செவ்வாய், செப்டம்பர் 22, 2009

தக தக தக தங்கம்


இன்றைய
பொருளாதார சிக்கல்கள் இவ்வளவு இருந்தும் வாழ்கையில் சிறு துளியாவது தங்கத்தை வாங்கி வீட்டில் வைக்க வேண்டும் என்று சாமானியன் முதல் பெரும் பணக்காரர்கள் வரை அனைவரின் எண்ணமும் அவரவர் வசதிக்கேற்ப உள்ளது .


இந்த பழக்கம் உலகம் முழுவதிலும் உள்ளது ?

அப்படி என்ன தான் உள்ளது தங்கத்தில் ஏன் இந்த விலை ஏற்றம் ??

தங்கம் முன்பு போல சுரங்கங்களில் கிடைப்பதில்லை . அல்லது அப்படியே கிடைத்தாலும் சுத்தம் செய்யப்பட்டு முளுத்தங்கமாக வெளி வரும் பொழுது அதன் சுத்தப்படுத்தும் செலவு அதிகரித்து வருகிறது . உற்பத்தி வகையில் செலவு அதிகரிக்கிறது . ஆதலால் பல இடங்களில் உற்ப்பத்தி நிருததப்படுகிறது .

மேலும் நமது நாட்டில் புழக்கத்தில் தங்கத்தின் அளவு குறைவாக உள்ளது என்பதால் அரசும் தங்கத்தினை கடந்த சில வருடங்களாக அதிக அளவில் இறக்குமதி செய்து வந்தது .

மக்களிடம் என்ன தான் பொருளாதார பிரச்சனைகள் இருந்தாலும் முதலீடு செய்வதில் இந்திய இன்னும் முன்னிலை வகிக்கிறது . ஆனால் அது தங்கத்தில் மட்டுமல்லாது பங்கு சந்தை சார்ந்த திட்டங்கள் மற்றும் சேமிப்பு திட்டங்கள் போன்ற வற்றிலும் அதிக அளவில் வர வேண்டும் என்பதால் அரசும் இவ்வாண்டு தங்கத்தின் இறக்குமதியில் வெகு அளவினை குறைத்துள்ளது .

அதாவது 85 % இறக்குமதியினை குறைத்துள்ளது . இவ்வளவு இறக்குமதியை அரசு குறைக்க காரணம் அரசிடம் தற்போதுள்ள பிரச்சனைகளுக்கு இடையே தொழில் வளர்ச்சி பாதிக்க கூடாது என்பதால் இந்த முடிவினை எடுத்துள்ளது குறிப்பிட தக்கது .

இருந்தாலும் மக்களின் தங்கம் வாங்கும் மோகம் குறைந்த பாடில்லை .

பொதுவாக இந்திய மக்களாகிய நாம் தங்கத்தை பண்டிகை காலங்கள் அல்லது குடும்ப விழாக்களின் பொழுது மட்டுமே வங்கி வருகிறோம் .

ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளோர் தங்களது பல முதலீடுகளில் தங்கத்தையே முதல் முதலீடாக கருதுகின்றனர் .காரணம் தங்கத்தினை உடனடியாக சந்தையில் காசாக்க முடியும் .

மேலும் சமீப காலமாக தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்க அதிகரித்துக்கொண்டே வருகிறது . நமது நாட்டிலும் இது நடைமுறையில் உள்ளது போல தான் கருதுகிறேன் . நம் மக்களும் வாங்குவதில் சளைத்தவர்களா என்ன !!!

உலக தங்க சந்தையான நியூ யார்க் கோல்ட் மார்க்கெட் இல் தங்கம் அவுன்ஸ் 1020 $ ஐ தாண்டி செல்லும் பட்சத்தில் தங்கத்தில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறேன் .

மேலும் இது உலகம் முழுவதிலும் திருவிழாக்காலம் என்பதால் உலகம் முழுவதும் தங்கம் வாங்குவது வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றே கருதுகிறேன் .

எனது கணிப்பின் படி இவ்வாண்டு இறுதிக்குள் தங்கம் நமது வர்த்தக கடைகளில் பவுன் 14500 - 15000 ரூபாயை எட்டும் என எதிர் பார்க்கிறேன் .

கடைசியாக ஒரு கொசுறு செய்தி -
**************************************
உலக அமைப்பான இண்டர்நேசனல் மானிடரி பண்டு என்ற அமைப்பு தன்னிடமுள்ள தங்கத்தில் இருந்து 403 குவிண்டால் அளவு விற்ப்பனை செய்து ஏழை நாடுகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளது .

ஆதலால் தங்கம் தகரமாகி விடாது . அவர்களிடம் இன்னும் 2 xxx குவிண்டால் அளவு தங்கம் கைவசம் உள்ளது அவசரப்பட்டு விலை இறங்கும் என கருத வேண்டாம் . வர்த்தக விலைப்படி நமது சந்தையில் சிறிய அளவில் விலை இறக்கம் வரலாம் . பயன் படுத்தி கொள்ளுங்கள் ..

நன்றி !!!