேப் ஐ விட்டு சென்றுள்ளது . அது இவ்வார இறுதிக்குள் புல் செய்யப்படும் என நினைக்கிறேன் நேற்றைய வர்த்தக நேரத்தில் அந்த கேப் புல் செய்யாமல் சந்தை உயர்ந்தது சற்று ஆச்சர்யதினை அளிக்கிறது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் பற்றி பெரிசாக சொல்ல எதுவும் இல்லை வழக்கம் போல உயர்வில் தடுமாட்டம் மேலும் இன்று வரவுள்ள சில அறிவிப்புகள் சந்தைகள் எதிர் பார்த்து காத்திருக்கின்றன .

இன்றைய ஆசிய சந்தைகள் சற்று அமெரிக்கா சந்தைகளின் அடுத்த கட்ட போக்கினை எதிர் பார்த்து காத்திருக்கின்றன .நமது சந்தைகளும் அதற்காகவே சற்று பிளாட் அல்லது சில புள்ளிகள் சரிவில் துவங்கலாம் .

இன்றைய சந்தைகளில் நிபிட்டி 5012 புள்ளிகள் தாண்டி வர்த்தகம் நடக்குமானால் சந்தையின் போக்கு சற்று மேல் நோக்கியே இருக்கும் . ஆனால் இடையில் சந்தைகள் 4980 புள்ளிகளை இழக்க கூடாது .

நிலைகள்

ஆதரவு - 4980 , 4950 .

எதிர்ப்பு - 5012 , 5040 .

செவ்வாய், செப்டம்பர் 29, 2009


வணக்கம்
நேற்றைய ஆசியா சந்தைகள் ஒரு பெரிய சரிவில் சந்தைகள் வர்த்தகமாக தொடங்கின . பின்னர் முடிவு வரை சந்தைகள் சரிவுகள் அதிகமாகி 2 % அளவிற்கு சரிவில் முடிந்தன .

மதியம் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் 0.5 % அளவிற்கு சரிவில் துவங்கின .பின்னர் சரிவில் இருந்து மீண்டு உயர துவங்கின

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் முதலே ஒரு நல்ல உயர்வில் துவங்கி வர்த்தகம் ஆனது . இறுதியில் அமெரிக்கா சந்தைகள் முக்கிய எதிர் நிலையான 9855 ஐ எட்டி பிடிக்க முயற்சித்தது .ஆனால் முடியவில்லை முடிவில் 9795 - 1.25 % உயர்வில் முடிந்தது .

இன்றைய ஆசியா சந்தைகள் அமெரிக்கா சந்தைகள் போக்கினை ஒட்டி 2 % வரை உயர்வில் துவங்கி உள்ளன . மேலும் ஜப்பானிய சந்தை 1% உயர்வில் துவங்கி வர்த்தகம் நடந்து வருகிறது .

நமது சந்தைகள் நேற்றைய தினம் விடுமுறை என்பதால் இன்றைய துவக்கம் பிளாட் நிலைகளில் இருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன . அதன் பின்னர் சந்தைகள் ஆசியா ஐரோப்பிய சந்தைகளை பின்பற்றும் .

நமது சந்தைகள் வரும் நாட்களில் உயர வாய்ப்புகள் சற்று குறைவாகவே காணப்படுகின்றன . ஆகவே முடிந்தவரை உயர்நிலைகளில் உள்ளே செல்வதை குறைத்து வெளியேற பழகுங்கள் . லாபத்தினை உறுதி செய்யுங்கள் . நான் ஏற்கனவே கூறியபடி சந்தைகள் உயர்வில் தடுமாறினால் உடனடியாக உங்கள் போக்கினை மாற்றுங்கள் .

தினசரி வணிகர்கள் ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் உபயோக படுத்துங்கள் . முதலீட்டாளர்கள் சற்று பொறுமை காக்கும் நேரமிது ......

நிலைகள் =
ஆதரவு -4950 , 4910 , 4885 ............... 4850

எதிர்ப்பு - 4980 , 5012, 5040 ..............5088

இன்றைய கொசுறு ############
வரும் நாட்களில் இன்று ஜப்பானிய அரசின் காலாண்டு ஜி டி பி நாளை லண்டன் அரசின் இண்டஸ்ட்ரியல் அறிவிப்பு நாளை மறுதினம் அமெரிக்காவின் ஐ ஐ பி மற்றும் job less அறிவிப்புகள் என எந்த வாரமே ஒரு இக்கட்டான சூழலில் வர்த்தகம் ...................

கவனம் தேவை ----------------------------

நன்றி

திங்கள், செப்டம்பர் 28, 2009

பங்கு சந்தையும்தற்போதைய உயர்வும் பயமும்

வணக்கம் நண்பர்களே !!!

நமது சந்தைகள் தற்போது வர்தகமாகி வரும் நல்லதொரு சூழலில் இது போல தலைப்பிட்ட பதிவினை கண்டதும் கலங்க வேண்டாம் நண்பர்களே ..... இது ஒரு விழிப்புணர்வு பதிவு மட்டுமே ,,,,

நமது சந்தைகள் கடந்த அக்டோபர் மாதம் கடந்த குறைந்த பட்ச புள்ளிகள் கிட்டத்தட்ட 2254 ஆகும் , அந்த குறைந்த பட்ச புள்ளிகளில் இருந்து இன்றைக்கு எட்டி உள்ள அளவானது 5047 அதிகபட்சமாகும் .

இந்த அளவிற்கு உயர்த்தப்பட்ட சந்தைகள் எடுத்துக் கொண்ட காலம் வெறும் பதினோரு மாதங்கள் தான் . ஆமாம் ஆச்சர்யப்பட வேண்டாம் . ஆனால் சந்தைகள் உயர்ந்த அளவிற்கு பங்குகளின் விலைகள் உயரவில்லை . இது எல்லோருடைய குழப்பமாகவே உள்ளது . மற்றும் நமது சந்தைகள் உலக சந்தைகளின் போக்கினை கடந்த நன்கு மாதங்களாக கடை பிடிப்பதில்லை என்றே கருதுகிறேன் ..

இவற்றை எல்லாம் வைத்து பார்த்தால் சந்தைகளில் ஆபரேடிங் என ஒரு வரியில் முடித்து விட்டு போகலாம் அல்லது கண்டிப்பாக பங்குகளும் உயரும் என முடிக்கலாம் .

ஆனால் சந்தைகளின் தற்போதைய உயர்வில் யாரும் மாட்டி கொள்ள கூடாது என்பதற்க்காக குறிப்பிட்டு எழுதுகிறேன் . நம் மக்களில் பலர் திரும்ப சந்தைக்குள் நுழைய தயாராகி வருவதாக உணர்கிறேன் நமது NRI மக்களையும் சேர்த்து தான் ஆனால் இன்றைய சூழலை வைத்து பார்த்தால் சந்தைகள் கூடிய சீக்கிரம் ஒரு கடும் சரிவினை காணப்போவது நிச்சயம் .

உலக பங்கு சந்தைகளும் கிட்டத்தட்ட கடும் பீதியில் தான் உள்ளன . அவற்றிலும் கூடிய சீக்கிரம் ஒரு பெரிய சரிவினை காணலாம் .கிட்ட தட்ட இரண்டு நாட்களாக உலக சந்தைகளின் போக்கினை வைத்து பார்த்தல் விரைவில் அவற்றை காணலாம் என நினைக்கிறேன் .

