வியாழன், நவம்பர் 12, 2009

வணக்கம் நண்பர்களே ,

உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பதிவினை சில தினங்களுக்கு மட்டும் நிறுத்தி உள்ளேன் . மன்னிக்கவும்

நான் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல ஆப்சனில் வணிகம் செய்யுங்கள்

நன்றி

அன்புடன்

ரமேஷ்

புதன், நவம்பர் 11, 2009

வணக்கம் நண்பர்களே ,

நேற்றைய நமதுசந்தைகள் சும்மா பேருக்கு உலக வரிசையில் செல்வதை கட்டிக் கொண்டுள்ளன . ஆசியா சந்தைகள் கூட துவக்கத்தில் இருந்த ஒரு உயர்வுகள் நேரம் செல்ல செல்ல ஒன்றும் பெரியதாக தாண்டி செல்லவில்லை .

சரி ஆசியா சந்தைகள் தான் அப்படி என்றால் ஐரோப்பிய சந்தைக்ள துவக்கமாவது சரியான ஒரு நிலைப்பாட்டில் துவங்கலாம் என எதிர் பார்ப்பு இருந்தது ஆனால் ஐரோப்பிய சந்தைகளும் சற்று பிளாட் நிலைகளில் துவங்கி நமது சந்தைகளின் போக்கினை கட்டுப்படுத்தின .

பின்னர் நமது சந்தைகள் முடிவில் 16 புள்ளிகளை இழந்து முடிந்தன . நமது சந்தைகள் மற்றும் ஆசியா ஐரோப்பிய சந்தைகள் என அனைத்து சந்தைகளும் சற்று நிதானிப்பது அமெரிக்கா சந்தைகளின் போக்கினை கண்டு தான் ....

போன வாரம் டவ் ஜோன்ஸ் 10000 புள்ளிகளுக்கு மேல் செல்ல இயலவில்லை . மேலும் ஒரு நிலைப்ப்பட்டுக்கு மேல் முடிவுகளும் சந்தைகளில் இல்லாமல் போனதே காரணம் ஆகும் .

மேலும் நேற்றைய அமெரிக்கா சந்தைகள் 10000 புள்ளிகளுக்கு மேலக் ஒரு க்ளோசிங் வந்துள்ளது . மேலும் வரும் நாட்களில் ஒரு இரு வர்த்தக தினங்கள் இந்தளவுக்கு க்ளோசிங் தருமா என்று எல்லா சந்தைகளும் எதிர் பார்க்கின்றன .

இருந்தாலும் வாய்ப்புகள் சற்று குறைவு தான் .. நேற்றைய அமெரிக்கா சந்தைகள் உயர்வுகளில் துவக்கம் பின்னர் சிறிது சிறிதாக சரிந்து வர ஆரம்பித்தன . முடிவில் அமெரிக்கா சந்தைகள் பிளாட் நிலைகளில் முடிந்தன .

இன்றைய ஆசியா சந்தைகள் சற்று துவக்கம் சிறிய அளவிலான உயர்வுகளில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் அதையே பின்பற்றும் இன்றைய வர்த்தகத்தில் ஒரு பெரிய அளவிலான நகர்வுகள் சற்று கடினம் தான் . இன்னும் இரு தினங்களுக்கு ஒவ்வொரு உயர்விலும் புட் ஆப்சன் தேர்வு செய்யவும் பெரிய சரிவுகளில் கால் ஆப்சனை தேர்வு செய்யலாம் இது தற்போதைய சந்தைக்கு நலம் ...

நன்றி !!


அன்புடன்

ரமேஷ்

குறிப்பு :-

உடல் நிலை சரியில்லாததால் ஆசியா மாற்று அமெரிக்கா சந்தைகள் பற்றி விரிவாக எழுத இயலவில்லை

மன்னிக்கவும் ............

செவ்வாய், நவம்பர் 10, 2009

வணக்கம் நண்பர்களே !

