திங்கள், செப்டம்பர் 28, 2009

அந்நிய முதலீட்டாளர்களின் ஆதிக்கம் ஏன் ?

வணக்கம் நண்பர்களே

நமது சந்தைகளை பொறுத்த வரை அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆப்ரேட்டகளின் ஆதிக்கம் தொடர்ந்து சந்தைகளை வழி நடத்தி செல்கிறார்கள் . இது பிற்காலத்தில் நமது சந்தைகளை பலமில்லாமல் ஆக்கி விடும் என கருதுகிறேன்

அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து நமது சந்தைகளில் முதலீடு செய்துவருவது கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துக் கொண்டே வருகிறது . ஏன் அவர்களுக்கு வேறு முதலீடு வாய்ப்புகள் இல்லையா .

இன்னும் நமது சந்தைகளின் உயர்வில அவர்கள் முதலீடு செய்து கொண்டே வர காரணம் என்ன ?
உலக சந்தைகளை மிஞ்சிய சந்தைகள் என்றால் அது நமது சந்தைகள் தான் . மற்ற சந்தைகள் உயர்வின் பொழுதும் மற்றசந்தைகள் சரிவின் பொழுதும் நமது சந்தைகள் உயர்ந்து வருவதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் . மேலும் நாட்டின் எதிர் கால வளர்ச்சி என்று என்று அரசு மார்தட்டி கொள்கிறது .

அப்படி ஒன்றும் எதிர் காலத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்ப்பட போவதாக தெரியவில்லை . துறை வரியாக எடுத்துக் கொண்டாலும் கட்டுமானம் மற்றும் கச்சா என்னை சம்பந்தமான் துறைகள் சற்று வளர்ச்சி குறையவே வாய்ப்புகள் உள்ளன .

மேலும் ரிசர்வ் வங்கி ஆளுநர் அவர்கள் இந்தாண்டு மார்ச்க்குள் இன்பிலேசன் + 6% ஐ எட்டும் என்று கூறுகிறார் . அவ்வாறு வரும் பட்சத்தில் மேற சொன்ன இரண்டு துறைகளும் கடுமையாக பதிக்கப்படும் அபயம் உள்ளது .

மேலும் ரிசர்வ் வங்கி கடன் தொகைக்கான வட்டி குறைக்கவும் நமது வங்கிகள் கடனுக்கான வட்டியை அதிகரிக்க மற்றும் டெபாசிட் இக்கான வட்டியை குறைக்கவும் வாய்ப்புகள் உள்ளன .

அவ்வாறு நிகழும் பட்சத்தில் மேலும் தொழில் வளர்ச்சி பதிக்கப்படும் அபாயம் உள்ளது .மற்றும் இப்பொழுது சரிவர நடந்து வரும் தொழில்களும் பாதிக்கும் .

ஆக அந்நிய முதலீடு தொடர இது காரணமல்ல ////

மேலும் அவர்கள் முதலீடு செய்யும் அளவினை செபி அதிகரித்து வர காரணம் என்ன ?
அரசின் முக்கிய ஆவணமான அந்நிய முதலீட்டாளர்களின் ( P NOTES ) பங்கேற்ப்பு ஆவணத்தில் சில கவன சிதறல்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் மற்றும் வெளியே கூற முடியாத சிற்சில விசயங்கள் காரணமாக இவ்விசயங்கள் தொடர்ந்து மூடி மறைக்க படுகின்றன .

மேலும் போன முறை ' p notes ' ஐ காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு வேறு நாட்டுக்கு செல்ல உள்ளதாக கூறி சந்தைகள் பெரும் சரிவினை கண்டது .அதையாரு மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் . அவ்வாறு செய்யப்படுவது எல்லாம் சில சித்து விளையாட்டுகள் தான் என நினைக்கிறேன்

ஆனால் அரசு இந்த விசயத்தில் சற்று அதிககவனம் எடுத்து அந்நிய முதலீட்டாளர்களின் போக்கினை சற்று கட்டு படுத்தினால் சந்தைகளில் அதிக பாதிப்பின்றி ஒரே சீராக செல்லும் ......

சந்தைகள் மேல் நோக்கி செலுத்தப்பட வேண்டிய கட்டாயம் என்ன ?

நமது சந்தைகளை பொறுத்த வரையில் நமது மக்களும் இன்னும் சற்று அறிய பருவத்திலேயே உள்ளனர் காரணம் என்று பார்த்தால் சந்தைகள் உயர்வின் பொழுது அதிக விலை கொடுத்து வாங்கி வைத்து விட்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை போன இரண்டாயிரத்து எட்டில் வந்தது ஆனால் அந்த சூழ்நிலைகளில் மக்களின் போக்கினை அந்நிய முதலீட்டாளர்கள் மாற்றி விட்டு ஒவ்வொரு உயர்விலும் நம் முதலீட்டாளர்களை வாங்கும் முறைக்கு திருப்பி சந்தைகளின் உயர்வினை உறுதி செய்கிறார்கள் .