நமது சந்தைகளுடன் உலக சந்தைகளை வைத்து பார்த்தால் உலக சந்தைகள் பலவற்றின் உயர்வு கிட்டத்தட்ட 50 % - 75 % மட்டுமே ஆனால் நமது சந்தைகள் மட்டும் 125 % அளவிற்கு உயர்ந்துள்ளன ..

போதாக் குறைக்கு தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் போன வாரத்தில் கடும் சரிவு அடைந்துள்ள நிலையில் வரும் வாரங்களில் அவற்றில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்கிறேன் .

கச்சா என்னை 71 $ லிருந்து 64 $ ஆக சரிவடைந்துள்ளன . இந்த நிலையில் கச்சா என்னை உயர வாய்ப்புகள் அதிகம் உள்ளன . இந்த விலையில் இருந்து கச்சா என்னை உயர துவங்கினால் 80$ நெருங்கும் என கருதுகிறேன் .

நமது சந்தைகளில் நாளும் உயரும் வங்கி பங்குகளுக்கு ஒரு நல்ல செய்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வரும் என எல்லோரது எதிர் பார்ப்பும் உள்ளது . கொடுத்தால் கூட பங்குகள் விலைகளை மேலும் உயர வாய்ப்பு குறைவு .சந்தைகள் உயராது ஆனால் இல்லை என்றால் சரிவில் முதலிடத்தில் வங்கி துறை பங்குகள் தான் இருக்கும் .ஆதலால் வங்கி துறை பங்குகளில் கவனம் கொள்ளவும்

மேற்கூறியவற்றை கவனத்தில் வைத்து தினசரி வர்த்தகர்களும் மற்றும் முதலீட்டாளர்களும் வர்த்தகம் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் .

அந்நிய முதலீட்டாளர்களின் ஆதிக்கம் ஏன் ?

வணக்கம் நண்பர்களே

நமது சந்தைகளை பொறுத்த வரை அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆப்ரேட்டகளின் ஆதிக்கம் தொடர்ந்து சந்தைகளை வழி நடத்தி செல்கிறார்கள் . இது பிற்காலத்தில் நமது சந்தைகளை பலமில்லாமல் ஆக்கி விடும் என கருதுகிறேன்

அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து நமது சந்தைகளில் முதலீடு செய்துவருவது கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துக் கொண்டே வருகிறது . ஏன் அவர்களுக்கு வேறு முதலீடு வாய்ப்புகள் இல்லையா .

இன்னும் நமது சந்தைகளின் உயர்வில அவர்கள் முதலீடு செய்து கொண்டே வர காரணம் என்ன ?
உலக சந்தைகளை மிஞ்சிய சந்தைகள் என்றால் அது நமது சந்தைகள் தான் . மற்ற சந்தைகள் உயர்வின் பொழுதும் மற்றசந்தைகள் சரிவின் பொழுதும் நமது சந்தைகள் உயர்ந்து வருவதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் . மேலும் நாட்டின் எதிர் கால வளர்ச்சி என்று என்று அரசு மார்தட்டி கொள்கிறது .

அப்படி ஒன்றும் எதிர் காலத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்ப்பட போவதாக தெரியவில்லை . துறை வரியாக எடுத்துக் கொண்டாலும் கட்டுமானம் மற்றும் கச்சா என்னை சம்பந்தமான் துறைகள் சற்று வளர்ச்சி குறையவே வாய்ப்புகள் உள்ளன .

மேலும் ரிசர்வ் வங்கி ஆளுநர் அவர்கள் இந்தாண்டு மார்ச்க்குள் இன்பிலேசன் + 6% ஐ எட்டும் என்று கூறுகிறார் . அவ்வாறு வரும் பட்சத்தில் மேற சொன்ன இரண்டு துறைகளும் கடுமையாக பதிக்கப்படும் அபயம் உள்ளது .

மேலும் ரிசர்வ் வங்கி கடன் தொகைக்கான வட்டி குறைக்கவும் நமது வங்கிகள் கடனுக்கான வட்டியை அதிகரிக்க மற்றும் டெபாசிட் இக்கான வட்டியை குறைக்கவும் வாய்ப்புகள் உள்ளன .

அவ்வாறு நிகழும் பட்சத்தில் மேலும் தொழில் வளர்ச்சி பதிக்கப்படும் அபாயம் உள்ளது .மற்றும் இப்பொழுது சரிவர நடந்து வரும் தொழில்களும் பாதிக்கும் .

ஆக அந்நிய முதலீடு தொடர இது காரணமல்ல ////

மேலும் அவர்கள் முதலீடு செய்யும் அளவினை செபி அதிகரித்து வர காரணம் என்ன ?
அரசின் முக்கிய ஆவணமான அந்நிய முதலீட்டாளர்களின் ( P NOTES ) பங்கேற்ப்பு ஆவணத்தில் சில கவன சிதறல்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் மற்றும் வெளியே கூற முடியாத சிற்சில விசயங்கள் காரணமாக இவ்விசயங்கள் தொடர்ந்து மூடி மறைக்க படுகின்றன .

மேலும் போன முறை ' p notes ' ஐ காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு வேறு நாட்டுக்கு செல்ல உள்ளதாக கூறி சந்தைகள் பெரும் சரிவினை கண்டது .அதையாரு மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் . அவ்வாறு செய்யப்படுவது எல்லாம் சில சித்து விளையாட்டுகள் தான் என நினைக்கிறேன்

ஆனால் அரசு இந்த விசயத்தில் சற்று அதிககவனம் எடுத்து அந்நிய முதலீட்டாளர்களின் போக்கினை சற்று கட்டு படுத்தினால் சந்தைகளில் அதிக பாதிப்பின்றி ஒரே சீராக செல்லும் ......

சந்தைகள் மேல் நோக்கி செலுத்தப்பட வேண்டிய கட்டாயம் என்ன ?

நமது சந்தைகளை பொறுத்த வரையில் நமது மக்களும் இன்னும் சற்று அறிய பருவத்திலேயே உள்ளனர் காரணம் என்று பார்த்தால் சந்தைகள் உயர்வின் பொழுது அதிக விலை கொடுத்து வாங்கி வைத்து விட்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை போன இரண்டாயிரத்து எட்டில் வந்தது ஆனால் அந்த சூழ்நிலைகளில் மக்களின் போக்கினை அந்நிய முதலீட்டாளர்கள் மாற்றி விட்டு ஒவ்வொரு உயர்விலும் நம் முதலீட்டாளர்களை வாங்கும் முறைக்கு திருப்பி சந்தைகளின் உயர்வினை உறுதி செய்கிறார்கள் .

ஆனால் அவ்வாறு சந்தைகள் உயர்த்தப்படுவது அவர்களின் ஆதயத்திர்க்காக என்று நமது முதலீட்டாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும் . சற்று பொறுமையாக சந்தைக்குள் முதலீடு செய்ய வேண்டும் .

