வியாழன், டிசம்பர் 31, 2009

உள்ளூர் சந்தை ( நிப்டி )போக்குகள் 311209

வணக்கம் நண்பர்களே ,

என்ன தான் நடக்கிறது நமது சந்தைகளில் குறைந்த அளவிலான புள்ளிகள் வீழ்வதும் பின்னர் அதை விட இரு மடங்குகள் உயர்வது என்ற போக்கிலேயே நமது சந்தைகளில் வர்த்தகம் நடந்து வருகிறது . அதுவும் குறிப்பிட்டு சொன்னால் மக்களின் கவனம் முழுவதும் சந்தைகளின் போக்கின் படி இருந்தாலும் அதனை மாற்றம் செய்ய சில புல்லுருவிகளின் செயல் பாடுகள் சந்தைகளில் நடந்த வண்ணம் உள்ளன . அவர்கள் சொல்லுக்கு தான் சந்தைகள் கட்டுபடுகின்றன ..

அப்படி என்ன நடக்கிறது :
சந்தைகள் பற்றியும் வர்த்தகம் செய்யும் மற்றும் செய்யாத அனைவருக்கும் தெரியும் சந்தைகள் முன்னொரு காலத்தில் இருபதாயிரம் புள்ளிகளை தாண்டி 21.357 புள்ளிகள் வரை சென்றன . ஆனால் நமது சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் அதிகரித்தது என்னவோ 2004 - 2005 ஆண்டு வாக்கில் தான் .

ஏன் இதை சொல்கிறேன் என்றால் நமது சந்தைகளில் ஒரு காலத்தில் ஒன்றும் இல்லாத பங்குகளின் விலைகள் கூட யானை விலை குதிரை விலைகளில் வர்த்தகம் ஆனது நினைவிருக்கலாம் . பின்னர் அந்த பங்குகள் எல்லாம் அதிக விலை பங்குகளாக மாறி நம் முதலீட்டாளர்களின் கையில் ஒரு சொத்தாக இன்று வரை உள்ளன . நான் கூறும் இந்த் நிகழ்வு போன அதே முன் குறிப்பிட்ட உயர்வுகளில் நம் முதலீட்டளர்கள் செய்த தவறுகள் தான் (பாவம் அவர்களுக்கு மட்டும் என்ன தெரியும் ) இருக்கும் வீட்டிலே நெருப்பு கொளுத்துவார்கள் என்று ?

நமது சந்தைகள் தற்போதைய உயர்வுகள் சற்று கூட நிம்மதி பெருமூச்சு விடமுடியாத சூலில் தான் நாம் உள்ளோம் . ஏன் இந்த சூழ்நிலை நமக்கு மட்டுமா ஆம் நண்பர்களே நமது சந்தைகளை ஒரு காலத்தில் ஆயிரம் ரூபாயில் விற்ற சில பங்குகள் இன்று 175 - 300 - என்ற விலைகளில் வர்த்தகம் ஆகி வருகின்றன . காரணம் அந்நியமுதலீட்டாளர்கள் நமது மக்களை எந்த விலையிலும் வாங்கும் தன்மையினை நமது மக்கள் மத்தியில் உருவாக்கி உள்ளனர் ..

கடந்த சில மாதங்களாக நமது சந்தைகளுக்கு மற்றும் நமது முதலீட்டாளர்களுக்கு கூட சொல் புத்தி இல்லை போல அல்லது நமது சந்தைகளில் முதலீடு செய்யும் நமது முதலீட்டாளர்கள் சரியான முறையில் அல்லவோ என்று கூட சில சமயங்களில் சற்று குழப்பம் வருகிறது நண்பர்களே . நமது சந்தைகளை ஒரு போக பொருளாக வர்த்தகம் செய்பவர்கள் தான் இந்த அந்நிய முதலீட்டளர்கள் ( நான் கூறுவது சந்தைகளில் நகர்வுகள் மற்றும் அவர்கள் நகர்த்தும் நகர்வினை வைத்து )

சரி அவ்வாறு உயர்த்தப்படும் சந்தைகள் தற்பொழுது சரியான உயர்வுகளில் வர்த்தகம் நடந்து வருகிறது . ஆனால் பங்குகளின் விலைகள் சற்றும் உயர்வினை எட்டாமல் வர்த்தகம் ஆகி வருகிறது . என்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள் நண்பர்களே அவ்வாறு சரியான விலைகளில் வர்த்தகம் ஆகாமல் சந்தைகள் உயர்த்தப்படுவது ஒரு பெரிய சரிவினை உண்டாக்கவே என்றே கருதுகிறேன் .