நேற்றைய சந்தைகளை யாரும் இவ்வளவு உயரும் என எதிர் பார்க்க வில்லை . காரணமும் எதுவும் இல்லை கேட்டால் உலக வரிசை என்று பதில் நுட்ப வல்லுனர்களும் கூட குழம்பிபோய் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் .நேற்றைய நமது சந்தைகள் சற்று ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைக்ள போக்கிலேயே சென்று பின்னர் அந்த சந்தைகளை விட அதிக உயர்வினை அடைந்தது குறிப்பிடத்தக்கது .

நமது சந்தைகள் இடைவெளியின் பொழுது ஆசியா சந்தைகள் கிட்டத்தட்ட 1 % - 1.5 % வரையிலான உயர்வுகளில் முடிந்தன . பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் 1.25 % உயர்வுகளில் வர்த்தகத்தினை துவங்கின ஆனால் ஐரோப்பிய சந்தைகள் சற்று உறுதியான நிலைப்பாட்டிலேயே தங்கள் வர்த்தகத்தினை தொடர்ந்தன ,

நமது சந்தைகளும் அதைவிட ஒரு படி மேலே சென்று (அதிக ஷார்ட் கவரிங் ஆகவும் இருக்கலாம் ) உயர்வினை தாண்டி சென்று நாளின் உயர்வுகளுக்கு அருகாமையில் முடிந்தன . முடிவில் நமது சந்தைகள் 102.25 புள்ளிகள் உயர்ந்து 4898.40 என்ற நிலைகளில் முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று அதிக உயர்வுகளை கொண்டு வர்த்தகத்தினை தொடங்கின . பின்னர் சந்தைகளில் அதிக அனேக வாங்கும் படலம் மற்றும் ஷாட் கவரிங் இருந்ததால் சந்தைகள் 10226 என்ற ஆண்டு உயர்வினை எட்டின .என்பது குறிப்பிட தக்கது . மேலும் அமெரிக்கா சந்தைகள் முடிவில் 204 புள்ளிகள் உயர்ந்து முடிந்தன .

ஐரோப்பிய சந்தைகளும் முடிவில் 2 % - 3 % வரை உயர்வடைந்து முடிந்தது குறிப்பிட தக்கது .

இன்றைய ஆசியா சந்தைகள் மேலும் ஒரு உயர்வினில் தங்களது வர்த்தகத்தினை துவங்கி அமெரிக்கா சந்தைகளை பின் தொடர்வதை காட்டியுள்ளன . மேலும் சந்தைகளில் நேற்றும் மற்றும் இன்றைய உயர்வுகளும் சற்று GAP UP ஆக உள்ள சூழலில் ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகள் வர்த்தகம் ஆகி வருவது நினைவிருக்கட்டும் ..

நமது சந்தைகள் சற்று ஆசியா அமெரிக்கா சந்தைகளின் போக்கினை பிரதிபலித்து துவங்கலாம் . அனேகமாக ஒரு சிறிய அளவிலான GAP UP இருக்கலாம் . கிட்டத்தட்ட 50 புள்ளிகள் வரை GAP UP வரலாம் . ஆனால் சந்தைகள் தொடர்ச்சியாக அந்த சந்தைகளை சாராமல் செல்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன . என்பது என கருத்து .....

மேலும் இருவர்தாக் தினங்களில் இவ்வளவு உயர்வுகள் சாத்தியமல்ல .. கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் தினசரி வர்த்தகர்கள் ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் உபயோக படுத்தவும் . குறுகிய கால முதலீட்ட்டளர்கள் லாபத்தினை உறுதி செய்யுங்கள் . முதலீட்டாளர்கள் மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்கள் பொறுமை தேவை ......

டெலிகாம் பங்குகள் தவிர்க்கவும் . ( சரிவுகள் தொடரும் )
வங்கி பங்குகள் தவிர்க்கவும் .. ( சரியான விலை உயர்வுகளில் உள்ளன )


நன்றி !!