மீளும் சந்தைகள் அதிகமாக உயர்ந்ததும் சந்தைகளில் இருந்து வெளியேற வேண்டும் . அல்லது லாபத்தினை உறுதி செய்ய வேண்டும் . அங்கு அந்த நிலையில் உள்ளே செல்ல கூடாது .அங்கு நமது முதலீட்டாளர்களை உள்ளே வர வைக்க சில தற்காலிக உயர்வுகள் சந்தையில் திடீரென கொண்டு வரப்படுகிறது அதை அறிந்து முதலீடு செய்ய வேண்டும் .

பங்குகளின் விலைகள் சற்றும் அதிகரிக்காமல் சந்தைகளை மட்டும் உயர்த்துவது ஏன் ?
இது தான் முக்கியமான ஒரு விஷயம் ஆனால் இந்த விசயத்தினை முதலீட்டாளர்களும் ஏன் அரசும் செபியும் கண்டு கொண்டதாக தெரியவில்லை அல்லது கண்டு கொள்ளாதது சற்று எனக்கு வியப்பினை அளிக்கிறது .

சந்தைகளில் உயர்வு என்பது நாம் சராசரி அனைவர்க்கும் தெரிந்து இருப்பது பங்குகள் விலைகள் உயர்ந்து இருக்கும் என்பதே . ஆனால் தற்போதைய நமது சந்தைகள் இதற்கும் துளியும் சம்பந்தமில்லை .

காரணம் அந்நிய முதலீட்டலர்களுடன் சில தனியார் மற்றும் சில இன்சுரன்ஸ் முதலீடு நிறுவங்களும் கை கோர்த்துள்ளன ,அவர்கள் சந்தைகளில் சில பங்குகளின் விலைகளை மட்டும் செயற்கையாக உயர்த்தி சந்தையினை மேலே கொண்டு செல்கின்றனர் .

அதுவும் குறிப்பாக ப்ளூ சிப் கம்பெனி பங்குகள் மட்டும் உயந்து பல பங்குகளை உயர் செய்யாமல் செய்கின்றர்னர் பின்னர் சந்தையில் இன்டெக்ஸ் மட்டும் உயராமல் என்ன செய்யும் இப்படியே போனால் அந்நிய முதலீட்டாளர்களும் ஆபரேட்டர்களும் தான் சந்தையில் இருப்பார்கள் ..

இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவர் ஒரு நாளில் வாங்குதல் மற்றொருவர் விற்றல் என திடர்ந்து இவர்கள் விளையாட்டினை தொடர்ந்து வருகிறார்கள் . மேலும் இந்த இருவருக்கிடையில் சந்தையில் ஆபரேட்டர் மற்றும் ச்பெகுலேட்டார் களும் சேர்ந்து நம் முதலீட்டாளர்கள் அனைவரையும் சந்தையில் இருந்தே வெளியேற்றி விடுகிறார்கள் .

நமது மக்களும் வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என போட்டு வைத்த பங்குகள் பல கோடி இருக்கலாம் .

சரி முதலீட்டாளர்கள் பாடு இப்படி தினசரி வர்த்தகர்கலாவது கொஞ்சம் சம்பாதிக்கிறார்கள் என்றால்அதுவும் கிடையாது .அவர்களையும் வர்த்தகத்தின் இடையில் அதிக பட்ச விலைகளை தாண்டி வர்த்தகம் ஆகியும் குறைந்த பட்ச விலைகளை உடைத்து வர்த்தகம் ஆகியும் அவர்களையும் குழப்பி அவர்கள் சம்பாதிக்க மட்டுமல்லாது உள்ளதையும் விட்டு விட்டு சந்தையை விட்டே வெளியேற்று கின்றனர் .

இது தான் தற்சமயம் அக்டோபர் மாதத்திற்கு பிறகு சந்தையில் நடந்து வரும் வர்த்தகம் . சரி சந்தையில் சம்பதிதவர்களே இல்லை யா என்ற பார்த்தால் இருக்கிறார்கள் பக்குவம் அடைந்த சந்தை பற்றிய முழு அறிவு பெற்றவர்கள் மட்டும் சம்பாதிக்கிறார்கள் ..

கடைசியாக ஒன்று செபி இந்த விசயத்தினை மேலும் கண்டு கொள்ளாமல் விட்டால் நமது சந்தைகள் அதல பாதாளத்திற்கு கொண்டு சென்று நமது முதலீட்டலர்களையும் சந்தையில் இருந்தே வெளியேற்றி விடுவார்கள் அன்பான அந்நிய முதலீட்டாளர்கள் . ( கேவலமாக எழுதினால் படிக்க நன்றாக இருக்காது )

கவனிக்குமா அரசு ???

அன்புடன்
ரமேஷ்

சனி, செப்டம்பர் 26, 2009

வணக்கம் நண்பர்களே

வெள்ளியன்று முடிவடைந்த சந்தைகள் முந்தய தலைப்பிற்கேற்ப சற்று சரிவடைந்தன .வெள்ளியன்று நமது சந்தைகள் முக்கிய எதிர் நிலைகள் உடைத்து மேலே சென்ற பின்னர் முந்தய பதிவில் கூறியது போல ஐந்தாயிரம் புள்ளிகளில் செல்லிங் அதிகரித்து சந்தைகள் சரிவடைந்தன .

ஆனால் நமது சந்தைகளில் வெள்ளியன்று இன்னும் கடுமையான சரிவினை எதிர் பார்த்தேன் . சந்தைகள் முக்கிய ஆதரவு நிலையான 4910 புள்ளிகள் உடை படும் என எதிர் பார்த்தேன் . இடையில் 20 நாள் சராசரி வர்த்தக புள்ளியான 4932 உடை படாததால் சந்தைகள் சற்று உயர தொடங்கின .

மேலும் அன்றைய தினம் சரிவில் துவங்கிய ஆசியா சந்தைகள் பின்னர் படிப்படியாக உயர ஆரம்பித்தன

ஆதலால் நமது சந்தைகளும் உயர்ந்தன ஆனால் சந்தைகளில் செல்லிங் அதிகரித்ததால் சந்தைகள் இரு புறமும் வேகமாக வர்த்தகம் ஆகின . பின்னர் சந்தைகள் ஐரோப்பிய சந்தைகள் துவக்கத்திற்கு பின்னர் அந்த சந்தைகளின் போக்கில் சென்று வர்த்தகம் ஆகின .

ஐரோப்பிய சந்தைகளும் துவக்கத்தில் சற்று சரிவில் துவங்கின . பின்னர் நமது சந்தைகளின் முடிவில் ஐரோப்பிய சந்தைகள் சற்று சரிவில் இருந்து உயரத் தொடங்கின . நமது சந்தைகளும் ஐரோப்பிய சந்தைகள் மற்றும் விடுமுறை தினங்களை கொண்டு சந்தைகளில் ஷார்ட் கவரிங் வந்ததால் சந்தைகள் சற்று உயர்வில் முடிந்தன .

அமெரிக்கா சந்தைகள் இரண்டவது வாரமாக உயர்வில் தடுமாறி வருகிறது என்பது குறிப்பிட தக்க விஷயமாகும் . சந்தைகள் சற்று வர்த்தக நிலைகள் மாறி வருகிறது . நேற்றைய சந்தைகள் முடிவில் சந்தைகள் சற்று குழப்பமானதாகவே முடிந்தன . பெரிதாக் சரிவுகள் இல்லை . ஐரோப்பிய சந்தைகள் முடிவில் பாசிடிவ் ஆக முடிந்தன .