ஆனால் அவ்வாறு சந்தைகள் உயர்த்தப்படுவது அவர்களின் ஆதயத்திர்க்காக என்று நமது முதலீட்டாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும் . சற்று பொறுமையாக சந்தைக்குள் முதலீடு செய்ய வேண்டும் .

மீளும் சந்தைகள் அதிகமாக உயர்ந்ததும் சந்தைகளில் இருந்து வெளியேற வேண்டும் . அல்லது லாபத்தினை உறுதி செய்ய வேண்டும் . அங்கு அந்த நிலையில் உள்ளே செல்ல கூடாது .அங்கு நமது முதலீட்டாளர்களை உள்ளே வர வைக்க சில தற்காலிக உயர்வுகள் சந்தையில் திடீரென கொண்டு வரப்படுகிறது அதை அறிந்து முதலீடு செய்ய வேண்டும் .

பங்குகளின் விலைகள் சற்றும் அதிகரிக்காமல் சந்தைகளை மட்டும் உயர்த்துவது ஏன் ?
இது தான் முக்கியமான ஒரு விஷயம் ஆனால் இந்த விசயத்தினை முதலீட்டாளர்களும் ஏன் அரசும் செபியும் கண்டு கொண்டதாக தெரியவில்லை அல்லது கண்டு கொள்ளாதது சற்று எனக்கு வியப்பினை அளிக்கிறது .

சந்தைகளில் உயர்வு என்பது நாம் சராசரி அனைவர்க்கும் தெரிந்து இருப்பது பங்குகள் விலைகள் உயர்ந்து இருக்கும் என்பதே . ஆனால் தற்போதைய நமது சந்தைகள் இதற்கும் துளியும் சம்பந்தமில்லை .

காரணம் அந்நிய முதலீட்டலர்களுடன் சில தனியார் மற்றும் சில இன்சுரன்ஸ் முதலீடு நிறுவங்களும் கை கோர்த்துள்ளன ,அவர்கள் சந்தைகளில் சில பங்குகளின் விலைகளை மட்டும் செயற்கையாக உயர்த்தி சந்தையினை மேலே கொண்டு செல்கின்றனர் .

அதுவும் குறிப்பாக ப்ளூ சிப் கம்பெனி பங்குகள் மட்டும் உயந்து பல பங்குகளை உயர் செய்யாமல் செய்கின்றர்னர் பின்னர் சந்தையில் இன்டெக்ஸ் மட்டும் உயராமல் என்ன செய்யும் இப்படியே போனால் அந்நிய முதலீட்டாளர்களும் ஆபரேட்டர்களும் தான் சந்தையில் இருப்பார்கள் ..

இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவர் ஒரு நாளில் வாங்குதல் மற்றொருவர் விற்றல் என திடர்ந்து இவர்கள் விளையாட்டினை தொடர்ந்து வருகிறார்கள் . மேலும் இந்த இருவருக்கிடையில் சந்தையில் ஆபரேட்டர் மற்றும் ச்பெகுலேட்டார் களும் சேர்ந்து நம் முதலீட்டாளர்கள் அனைவரையும் சந்தையில் இருந்தே வெளியேற்றி விடுகிறார்கள் .

நமது மக்களும் வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என போட்டு வைத்த பங்குகள் பல கோடி இருக்கலாம் .

சரி முதலீட்டாளர்கள் பாடு இப்படி தினசரி வர்த்தகர்கலாவது கொஞ்சம் சம்பாதிக்கிறார்கள் என்றால்அதுவும் கிடையாது .அவர்களையும் வர்த்தகத்தின் இடையில் அதிக பட்ச விலைகளை தாண்டி வர்த்தகம் ஆகியும் குறைந்த பட்ச விலைகளை உடைத்து வர்த்தகம் ஆகியும் அவர்களையும் குழப்பி அவர்கள் சம்பாதிக்க மட்டுமல்லாது உள்ளதையும் விட்டு விட்டு சந்தையை விட்டே வெளியேற்று கின்றனர் .

இது தான் தற்சமயம் அக்டோபர் மாதத்திற்கு பிறகு சந்தையில் நடந்து வரும் வர்த்தகம் . சரி சந்தையில் சம்பதிதவர்களே இல்லை யா என்ற பார்த்தால் இருக்கிறார்கள் பக்குவம் அடைந்த சந்தை பற்றிய முழு அறிவு பெற்றவர்கள் மட்டும் சம்பாதிக்கிறார்கள் ..

கடைசியாக ஒன்று செபி இந்த விசயத்தினை மேலும் கண்டு கொள்ளாமல் விட்டால் நமது சந்தைகள் அதல பாதாளத்திற்கு கொண்டு சென்று நமது முதலீட்டலர்களையும் சந்தையில் இருந்தே வெளியேற்றி விடுவார்கள் அன்பான அந்நிய முதலீட்டாளர்கள் . ( கேவலமாக எழுதினால் படிக்க நன்றாக இருக்காது )

கவனிக்குமா அரசு ???

அன்புடன்
ரமேஷ்