குறிப்பு :-

கடந்த சில நாட்களாக அவசர வேலைகள் காரணமாக நிப்டி நிலைகள் வரையறுக்க நேரம் போதவில்லை . திங்களில் இருந்து சரியா தர முயற்சிக்கிறேன் ...

மீண்டும் நன்றி !!!

ரமேஷ்

திங்கள், நவம்பர் 09, 2009

வணக்கம் நண்பர்களே ,

தவிர்க்க முடியாத காரனங்களால் சனிக்கிழமை மற்றும் விடுமுறை பதிவினை பூர்த்தி செய்ய இயலவில்லை ..

திங்கள் இன்று .............

வெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்கா சந்தைகள் சற்று பிளாட் நிலைகளிலேயே முடிவடைந்தன . மேலும் ஐரோப்பிய சந்தைகளும் ஒன்றும் பெரிதாக ஒரு உயர்வுகள் இல்லாமல் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன .

மேலும் போன வார வர்த்தகத்தினை வைத்து பார்த்தால் அனைத்து சந்தைகளும் சற்று உயர்வுகளில் தடுமாறுவதும் பின்னர் சிறிய அளவிலான சரிவுகள் என்றே உள்ளன இது ஒரு வகையில் சந்தைகளில் வரும் நாட்களில் ஒரு பெரிய சரிவினை கொண்டு வரலாம் என்று கருதுகிறேன்

மேலும் வெள்ளியன்று நமது சந்தைகள் சற்று உயர்ந்திருப்பது சற்று அபாயத்தினை கட்டுவதாக உணருகிறேன் .

இன்றைய ஆசியா சந்தைகள் மாற்றுஅமெரிக்கா பியுச்சர் சந்தைகள் . ஐரோப்பிய பியுச்சர் சந்தைகள் என எல்லா சந்தைகளும் சற்று உயர்வுகளில் வர்த்தகம் ஆகி வருகின்றன என்பது குறிப்பிட தகுந்த விஷயம் ..

இன்றைய நமது சந்தைகள் ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் போக்கினை பின்பற்றும் என உறுதியாக சொல்ல இயலாது . தினசரி வணிகர்கள் ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் உபயோகபடுத்தவும் . உயர்வுகளில் லாங் செல்வது நலம் அல்ல


நன்றி

ரமேஷ்

வெள்ளி, நவம்பர் 06, 2009

வணக்கம் நண்பர்களே ,
நேற்றைய சந்தைகள் வழக்கம் போலவே ஒரு பெரிய ஆச்சர்யதினை நமக்கு தந்துள்ளது குறிப்பிடத்தக்கது . மேலும் நேற்றைய சந்தைகள் துவக்கம் சற்று உலக சந்தைகளின் போக்கினை ஒட்டி சற்று சரிவுகள் அதிகமாகவே துவங்கின பின்னர் ஆசியா சந்தைகளில் ஏற்ப்பட்ட மீட்சி நமது சந்தைகளில் மீட்சியினை கொண்டு வந்தன ..

மேலும் நேற்றைய உள் துறை அமைச்சர் மற்றும் நிதி மந்திரி இருவரும் கூறிய நேரடி வரி வசூல் முறை மாற்றம் மற்றும் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்க உள்ள முறையில் 10 % பங்குகள் மக்களிடம் என்று ஒரு செய்தி வந்தது . இது சந்தைகளுக்கு சற்று ஒரு பெரிய உயர்வினையும் மற்றும் ஒரு எதிர் பாரத ஷார்ட் கவரிங் ஐயும் கொண்டு வந்தது .

நமது சந்தைகள் உலக சந்தைகள் ஏற்றத்தில் பங்கு கொண்டு சரிவில் விலகி நிர்ப்பது சற்று ஒரு பெரிய சிக்கலாகும் . மேலும் சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் எந்த ஒரு நுட்ப காரணிகளையும் சரிவர செயல்படவிடாமல் எல்லா நிலைகளையும் உடைத்து தாண்டி சென்றும் தங்கள் காரியங்களை சாதித்து வருவதாக கருதுகிறேன் ..