நன்றி

குறிப்பு :

நண்பர்களே இன்றைய பதிவை காலையிலேயே எதிர் பார்த்து ஏமார்ந்த நண்பர்களிடம் ஒரு சிறிய மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் .

மேலும் இந்த விடு முறை தினங்களில் சில முக்கிய பதிவுகள் எழுதலாம் என தீர்மானித்துள்ளேன் ,

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க

நன்றி

அன்புடன்
ரமேஷ்

வெள்ளி, செப்டம்பர் 25, 2009

அறிவிப்பு ...

நண்பர் திரு ராஜ் குமார் அவர்களுக்கு ,,

நான் ஒன்றும் காலம் காலமாக வலை பதிவு எழுதுவதில்லை . வலை உலகிற்கு நான் ஒரு சிறு பிள்ளை , ஆதலால் தாங்கள் கூறிய ( தமிழகத்தில் ராஜ்குமார் அவர்களின் நண்பர் பாமரன் என்ற புனை பெயரில் பிரபல கட்டுரையாளர் என்ற செய்தியை தெரிவித்துள்ளார் . மேலும் பின்னாளில் தவறுகள் எதுவும் நடவாதிருக்க ) படி பின்னாளில் எதுவும் தவறுகள் நடக்க்காதிருக்க புனை பெயரில் எழுதும் எண்ணத்தினை விட்டு விட்டு எனது நிஜ பெயரில் தொடர்கிறேன் ..

தங்கள் அறிவுரைக்கு நன்றி

நன்றி

அன்புடன்
ரமேஷ்

இனி தான் ஆரம்பம்

நேற்றைய சந்தையில் நிபிட்டி காலை துவக்கத்தில் இருந்தே தினசரி வர்த்தகர்களை குழப்பும் நோக்கில் துவக்கம் மேலும் ஆசியா சந்தைகளை தொடர்ந்து GAP DOWN இல் துவக்கம் , பின்னர் கீழே முக்கிய ஆதரவு நிலையான 4910 ஸ்டாப் லாஸ் எடுக்கப்பட்டு பின்னர் சந்தைகள் வேகமாக உயர்த்தப்பட்டன .

மத்திய இடைவேளையின் பொழுது ஜப்பானிய சந்தைகள் 1.5 % உயர்வில் இருந்தது முடிவின் பொழுது பிளாட் நிலைக்கு வந்தது . ஆசியா சந்தைகள் முடிவில் சிறிய அளவிலான சரிவினை கண்டது .

நமது சந்தைகள் காலை துவங்கிய GAP DOWN மற்றும் நேற்றைய முடிவு புள்ளிகளான 4963 நிலைகளை எட்டிய பின்னர் ஒரு சரிவு வந்து பின்னர் அங்கிருந்து சென்று சந்தைகள் உயர்வினை எட்ட தொடங்கின .

மதியம் சரிவில் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் சரிவில் இருந்து வந்தன . அதன் பின்னர் ஐரோப்பிய சந்தைகளும் உயர தொடங்கின சரிவில் இருந்து முழுவதும் மீண்டும் ஏற்றத்திற்கு வந்தன . உடன் நமது சந்தைகளும் உயர்வினை எட்ட தொடங்கி f& o வர்த்தக கடைசி தினம் ஆதலால் சந்தையில் பெருமளவு ஷாட் கவரிங் இருந்ததாலும் சந்தைகள் எதிர் நிலையான 4980 புள்ளிகளை தாண்டி சென்றன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகளை பொறுத்த வரை வழக்கம் போல உயர்வில் தடுமாட்டம் துவக்கத்தில் வலு இல்லாமல் சரிவில் துவங்கிய சந்தைகள் பின்னர் சரிவில் இருந்து மீண்டன . பின்னர் அதே நிலைகளில் 1 % சரிவில் முடிந்தன .

இன்றைய ஆசியா சந்தைகள் அமெரிக்கா சந்தைகளின் பிரதிபலிப்பானாக சிறிதளவு சரிவில் துவங்கி உள்ளன . ஜப்பானிய அரசின் முக்கிய அறிவிப்புகள் சந்தைகளுக்கு பாதகமாக இருப்பதாக தெரிகிறது ஆதலால் ஜப்பானிய சந்தை 2 % அளவிற்கு சரிவில் துவங்கி உள்ளன .

நமது சந்தைகளை பொறுத்த வரை F& o வர்த்தகம் முடிந்தன . இந்த மாதத்தில் முதல் நாள் அதுவும் நிப்டி 5000 புள்ளிகளுக்கு அருகாமையில் உள்ளது .ஆதலால் சந்தைகளை பொறுத்த வரை செல்லிங் அதிகரிக்கும் என்றே கருதுகிறேன் . மேலும் சந்தைகள் GAP DOWN ஆக இருக்கும் பட்சத்தில் உயர்வுகள் வரும் பொழுது செல்லிங் செல்லலாம் .

லாங் நிலைகளை வைத்துள்ளவர்கள் உயர்வில் அல்லது வெளியேறி விடுவது தான் சால சிறந்தது .

இன்றைய நிலைகள் --

4980 , 4965 , 4950 -------------- 4905

5012 , 5040 , 5088 --------------- 5100

குறிப்பு
நமது சந்தைகள் தற்சமயம் சில ஆபரேட்டர்கள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் கைவசம் சிக்கியுள்ளதாக கருதுகிறேன் . தினசரி வர்த்தகர்களை குழப்பம் செய்து ஸ்டாப் லாஸ் எடுத்து பின்னர் இலக்கை எட்டுவது போன்ற செயல்கள் அடிக்கடி சந்தையில் நடந்து வருகிறது .

கவனமாக இருங்கள்

நாளைய விடுமுறை பதிவுகளில் சில காரசார விவாதங்களுடன் சந்திக்கிறேன்

வியாழன், செப்டம்பர் 24, 2009

வணக்கம் .
நேற்றைய சந்தையில் நிபிட்டி நேற்று முன் தினம் போலவே மதியம் முடிந்தவரை சந்தையினை நிலை நிறுத்த பார்த்தனர் . ஆனால் முடியவில்லை பின்னர் சந்தைகள் வழக்கம் போல 2.30 மணிக்கு மேல் சரியா துவங்கின . பின்னர் கடகட வென சரிந்து குறைந்த பட்ச அளவாக 4951 புள்ளிகளை தொட்டு விட்டு பின்னர் சந்தைகள் மேல் எழும்பி வந்தன ..

நேற்றைய தினம் வந்த இந்த சரிவு யாரும் எதிர் பார்க்காதது . ஏன் என்றால் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் இன்னும் வாங்கும் படலத்திலேயே உள்ளனர் ஆதலால் சந்தைகள் இறங்க வாய்ப்புகள் குறைவாகத்தான் இருந்தன . ஆனால் அதையும் மீறிய இந்த சரிவினையும் நுட்ப காரணிகளையும் வைத்து பார்த்தால் நேற்று முன்தினம் சந்தைகள் அதிக பட்சமாக 5043 புள்ளிகள் வரை சென்றன .