மேலும் நான் கடந்த மாத மற்றும் கடந்த மூன்று மாத வர்த்தக நுட்ப வரை படங்களின் படி பார்த்தால் சந்தைகளில் போக்கில் இன்னும் சில நாடக வேலைகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன என்றே கருதுகிறேன் . . இன்று வரை நமது சந்தைகள் வர்த்தகம் ஆகி வருவது ஆண்டு உயர்வு வர்த்தக புள்ளிகளின் அருகாமையில் என்பதும் குறிப்பிடதக்கது ..

அவ்வாறு வர்த்தகம் ஆகி வருவது மற்றும் அந்த நிலைகளில் சந்தைகளை நிலை நிறுத்தம் செய்வது கூட நமது ஆபரேட்டர்கள் தாம் போல அந்த புண்ணியவான்களின் கையில் சிக்குண்டுள்ள நமது சந்தைகள் சற்றும் நிலை குலையாமல் இருக்க சில யுக்திகளை கையாண்டு கொண்டுள்ளனர் .. நமது ஆப்றேட்டகள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் இதற்க்கு பலியாடுகள் நம் முதலீட்டளர்கள் ...........

சரி முக்கியமா ஒரு விஷத்தை பற்றி பேசுவோமா ???

அதென்னையா நம்ம கவர்மென்ட் இன்பிலேசன் அதிகமானாலும் தப்பு இல்லைன்னு சொல்லுது குறைந்தாலும் தப்பிலைன்னு சொல்லுது .. மேலும் நம்ப பெரியண்ணன் வந்தால் போதும் எதுக்குன்னே தெரியல மார்க்கெட் மேலேயே போகுது .. காரணம் ஒன்னே ஒன்னு தான் சொல்ல தெரியும் போல் சார்ட் கவரிங் இன் மார்க்கெட் ..

இல்ல தெரியாம தான் கேட்கிறேன் நீ என்ன மார்க்கெட் நடத்துறைய இல்ல அந்நிய முதலீட்டளர்கள் கூட கூத்து நடதுறைய எவ்வளவு பங்கு வாங்குற சந்தைகளை நகவை அதிகமாக்க யாரு வாங்குறா . சந்தைகளில் இன்னும் சில கம்பெனிகளை தினமும் இன்சைதர் வர்த்தகம் செய்ய விடு சீக்கிரம் சந்தை முடிந்து விடும் அம்புட்டு தான் நிம்மதியா வீட்டிலே இருக்கலாம் ..

அன்பான முதலீட்டலர்களுக்கு :

இன்றைய தியதியில் வர்த்தகம் ஆகி கொண்டுள்ள நிபிட்டி தற்போதைய நிலைகளில் வாங்குவது நல்லதல்ல சற்று தங்களது முதலீடுகளை மற்றும் முதலீட்டு தொகையினை பத்திரமாக வையுங்கள் சந்தைகள் கீழே செல்லும் பொழுது முதலீடு செய்ய ஆரம்பியுங்கள் ..

அன்பான வாசகர்களுக்கு : -

நுட்ப குறிகளின் படி நானும் பதிவு எழுத சில முக்கிய குறிப்புகளுடன் தான் அமர்ந்தேன் ஆனால் அதன் படி செல்லாத சந்தைகளின் போக்கினை என் எழுத்து மூலமாக திருப்பிவிடவ முடியும் அல்லது நிபிட்டி இந்த நிலைகளில் வாங்க வேண்டும் என துடிக்கும் மக்களின் போக்கினை மற்ற முடியுமா என்ன . .....

யோசிக்கிறேன் ... பின்பு சந்திக்கலாம்

அன்புடன்

ரமேஷ்

வருக வருக 2010

எனது வலைதள வாசக , வாசகியர் மற்றும் அருமை நண்பர்கள் மற்றும் பதிவுலக நண்பர்கள் பதிவர்களுக்கு நல்லதொரு அங்கிகாரம் வழங்கும் தமிழிஸ் , நம் குரல் , நியூஸ் பானை , திரட்டி , தமிழ் மனம் ஆகிய ஆனைவருக்கும் எனது அன்பான ஆங்கில புது வருட நாள் வாழ்த்துக்கள் ..