நேற்றைய நமது சந்தைகள் முடிவில் 54 .75 புள்ளிகள் உயந்து 4765.55 நிலைகளில் முடிந்தன ..

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே உயர்வினை தொடர்ந்து தாண்டி சென்றே வர்த்தகம் நடை பெற்றன . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 2 % உயர்வில் முடிந்தன .

இன்றைய ஆசியா சந்தைகள் மற்றும் நமது சந்தைகள் பற்றி குறிப்பிட முடியாத சூழ்நிலை நாளைய பதிவில் ஒரு காரசாரமான விவாதத்துடன் சந்திக்கலாம்


சநதையின் போக்கில் செல்லுங்கள்

நன்றி

வியாழன், நவம்பர் 05, 2009

காலை வணக்கம் வணக்கம் ,

நேற்றைய சந்தைகளை பார்த்தும் முதலீட்டாளர்களை அச்சர்யாப்படுதினாலும் தினசரி வர்த்தகர்கள் ஆடிப்போய் இருப்பார்கள் போலும் சந்தைகளில் இந்த திடீர் சரிவு மற்றும் உயர்வுகள் யாரும் எதிர் பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லை .

நேற்றைய சந்தைகள் துவக்கம் சுமார் 50 புள்ளிகள் வரை உயர்வில் துவங்கிய சந்தைகள் பின்னர் சிறிதும் சரிவுகள் இன்றி உயர்வினை தாண்டி தாண்டி செல்ல ஆரம்பித்ததும் ஒன்றும் புரியாததாகவே இருந்திருக்கும் என்று கருதுகிறேன் .மேலும் ஆசியா சந்தைகள் கூட பெரிய அளவில் உயர்வுகள் இல்லை . 2% மட்டுமே உயர்வில் முடிந்தன ,

நமது சந்தைகள் அதையும் தாண்டி 3.5 % வரை உயர்வடைந்து முடிந்தன . நேற்றைய ஐரோப்பிய சந்தைகள் துவக்கம் சற்று 1% அளவிற்கு சரிவிலேயே துவங்கின பின்னர் சந்தைகளில் மீட்சி என்பதே நமது சந்தைகள் முடியும் வரை இல்லை .

முடிவில் நமது சந்தைகள் 4710.85 (+146.90 ) என்ற பெரிய அளவிலான உயர்வுகளில் முடிந்தன . அதுவும் குறிப்பிட்டு சொல்லப்போனால் நேற்றைய சரிவுகள் அப்படியே மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று உயர்வுகளில் துவங்கின பின்னர் அங்கு வெளியிடப்பட்ட ஐ \எஸ் எம் அறிவிப்புகள் நன்றாக இருந்த போதிலும் சந்தைகளில் சற்று செல்லிங் அதிகரித்ததன் காரணமாக சந்தைகள் மேலும் சரியதுவங்கின உயர்வில் இருந்து .......

முடிவில் அமெரிக்கா சந்தைகள் சற்று சிறிய உயர்வுகளில் ( + 30 ) முடிந்தன . அதனை ஒட்டிய படியே சென்ற ஐரோப்பிய சந்தைகள் சற்று அதிக படியான உயர்வுகளுக்கு சென்றன .

இன்றைய ஆசியா சந்தைகள் சற்று உயர்வுகளின் வீழ்ச்சியாக சற்று சரிவில் துவங்கியுள்ளன . ஆசியா சந்தைகள் 1 % - 1.5 % வரை சரிவுகளில் துவங்கி உள்னன . நமது சந்தைகள் துவக்கம் மற்றும் வர்த்தகத்தில் அதே போக்கினை கடை பிடிக்கும் என்றே கருதுகிறேன் .

நேற்றைய உயர்வுகள் சற்று இன்று எந்த விதத்திலும் உயர்வுகளை மேலும் தர வாய்ப்புகள் இல்லை என்றே கருதுகிறேன் . இன்றைய சந்தைகள் அதிகபட்சமாக மேலே செல்ல வாய்ப்புகள் இல்லை

கவனமாக வர்த்தகம் செய்யுங்கள்

நிப்டி நிலைகள் : ----

அதரவு ---- 4710 , 4685 , 4650 ....