அது 5012 நிலைகளுக்கு மேல் எடுக்கப்பட்ட ஸ்டாப் லாஸ் என்று கருதலாம் . நேற்றைய சந்தையில் அதே போல 4951 வரை வந்ததில் லாங் நிலைகளுக்கான ஸ்டாப் லாஸ் எடுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன் .

மேலும் நேற்றைய ஆசியா சந்தைகள் சற்று பிளாட் நிலைகளிலேயே வர்த்தகத்தினை முடித்துக்கொண்டன . மதியம் துவங்கிய ஐரோப்பிய சந்தைகளும் அதே போல பிளாட் நிலைகளிலேயே வர்த்தகத்தினை முடித்துக்கொண்டன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் சற்று குழப்பத்திலேயே துவங்கின . பின்னர் அங்கு வந்த லாபத்தினை உறுதி செய்தலால் சந்தைகள் மட்டுமல்ல கச்சா என்னை , மெட்டல் சம்பந்தமான கமாடிட்டி பொருட்களும் சரிந்தன ,சந்தைகளும் சிறிதளவு சரிந்தன .

முடிவில் அமெரிக்கா சந்தைகள் 0.75 % - 1% வரை சரிவில் முடிந்தன . அமெரிக்கா மற்றும் உலக சந்தைகள் அனைத்தும் உயர்வுகளில் தடுமாறுவதை போன ஒரு வாரகாலமாக அனைத்து பதிவில் குறிப்பிட்டே வந்துள்ளேன் .

இன்றைய ஆசியா சந்தைகள் டவ் இன் சரிவின் துவக்கத்தினை வைத்து ஆசியா சந்தைகள் முழுவதும் லாபத்தினை உறுதி செய்வார்கள் என்று எதிர் பார்க்கிறேன் , மேலும் இன்று F& O கடைசி வர்த்தக தினம் மேலும் இன்பிலேசன் அறிவிப்புகள் என சந்தைகள் மூவ்மென்ட் சற்று குறைவாக இருக்கும் என கருதுகிறேன் . மேலும் இன்ற சந்தையில் நிபிட்டி கடைசி ஆதரவு நிலையாக கருதும் 4910 நிலைகளை உடைந்தால் சந்தையின் பலவீனம் உறுதி செய்யப்படும் .( இந்த F & O முடிவிற்கு மட்டும் )

கவனமாக இருங்கள் சந்தைகள் இன்றைய வர்த்தகத்தில் 4980 நிலைகளை தாண்டாத பட்சத்தில் உறுதியாக சந்தைகளில் சரிவுகள் வரலாம் .

எதற்கும் தினசரி வர்த்தகர்கள் சும்மா இருங்கள் .. சந்தையை விட்டு விலகி

நன்றி

குறிப்பு : -

எப்பொழுதும் F & o வர்த்தகத்தின் கடைசி இரு தினங்கள் நுட்ப காரணி மற்றும் வரைபடங்களை வைத்தோ அல்லது பண்டமண்டல் செய்திகளை வைத்தோ சந்தைகளின் நகர்வுகள் இருக்காது . மேலும் நான் கொடுக்கும் ஸ்டாப் லாஸ் புள்ளிகள் நீங்கள் சந்தையில் இழப்பினை குறைக்க மற்றும் வெளியேற மட்டும் வர்த்தகத்திற்கு அல்ல .

மற்றும் இலக்குகளும் சில சமயம்
உறுதியாக கூறும் இலக்குகள் வந்தடையாமலும் போகலாம் .

எனது பதிவினை பார்த்து பயன் பெரும் மற்றும் எனது பதிவுகளுக்கு வாக்களித்து வரும்
TAMILSIH , ULAVU ,TAMIL MANAM , NEWS PAANAI , N TAMIL வாசகர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் . இந்த வலை தள நிவகிகளுக்கும் மனமார்ந்த நன்றி ..

மேலும் என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே @@@

அன்புடன்

ரமேஷ்

புதன், செப்டம்பர் 23, 2009

வணக்கம் எனதருமை சகாக்களே ,

நேற்றைய நமது சந்தைகள் எதிர் பார்த்ததை போல இரண்டு எதிர் நிலைகளை 5012 , 5040 , தாண்டி சென்று உயர்விலேயே அதே நிலைகளில் வர்த்தகம் முடிந்துள்ளன . இது நமது சந்தைகளின் போக்கில் சிறு வேக முனைப்பினை காட்டுவதாக எண்ணுகிறேன் .

நேற்றைய ஆசியா சந்தைகளை பொறுத்த வரை சந்தைகள் சற்று உயர்வில் தடுமாறியதாக உணர்கிறேன் . மேலும் ஜப்பானிய சந்தைகள் சில நாட்களுக்கு விடுமுறை , அதலால் ஆசியா சந்தைகள் நமது சந்தைகளையும் நமது சந்தைகள் ஆசியா சந்தைகளையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ....

மேலும் அமெரிக்கா சந்தைகளும் உயர்வுகளில் தடுமாட்டம் என்பது நாம் கடந்த வாரத்தில் இருந்தே பார்த்து வந்துள்ளோம் . அங்கும் இதே சூழலில் தான் வர்த்தகம் நடந்து வருகிறது . ஏதேனும் மாற்று உடனடி முதலீட்டு அல்லது சந்தைகளில் வர்த்தகம் அளவு குறைவாகவோ அல்லது தன்மை குறைந்தாலோ சந்தைகளில் ஒரு தெளிவான சூழ்நிலையை எதிர் பார்க்கலாம் .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் பெரிய அளவில் எதுவும் உயர்வுகளோ அல்லது சரிவுகளோ அன்றி ஒரு சிறிய உயர்வில் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன . இந்த செய்தியே நமது சந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான விஷயம் தான் ,

இன்றைய ஆசியா சந்தைகள் நெகடிவ் புள்ளிகளில் வர்த்தகம் துவங்கி உள்ளன . நமது சந்தைகளை பொறுத்த வரை நெகடிவ் துவக்கம் இருக்க வாய்ப்புகள் இல்லை மேலும் நாளை f&o வர்த்தகம் முடிவுக்கு வருவதாலும் நமது சந்தைகளில் ஷார்ட் பொசிசன் அதிகமாக இருப்பதாலும்( நான் முன்பு கூறியது போல ) சந்தைகள் கீழிறங்க விட மாட்டார்கள் .

எனது நுட்ப கணிப்பின் படி இன்றைய சந்தைகள் 5040 நிலைகளுக்கு மேல் உறுதியான துவக்கமாக இருப்பின் சந்தைகளில் சற்று ஷார்ட் கவரிங் வரலாம் . மேலும் சந்தைகள் 5088 என்ற நிலைகளை தாண்டும் பட்சத்தில் சந்தையில் ஷார்ட் கவரிங் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது .

அவ்வாறு நடக்கும் பட்சத்தில் சந்தைகள் 5120 , 5150 புள்ளிகள் வரை சென்றாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை இந்த செப் முடிவில் ...........

வர்த்தகத்திற்கு ---
buy nifty @ 5020 sl 4980 tgt 1- 5050 , 2 - 5085, 3 -5120 . (st sl )

நன்றி !!!

செவ்வாய், செப்டம்பர் 22, 2009

சென்செக்ஸ் இன் இடைவெளி வர்த்தகம்

வணக்கம் அன்பு நண்பர்களே ,

நான் பதிவு ஆரம்பத்தில் கூறியது போல காரசாரமான விவாதத்திற்கு முதல தலைப்பு பொருத்தமானது தான் என எண்ணுகிறேன் வழக்கம் போல உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் .

நாம் தினசரி வர்த்தகத்தில் சில கூற்றுக்களின் படியும் நுட்ப வரைபடங்களின் படி சில நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறோம் .

ஆனால் நான் தற்பொழுது கூறும் விஷயம் சற்று ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தலாம் .

அப்படி என்ன என்கிறீர்களா ??

பொதுவாக நுட்ப காரணிகளை பொறுத்த வரை சந்தையில் போக்கினை சீராக கொண்டு செல்லும் வல்லமை படைத்தது என்று கூறலாம் . ஆனால் இவற்றையெல்லாம் விவரிக்க முயன்றால் ஒரு வலை பதிவை முழுமையா தனியாக கூற வேண்டும் அவ்வளவு விளக்கங்கள் கூற வேண்டும் .

ஆகவே சந்தைக்கு புதிய நண்பர்களுக்கும் புரியும் விதத்தில் எளிமையா கூறுகிறேன் .சந்தைகளில் வர்த்தகத்தின் அளவீடுகளை நுட்ப காரணிகளை வைத்து இந்த நிலைகள் வரை செல்லலாம் . இது வரை சென்றால் இது வரை வரலாம் என்பது ஒரு முறை sup and res என கூறலாம் .

அதே அளவீடுகளை சற்று விவரித்து கண்டால் அங்கே இன்னும் நுணுக்கமாக கண்டு பிடிக்க படுவது தான் . நாம் சந்தைகளில் தற்சமயம் காணும் GAP UP and GAP DOWN என்பது உலக சந்தைகளின் போக்குக்கு ஏற்ற படி நமது சந்தைகள் துவங்கப்படுவது என்பது உங்கள் யாவருக்கும் தெரிந்ததே .

ஆனால் அவ்வாறு துவங்கப்படும் சந்தைகள் அந்த நிலைகளை கட்டாயம் அன்றோ அல்லது பின் நாளிலோ வர்த்தகத்தில் அந்த மீட்டு எடுக்க வேண்டும் . இது தான் GAP FILL UP எனப்படுவது ஆகும் .

உதாரணத்திற்கு --

நாம் தினமும் கவனிப்பது போல உலக சந்தைகள் GAP UP துவக்கம் ஆனதும் நமது சந்தைகளும் அதே போல துவங்கும் பின்னர் அந்த இழப்பினை அல்லது உயர்வினை அன்றோ அல்லது அந்த வாரத்திலோ ஈடு செய்யும் .

ஆனால் நான் கூறுவது நமது சந்தைகளில் சற்று அச்சத்தினை ஏற்ப்படுத்தும் வகையில் சில GAP UP சந்தைகளில் இன்னும் ஈடு செய்யாமல் உள்ளது .

அதை பற்றி விரிவாக பார்ப்போம் ...

நமது சந்தைகளில்
முதல் GAP UP 7400 - 7510 ,

இரண்டாவது
GAP UP 9700 - 10000 ,

மூன்றாவது GAP UP 11300 - 11550 ,

நான்காம் கேப் அப் 11800 - 12000 ,

ஐந்தாவது GAP UP 12200 - 13400 ,

ஆறாவது
GAP UP 13600 - 13850 ,

இது வரை நாம் கண்டது எல்லாம் புல் செய்யாத GAP UP தான் இனி இவற்றை பற்றி விளக்கமாக பார்ப்போம் .

முதல் - முதல் கேப் அப் ஆனது சென்செக்ஸ் 7400 - 7510 புள்ளிகளுக்கு இடையில் சந்தையில் கீழே கொடுக்கப்பட்ட பாதாள இலக்கின் காரணமாக பயந்து பங்குகளை விற்ற முதலீட்டாளர்கள் அங்கு அள்ளி குவித்தனர் அன்னியமுதலீட்டளர்கள் இங்கு தான் ஆரம்பம் .... ஒன்று

இரண்டாவது --- 9700 - 10000 புள்ளிகள் இது உலக சந்தைகளின் உயர்வில் ஒரு நாளில் சென்செக்ஸ் சந்தித்த உயர்வு இதுவும் புல் செய்ய படவில்லை

மூன்றாவது ---- மூன்றாவது கேப் அப் 11300 - 11550 இதுவும் உலக சந்தைகளின் உயர்வில் கேப் அப் இல் துவங்கியது . ஆனால் இன் நாளில் சந்தையில் ஒரு பிளாஷ் செய்யப்பட்டுள்ளது . எனக்கு எட்டியவரை அது நுட்ப வரை படத்தில் இல்லை .

நான்காவது --- 11800 - 12000 இதுவும் ஒரு உலக சந்தைகளின் உயர்வில் மற்றும் நமது சந்தைகளின் பாசிடிவ் செய்திகளால் உயர்வில் துவங்கிய சந்தைகள் இந்த கேப் அப் இம் புல் செய்யப்படவில்லை .

ஐந்தாவது --- 12200 - 13400 இந்த கேப் அப் தான் நமது சந்தைகள் இது வரை காணாத அதிக கேப் அப் கிட்டத்தட்ட ஒரே நாளில் 1200 புள்ளிகள வரை உயர்ந்து சந்தைகள் நிறுத்தப்பட்டு உலக அளவில் அரசியலில் ஒரு தொடர் வெற்றியை கண்ட UPA அரசின் வெற்றி செய்தியால் உண்டான கேப் அப் இது தான் பின்னாளில் நமது சந்தைகளில் பெரும் பிரச்சனையை ஏற்ப்படுத்த போகும் கேப்

ஆறாவது --- 13600 - 13850 இந்த கேப் அப் சந்தைகளில் இமாலய உயர்வின் பின்னர் சந்தைகள் 14981 என்ற கடின இலக்கினை தொட்டு விட்டு திரும்ப உடனடியாக உருவான சரிவின் கேப் அப் இதுவும் புல் செய்யப்படவில்லை

இந்த அதனை கேப் அப் களும் அனைத்து நுட்ப வல்லுனர்களும் அறிந்ததே ஆனால் நமது சந்தைகளை பொறுத்த வரை எப்படி நிஜ வாழ்வில் ஒரு பொய்யை திரும்ப சொன்னால் அது நிஜமாகி விடு கிறதோ அது போல சந்தைகளில் சந்தைகள் மேலே மேலே என உறமேற்றப்பட்டு சந்தைகள் உயர்த்தப்படுகிறது அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சந்தைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் ..

ஆதலால் நமது நுட்ப வல்லுனர்களும் நுட்ப வரைபடங்களின் படி இது வரை இது வரை என இலக்கினை மட்டும் நிர்ணயம் செய் கின்றனர் . அந்த அளவிற்கு அவர்களின் செயல் பாடுகள் சிறப்பாக உள்ளது .

இருந்தாலும் நண்பர்களே இது எல்லாம் தங்களுக்கு நினைவூட்டவே ..