எதிர்ப்பு ---- 4750 ,4770 , 4805 ...

நன்றி !!!

புதன், நவம்பர் 04, 2009

வணக்கம் நண்பர்களே ,

நேற்றைய நமது சந்தைகள் எதிர் பார்த்து போல துவக்கம் சற்று நன்றாகவே இருந்தது . துவக்கத்தில் சந்தைகள் 50 புள்ளிகள் வரை gap up இல் துவங்கின . பின்னர் திடீரென சந்தைகள் சரியஆரம்பித்து . சரிவு நிலைகளுக்கு சென்றது . மேலும் நேற்றைய ஆசியா சந்தைகள் கூட சற்று அதிக சரிவுகளின்றி சரிவிலிருந்து மீளும் விதமாக தன்வர்த்தகம் நடந்தது .

ஆனால் ஆசியா சந்தைகளில் வர்த்தகத்தினை புறக்கணிக்கும் விதமாக நமது சந்தைகள் சற்று வர்த்தகம் நடந்தன என்றே கூறலாம் . ஆசியா சந்தைகள் சற்று உயர்வுகளில் இருந்த பொழுதும் நமது சந்தைகள் சற்று சரிவிலேயே இருந்தது பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் பிளாட் வர்த்தக துவக்கம் இருந்த போதிலும் நமது சந்தைகளில் சரிவுகள் நிற்க வில்லை .

நேற்றைய வர்த்தகத்தில் நமது சந்தைகள் அதிக பட்ச இழப்பாக 147.90 புள்ளிகளை இழந்து 4563.30 புள்ளிகளில் முடிவடைந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கமே சற்று அதிக சரிவுகளுடன் கூடியதாக இருந்தன பின்னர் சந்தைகள் சற்று படிப்படியாக இழப்பில் இருந்து மீண்டு உயர்வினை காண ஆரம்பித்தன . பின்னர் முடிவில் அமெரிக்கா சந்தைகள் சிறிதளவு சரிவில் முடிந்தன .

இன்றைய ஆசியா சந்தைகள் துவக்கம் சற்று அதிக புள்ளிகள் உயர்வில் துவங்கயுள்ளன . ஜப்பானிய சந்தைகள் தவிர பிற சந்தைகள் ஓரளவிற்கு நல ஒரு உயர்வில் வர்த்தகம் ஆகி வருகிறது .

இன்றைய நமது சந்தைகள் ஆசியா சந்தைகள் போக்கினை கடை பிடிக்கும் என்று கருதுகிறேன் . நமதுசந்தைகள் துவக்கம் 1 % - 1.5 % வரை உயர்வில் துவங்கலாம் . மேலும் நேற்று பெரும் சரிவடைந்த பங்குகள் இன்றைய தினம் சற்று அதிக ஏற்றம் காணலாம் .


நிப்டி நிலைகள் :--

ஆதரவு --- 4650 , 4610 , 4575 .....

எதிர்ப்பு ---- 4685 , 4710 , 4750 .....

குழப்பத்தில் நான் ----

காலை வணக்கம் ....

என்ன தான் சந்தைகள் ஆட்டம் இருந்தாலும் நமது சந்தைகளுக்கு இது சற்று அதிகம் என்று கருதலாமா அல்லது நமக்கு வல்லமை போதவில்லை என என்னலாமா , அல்லது அன்னியமுதலீட்டளர்கள் சதியா ( கிட்டத்தட்ட அதுவாக தான் ) என எனக்கு புரியவில்லை நண்பர்களே ...

விளக்கமாக : -----

இருவாரங்களுக்கு முந்தய பதிவுகளில் நான் குறிப்பிட்டதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் , உலக சந்தைகள் உயர்வு நமது சந்தைகள் சரிவு . உலக சந்தைகள் சரிவு நமது சந்தைகள் உயர்வு . இது போதாதென்று இடையிடையே சந்தைகளுக்கு விடுமுறை ...

இது தான் இன்றைய சந்தையின் நிலைமை காரணம் என்ன .

நமது
சந்தைகளில் உதாரணமாக நேற்றைய தினம் நடந்ததும் மற்றும் எதிர் பார்த்ததும் என்ன ?

நடந்தது உலக சந்தைகள் வெள்ளியன்று மற்றும் திங்கள் சரிவுகளை மீட்ட்டுக்கும் விதமாக துவக்கம் நமது சந்தைகள் அதே போல உயர்வுகளில் துவக்கம் . நாம் எதிர் பார்த்தது சந்தைகள் உயர்வில் செல்லும் என்று ஆனால் நடந்தது நமது சந்தைகள் சற்று அதிகப்படியான சரிவுகளை சந்தித்தன .

கடந்த வாரம் முதலே நானும் எவ்வளவோ நுட்ப அளவிகளை வைத்து தான் . கணக்கிட்டு நிப்டி நிலைகளை வரையருத்தேன் . ஆனால் அந்த நிலைகளில் சந்தைகள் தடுமாட்டம் கூட இல்லாமல் சாதக பாதக செய்திகள் எதுவுமின்றி செல்வது சற்று குழப்பத்தினை ஏற்ப்படுத்தி உள்ளது ,

நான் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல சந்தைகள்சற்று இன்னும் வீரியமாக இறங்கினால் சந்தைகளில் பழைய இடைவெளிகள் கூட புல் செய்யப்படும் என கருதுகிறேன் ..

அதற்காக தான் தினசரி வணிகர்கள் ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் உள்ளே நுழைய வேண்டாம் என கூறி வந்தேன் . மேலும் சில விசயங்களை வைத்து பார்த்தோ மானால் நமது சந்தைகளின் பழைய மார்ச் லோ வின் எல்லை கோட்டினை சற்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள்

நன்றி வணக்கத்துடன் !

ரமேஷ்

செவ்வாய், நவம்பர் 03, 2009

என்ன நண்பர்களே சில நாட்கள் விடுமுறைக்கு பின்னர் சந்தைகள் துவக்கம் அதுவும் உலக சந்தைகள் அனைத்தும் சரியான சரிவினை கண்டுள்ளன . கவலைப்பட வேண்டாம் ..

உலக சந்தைகள் சற்று சரிவில் இருந்து மீண்டுள்ளன அதனால் நமது சந்தைகள் சற்று அதிகப்படியான சரிவுகள் வராது ..

நேற்றைய தினம் நமது சந்தைகள் சற்று விடுமுறை .. ஆதலால் பிழைத்துக் கொண்டோம் என்றே கூறலாம் . நேற்றைய ஆசியா சந்தைகள் வெள்ளியன்று அமெரிக்கா சந்தைகளில் ஏற்ப்பட்ட சரிவுகளை கணக்கிட்டு அதிக சரிவுகளில் வர்த்தகத்தினை துவங்கின . பின்னர் ஆசிய சந்தைகள் சற்று மதியத்திற்கு மேலே சரிவில் இருந்து மீள துவங்கின . ஆனால் ஜப்பானிய நாணயமான YEN சற்று வீக்கமானத்தை தொடர்ந்து ஜப்பானிய சந்தை 2 % சரிவிலேயே முடிந்தது .

அதன் பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் கூட முந்தய (வெள்ளி ) தினமே சற்று அதிக சரிவுகளை கண்டதால் சற்று உயர்வுகளில் வர்த்தகம் ஆகின . ஐரோப்பிய சந்தைகளை பொறுத்த வரை 0.5 % வரை உயர்வுகளில் வர்த்தகம் ஆகி வந்தது . அப்பொழுது டவ் பியுச்சர் சந்தைகள் 60 புள்ளிகள் வரை உயர்வில் வர்த்தகம் ஆகி வந்தது .