கவனமாக இருங்கள் , விழிப்புடன் இருங்கள் ,

பங்குகளை சந்தைகளின் உச்சத்தில் வாங்கி வைக்காதீர்கள் உடன் காசாக்குங்கள் ,

கவனமிருக்கட்டும் ... சந்தைகள் ஆண்டு உயர்வில் உள்ளன ,,

நன்றி ..

குறிப்பு ----

நான் கூறியுள்ள இந்த கேப் அப் பதிவில் சில குறிப்பிடும் படியான கேப் அப் புள்ளிகளின் அளவுகள் சரிவர கணிக்க இயலாததால் from -- to என குறிப்பிட்டுள்ளேன் . மன்னிக்கவும் ..
நேற்றைய ஆசியா சந்தைகள் சற்று சரிவடைந்து வர்த்தகத்தினை முடித்துக்கொண்டன . ஆசியா சந்தைகள் 0.7 % சரிவுடன் முடிந்தன . நேற்றைய தினம் இந்திய பங்கு சந்தைகளுக்கு விடுமுறை .......

ஐரோப்பிய சந்தைகள் மதியம் துவக்கத்தில் இருந்தே சரிவில் வர்த்தகம் மேற்க்கொன்டன .ஆனால் பின்னர் அமெரிக்கா சந்தைகள் போக்கினை பின்பற்றி சரிவில் இருந்து சிறிதளவு மீண்டு வந்தன . பின்னர் 0.5 % அளவிற்கு சரிவில் முடிந்தது .

இன்றைய ஆசியா சந்தைகள் போக்கினை நமது சந்தைகள் பின் தொடரும் .

நன்றி !!!

தக தக தக தங்கம்


இன்றைய
பொருளாதார சிக்கல்கள் இவ்வளவு இருந்தும் வாழ்கையில் சிறு துளியாவது தங்கத்தை வாங்கி வீட்டில் வைக்க வேண்டும் என்று சாமானியன் முதல் பெரும் பணக்காரர்கள் வரை அனைவரின் எண்ணமும் அவரவர் வசதிக்கேற்ப உள்ளது .


இந்த பழக்கம் உலகம் முழுவதிலும் உள்ளது ?

அப்படி என்ன தான் உள்ளது தங்கத்தில் ஏன் இந்த விலை ஏற்றம் ??

தங்கம் முன்பு போல சுரங்கங்களில் கிடைப்பதில்லை . அல்லது அப்படியே கிடைத்தாலும் சுத்தம் செய்யப்பட்டு முளுத்தங்கமாக வெளி வரும் பொழுது அதன் சுத்தப்படுத்தும் செலவு அதிகரித்து வருகிறது . உற்பத்தி வகையில் செலவு அதிகரிக்கிறது . ஆதலால் பல இடங்களில் உற்ப்பத்தி நிருததப்படுகிறது .

மேலும் நமது நாட்டில் புழக்கத்தில் தங்கத்தின் அளவு குறைவாக உள்ளது என்பதால் அரசும் தங்கத்தினை கடந்த சில வருடங்களாக அதிக அளவில் இறக்குமதி செய்து வந்தது .

மக்களிடம் என்ன தான் பொருளாதார பிரச்சனைகள் இருந்தாலும் முதலீடு செய்வதில் இந்திய இன்னும் முன்னிலை வகிக்கிறது . ஆனால் அது தங்கத்தில் மட்டுமல்லாது பங்கு சந்தை சார்ந்த திட்டங்கள் மற்றும் சேமிப்பு திட்டங்கள் போன்ற வற்றிலும் அதிக அளவில் வர வேண்டும் என்பதால் அரசும் இவ்வாண்டு தங்கத்தின் இறக்குமதியில் வெகு அளவினை குறைத்துள்ளது .

அதாவது 85 % இறக்குமதியினை குறைத்துள்ளது . இவ்வளவு இறக்குமதியை அரசு குறைக்க காரணம் அரசிடம் தற்போதுள்ள பிரச்சனைகளுக்கு இடையே தொழில் வளர்ச்சி பாதிக்க கூடாது என்பதால் இந்த முடிவினை எடுத்துள்ளது குறிப்பிட தக்கது .

இருந்தாலும் மக்களின் தங்கம் வாங்கும் மோகம் குறைந்த பாடில்லை .

பொதுவாக இந்திய மக்களாகிய நாம் தங்கத்தை பண்டிகை காலங்கள் அல்லது குடும்ப விழாக்களின் பொழுது மட்டுமே வங்கி வருகிறோம் .

ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளோர் தங்களது பல முதலீடுகளில் தங்கத்தையே முதல் முதலீடாக கருதுகின்றனர் .காரணம் தங்கத்தினை உடனடியாக சந்தையில் காசாக்க முடியும் .

மேலும் சமீப காலமாக தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்க அதிகரித்துக்கொண்டே வருகிறது . நமது நாட்டிலும் இது நடைமுறையில் உள்ளது போல தான் கருதுகிறேன் . நம் மக்களும் வாங்குவதில் சளைத்தவர்களா என்ன !!!

உலக தங்க சந்தையான நியூ யார்க் கோல்ட் மார்க்கெட் இல் தங்கம் அவுன்ஸ் 1020 $ ஐ தாண்டி செல்லும் பட்சத்தில் தங்கத்தில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறேன் .

மேலும் இது உலகம் முழுவதிலும் திருவிழாக்காலம் என்பதால் உலகம் முழுவதும் தங்கம் வாங்குவது வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றே கருதுகிறேன் .

எனது கணிப்பின் படி இவ்வாண்டு இறுதிக்குள் தங்கம் நமது வர்த்தக கடைகளில் பவுன் 14500 - 15000 ரூபாயை எட்டும் என எதிர் பார்க்கிறேன் .

கடைசியாக ஒரு கொசுறு செய்தி -
**************************************
உலக அமைப்பான இண்டர்நேசனல் மானிடரி பண்டு என்ற அமைப்பு தன்னிடமுள்ள தங்கத்தில் இருந்து 403 குவிண்டால் அளவு விற்ப்பனை செய்து ஏழை நாடுகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளது .

ஆதலால் தங்கம் தகரமாகி விடாது . அவர்களிடம் இன்னும் 2 xxx குவிண்டால் அளவு தங்கம் கைவசம் உள்ளது அவசரப்பட்டு விலை இறங்கும் என கருத வேண்டாம் . வர்த்தக விலைப்படி நமது சந்தையில் சிறிய அளவில் விலை இறக்கம் வரலாம் . பயன் படுத்தி கொள்ளுங்கள் ..

நன்றி !!!

திங்கள், செப்டம்பர் 21, 2009

இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் .