அமெரிக்கா சந்தைகள் நேற்றைய துவக்கம் சற்று உயர்விலேயே இருந்தது .சந்தை துவங்கிய சில மணி துளிகளில் அமெரிக்காவின் ஐ எஸ் எம் அறிவிப்புகள் சற்று நன்றாக வந்ததை அடுத்து சந்தைகள் உயர்வுகளை தாண்டி செல்ல ஆரம்பித்தன . முடிவுகளில் அமெரிக்கா சந்தைகள் அனைத்து வர்த்தகர்களையும் குழப்பம் செய்து சரிவினை காண ஆரம்பித்தன பின்னர் முடிவில் அமெரிக்கா சந்தைகள் 0.75 % உயர்வில் முடிந்தன .

இன்றைய ஆசியா சந்தைகள் நேற்றைய அமெரிக்கா சந்தைகள் பெரிய மாற்றமின்றி முடிந்ததால் எதற்கு பிரச்சனை என்பது போல சில புள்ளிகளை இழந்து வர்த்தகத்தினை துவங்கி உள்ளன . ஜப்பானிய சந்தைகள் இன்று விடுமுறை . ஆதலால் ஆசியா சந்தைகள் நமது சந்தைகள் மற்றும் ஐரோப்பிய சந்தைகளை எதிர் நோக்கி உள்ளன என்றே கூறலாம் ....

நமது சந்தைகள் இன்று சிறிய சரிவில் தான் துவங்கும் (உலக அரங்கத்தில் சரியா உலக சந்தைகளை பின்பற்றி வர்த்தகம் நடக்கிறது என்பது போல கபட நாடகம் ) ஆனால் அதிக சரிவுகள் இருக்க வாய்ப்புகள் இல்ல .. மேலும் இன்றும் மற்றும் நாளையும் ஆசியா , அமெரிக்கா சந்தைகள் உய்ரவிகளுக்கு வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறேன் ...


இன்றைய ஐரோப்பிய சந்தைகள் துவக்கத்திற்கு பின்னர் சந்தைகள் தெளிவடையும் என்று எதிர் பார்க்கிறேன் .

நிப்டி நிலைகள் : ----

ஆதரவு ----- 4682 , 4650 ,4610 .....

எதிர்ப்பு -----4750 , 4770 , 4805 ....

ஞாயிறு, நவம்பர் 01, 2009

விடுமுறை பதிவு -1.11.09

வணக்கம் நண்பர்களே ,

என்ன நண்பர்களே இந்தவார விடுமுறைக்கு ஆயத்தமாகி விட்டீர்களா ...

ஒரு மனிதன தனது இயந்திர வாழ்வில் இன்றைக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டு பின்னர் அந்த இயந்திர வாழ்க்கையின் பிடியில் இருந்து விடுபடும் இந்த விடுமுறை நாட்களை சந்தோசமாக களியுங்கள் ..

அதற்க்கான சில யோசனைகளை உங்கள் முன் வைக்கிறேன் .....
1. விடுமுறை நாட்களில் இயல்பாக இருங்கள் , டென்சன் வேண்டாம் ......

௨ . உங்கள் வாழ்க்கை துணையுடன் இல்லறம் தவிர்த்து இயல்பாக சில விசயங்களை பேசுங்கள் ..

3. முடிந்தவரை உங்கள் துணைக்கு பிடிக்காத விசயங்களை தவிருங்கள் ..

4. குழந்தைகளுடன் சிறிது பேசி மகிழுங்கள் ( மற்றநாட்களை போல !!!! )

5. நடப்பு படிப்பினை விட்டு பியுச்சர் (படிப்பு அல்லது குறிக்கோள்கள் சம்பந்தமாக குழந்தைகளின் போக்கினை தூண்டி விடுங்கள் ..

6. குழைந்தைகளுக்கு சில கொள்கைகளை எதாவது பேசி உருவாக்க செய்யுங்கள் ..

7. குழந்தைகள் மற்றும் உங்கள் துணையுடன் வெளியில் சென்று உணவு அருந்துங்கள் ( மறக்காமல் பர்ஸ் எடுத்து செல்லுங்கள் அல்லது கிரெடிட் கார்டு )

8. உங்கள் அண்டை வீட்டாருடன் எதாவது பிரச்சனைகள் இருந்தால் அதனை சரி செய்ய முயலுங்கள் .
அலுவல் நாட்களில் உள்ள டென்சன் காரணமாக வார்த்தைகள் கண்டபடி விழும் விடுமுறை நாட்களில் அது போல வார்த்தைகள் விழாது .

9. உறவினர் வீடுகளுக்கு செல்லுங்கள் பிரச்சனை செய்ய அல்ல . சென்று வந்தால் மனது லேசாகும் ...

10. முடிந்தால் உங்கள் துணைக்கு வீடு வேளைகளில் உதவுங்கள் . வீட்டை அலங்கரிக்க சில யோசனைகளை வழங்குங்கள் ... அது உங்கள் உறவினை மேலும் வலுப்படுத்தும் ..

11. இவ்வளவு செய்து முக்கியமாக செய்ய வேண்டியது அடுத்த வேலை நாட்களுக்கான பிளான் அனைத்தினையும் பட்டியலிடுங்கள் ...


என்ன நணபர்களே இது நான் கூறும் ஒரு உபயோக பதிவு செயல் படுத்தி உங்கள் உறவுகளை வளருங்கள் ..

முடிந்தால் எனக்கு ஒரு நன்றி ......................

அன்புடன் ...

ரமேஷ்

நன்றி !!!
வணக்கம்

வெள்ளியன்று நமது சந்தைகள் சற்று ஆரம்பத்தில் எதிர் பார்த்து போல 70 - 80 புள்ளிகள் உயர்வில் துவங்கி பின்னர் படிப்படியாக உயர்வுகளை தாண்டி செல்ல ஆரம்பித்தன . பின்னர் 100 புள்ளிகளுக்கு அருகாமையில் சென்று பின்னர் சந்தைகள் அதே நிலைகளில் சில மணி துளிகள் வர்த்தககம் ஆகின .

ஆசியா சந்தைகள் இடைவேளைக்கு பின்னர் சற்று உயர்வுகள் தடைப்பட்டன . பின்னர் ஆசியா சந்தைகள் சற்று கீழிறங்கி ஒரே நிலைகளில் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன . பின்னர் நமது சந்தைகளில் ஆபரேட்டர்களின் ஆட்டம் துவங்கியது யாவரும் எதிர் பர்க்கதவன்னம் சந்தைகள் வேகமாக ஆனால் புள்ளிகள் சற்று மெதுவாக சரியா துவங்கி சந்தைகள் சரிவு நிலைக்கு சென்றன .

ஐரோப்பிய சந்தைக்கான துவக்கம் சற்று அதிக சரிவாக இருக்கலாம் என கருதப்பட்டது ஆனால் ஐரோப்பிய சந்தைகளும் சற்று உயர்வுகளிலேயே வர்த்தகத்தினை துவங்கியது . பின்னர் நமது சந்தைகள் அதே நிலைப்பாட்டிலேயே வர்த்தகத்தினை தொடர்ந்து முடித்தது . நமது சந்தைகள் முடிவில் 38.85 புள்ளிகள் சரிவடைந்த்கு முடிந்தன ..

வெள்ளியன்றைய ஆசியா சந்தைகள் சற்று துவக்கமே சரிவுகள் அதிகமாக இருந்தன .காரணம் நேற்றைய உயர்வுகளின் ஆப்பாக இருக்கலாம் . மேலும் அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் சற்று வேகமாக சரிந்ததும் ஐரோப்பிய சந்தைகள் சற்று அதிக சரிவிற்கு சென்றன . அமெரிக்கா சந்தைகள் முடிவுகளில் சற்று அதிகபட்சமாக 2 - 2.5 % வரை சரிந்து முடிந்தன .....

நன்றி !!!