எனதருமை இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

ஞாயிறு, செப்டம்பர் 20, 2009

வரும் வாரம் சந்தை - September 20, 2009

வணக்கம் நண்பர்களே ,

நமது சந்தைகள் கடந்த வாரத்தில் உச்ச புள்ளிகளும் நுட்ப காரணிகளில் முக்கிய எதிர் நிலையான 5000 புள்ளிகளை கடந்துள்ளது . மேலும் சந்தைகள் நல்லதொரு வலுவான நிலைகளில் வர்த்தகம் நடந்து வருவது குறிப்பிட தக்க விஷயம் . (சந்தைகளில் நடக்கும் வர்த்தகத்தின் அளவுகள் மற்றும் மதிப்பு அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது )

நமது சந்தைகள் வரும் வாரங்களில் திங்கள் விடுமுறை அடுத்து வரும் நாட்களில் முக்கிய ஆதரவு நிலைகளாக 4980 , 4955 இருக்கும் . எதிர் நிலைகளாக 5012 , 5040 புள்ளிகள் இருக்கலாம் . இவ்விரு எதிர் நிலைகள் தாண்டி சென்றால் சந்தைகள் 5088 ,5120 ,5150 , புள்ளிகள் வரை செல்ல வாய்ப்புகள் உள்ளன .

திங்கள் உலக சந்தைகளுக்கு வர்த்தக தினம் ஆகையால் நமது சந்தைகள் செவ்வாய் கிழமை ஒரு GAP UP எதிர் பார்க்கலாம் . மேலும் உலக சந்தைகள் அனைத்தும் நுட்ப வரைபடங்களின் படி பார்த்தால் " பாசிட்டிவ் " நிலைகளில் வர்த்தகம் தொடர்ந்து நடந்து வருகிறது .

நமது சந்தைகளில் சரிவுகள் அல்லது மிகப்பெரிய கிராஷ் எதுவும் உடனடியாக நடக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை . ஏனென்றால் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு பரஸ்பர நிதியகங்கள் அனைத்தும் இன்னும் வாங்கும் படலத்திலேயே உள்ளன . ( கடந்த வெள்ளி வரையிலும் )

மேலும் நமது சந்தைகள் கடந்த வர வர்த்தக தினங்களில் இரு தினங்கள் சந்தைகள் gap up இல் துவங்கி பின்னர் அந்த நிலைகள் வராமல் சந்தைகள் மேல் நோக்கி சென்றுள்ளது சற்று கவனம் கொள்ள வேண்டிய விஷயம் தான் . அந்த நிலைகள் 4880 - 4940 மற்றும் 4820 - 4861 ஆகும் .





மேலும் வரும் வாரம் பியுச்சர் வர்த்தகம் முடிவுக்கு வருவதால் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கங்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளது . மேலும் சந்தையில் சார்ட் பொசிசன் அதிக மாக இருப்பதாக் தெரிகிறது . மேலும் புட் ஆப்சன் பொசிசன் அளவுக்கு அதிகமாக சேர்ந்து கொண்டே வருகிறது .

இந்த சூலில் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் கட்டாயம் சந்தையை கீழிறங்க விட வாய்ப்புகள் இல்லை . ஆகவே தினசரி வர்த்தகர்கள் ஸ்டாப் லாஸ் வைத்து வணிகம் செய்யவும் .

ஒரு வேலை சந்தையில் பக்க வாட்டு நகர்வுகள் வந்தால் சந்தையில் இருந்து விலகி இருங்கள் . அதுவே நல்லது

வர்த்தகத்திற்கு ---

சந்தையில் லாங் நிலைகளில் உள்ளவர்கள் இறுதி ஸ்டாப் லாஸ் ஆக 4920 இம் சார்ட் நிலைகளில் உள்ளவர்கள் 5012 இம் வைத்து கொள்ளலாம்

நன்றி !!!

சனி, செப்டம்பர் 19, 2009

வெள்ளியன்று அமெரிக்க சந்தைகளின் முடிவு

வணக்கம் நண்பர்களே !

வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் சற்று மேல் நோக்கி சாதகமாகவே முடிந்துள்ளன . மேலும் அமெரிக்க சந்தையின் தற்போதைய நிலையில் இருந்து பார்த்தால் சந்தைகள் சற்று இன்னும் மேல் எழும்பி செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளன . ( பார்க்க நுட்ப வரை படம் )

அதே போக்கினை ஆசியா சந்தைகளும் கடைபிடிக்கலாம் . அமெரிக்க சந்தைகளின் டவ் இன் கடந்த வார வர்த்தக நுட்ப வரை படங்களை வைத்து பார்க்கும் பொழுது சந்தைகள் அதிக பட்சம் 9855 புள்ளிகள் வரை செல்ல வாய்ப்புகள் உள்ளது . மேலும் முக்கிய தடை நிலையாக 9912 மற்றும் 10000 உள்ளது .

வரும் வாரம் சந்தைகள்
--------------------------------
ஆகவே அமெரிக்க சந்தைகள் தற்போதைய சூழலில் 9912 புள்ளிகளை தாண்டி செல்லும் பட்சத்தில் சந்தைகள் அதற்க்கு அடுத்த தடை நிலையான 10000 புள்ளிகளை நெருங்கினாலும் ஆச்சர்யமில்லை . மேலும் இறுதி தடை நிலையான 10000 புள்ளிகளை தாண்டினால் அடுத்த இலக்காக சந்தைகள் 10280 புள்ளிகள் வரை செல்ல வாய்ப்புகள் உள்ளன

அதே எதிர் திசையில் சற்று கீழிறங்கி வரவும் வாய்ப்புகள் உள்ளன . ஆனால் வாய்ப்புகள் சற்று குறைவாக உள்ளன . இருந்தாலும் சந்தைகள் அதரவு நிலைகளாக 9658 மற்றும் 9495 இருக்கும் . அந்த நிலைகள் வந்தால் சந்தைகள் சற்று தெளிவடையும் என எதிர் பார்க்கிறேன் .

நன்றி

நிபிட்டி எட்டியது ஐந்தாயிரத்தை !!

சென்ற இரு வாரங்களாக சந்தைகள் தொடர்ச்சியாக ஏறுமுகமாகவே இருந்து வந்துள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் . மேலும் தற்போதய சந்தையின் உயர்வுகள் எந்த விதத்திலும் முதலீட்டளர்களுக்கு மகிழ்ச்சியை தராத ஒரு உயர்வு தான் . ஏன் என்றால் தற்பொழுது சந்தைகள் ஐந்தாயிரம் என்ற இலக்கினை தொட்டு விட்டு வந்துள்ளது .

மேலும் சந்தைகளின் முந்தய எழுச்சியின் பொழுது பங்குகளின் விலைகள் அபாரமானதாக இருந்தது முதலீட்டாளர்கள் அனைவரும் அறிந்ததே ஆனால் தற்பொழுதைய உயர்வில் பல பங்குகளின் விலைகள் அந்த உயர்வில் பாதி அளவினை கூட எட்ட வில்லை .

மேலும் சந்தைகளில் வங்கி துறை மற்றும் கட்டுமான துறை பங்குகளின் உயர்வால் சந்தைகளில் பல துறை வாரியான பங்குகளின் விலைகள் ஏற்றம் பாதிக்கப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன் .

நன்றி .
வணக்கம் நண்பர்களே !

எனது நண்பர்களின் வேண்டுகோளின் படி புதிய வலைப்பதிவினை இன்று துவங்கி உள்ளேன் என்பதினை தெரிவித்து கொள்கிறேன் .

மேலும் இனி சந்தைகள் பற்றி சில காரசார மான உரையாடல்களுடன் இந்த பதிவினை எழுத உள்ளேன் ,

என்றும் உங்கள் ஆதரவுடன்

நன்றி

ரமேஷ்