இந்த புத்தாண்டில் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் ....

நன்றி

அன்புடன்
ரமேஷ்

உலக நிகழ்வுகள் சிறு பார்வை

வணக்கம் நண்பர்களே !

அனைவருக்கும் வணக்கம் .

எனது அறிவிப்பின் படி மின் மடல் செய்த நண்பர்கள் அனைவரும் கேட்டசந்தைகள் மற்றும் நிப்டி போக்குகள் பற்றி ஒரு பெரிய பதிவினை காணலாம் . முடிந்தால் ஒரே பதிவாக தர முயற்சிக்கிறேன் .........

நமது சந்தைகள் பற்றிய பேச்சை எடுத்தாலே என்னமோ அமெரிக்கா பொருளாதார பிரச்சனை சம்பந்தமாக எழுதுவது போல மிகவும் யோசித்து எழுத வேண்டி உள்ளது . கடந்த பல பதிவுகளில் நான் கூறியுள்ள பதிவுகளை சற்று ஆங்காங்கே நினைவு படுத்திக் கொள்ளவும் .

முதலில் இதற்குள் செல்லும் முன் உலக சந்தைகள் பற்றி சிறு விளக்கம் உலக சந்தைகள் பலவும் இழந்த புள்ளிகளை மீட்டு தொடர்ந்து உயர்ந்து வந்து கொண்டுள்ளன . இதை நல்லதொரு கருத்தாக வைத்துக் கொண்டாலும் பல சந்தைகளில் போக்குகள் அமெரிக்கா சந்தைகளை வைத்தே செல்வது நாம அறிந்த ஒன்று தன் இருந்த போதிலும் கடந்த 25 நாட்களாக அமெரிக்கா சந்தைகள் சற்று உயர்வுகளை தாண்டி செல்வதும் பின்னர் சில புள்ளிகள முடிவில் சரிவதுமாக உள்ளன ..

அதே போக்கினை ஆசியா , மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் கடை பிடித்து வந்துள்ள சூழலில் ..............................................

அடுத்தது துபாய் பிரச்சனை -

துபாய் பிரச்சனை பற்றிய சிறு விளக்கம் பிரச்சனை என்னவென்றால் துபாய் அரசு ஒன்றும் பெரிய அளவிலான கச்சா எண்ணெய் கிணறுகளை வைத்திருக்கவில்லை . மேலும் உள்ள கச்சா எண்ணெய் கிணறுகளை வைத்து சில வருடங்கள் தான் காலத்தினை ஓட்ட முடியும் என்ற சூழ்நிலை ....

இத்தனை பெரிய சிக்கல் வந்தால் துபாய் மண்ணை கவ்வ வேண்டி வரும் என்பதால் அந்நாட்டு மன்னர் பலே பாண்டிய மாதிரி ஒரு வேலையினை செய்துள்ளார் . துபைக்கு வரும் அந்நிய முதலீடுகளுக்கு குறிப்பாக கட்டுமான துறைக்கு அளவில்லாத சலுகைகள் மற்றும் அந்நிய கரன்சிகள் கள்ளத்தனமாக அதிக அளவில் உள்ளே வர அனுமதி வழங்கியது . அதுவும் வரியில்லாமல் ..

மேலும் துபாய் நாட்டினை ஒரு சுற்றுலா மையமாக கொண்டுவர பல முயற்சிகள் செய்தன . அவை அளவுகடந்த சலுகைகள் ஆகின உலகம் முழுவதிலும் உள்ள பண முதலைகளை துபைக்கு வரவழைத்தது மற்றும் கணக்கற்ற முதலீடுகள் என டாலரை அள்ளி கொட்டி கட்டுமான துறையில் சில வெளிநாட்டு நிறுவனக்கள் வந்து துபையில் கூடாரம் போட்டன .

பின்னர் அரசு தான் செய்து வந்த ஒரு பெரிய முட்டாள் தனமான செயல் உலகிலேயே சிறந்த கட்டிடம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியன பெரும் பொருட் செலவில் கட்டி முடிக்கப்படாத நிலையில் பல கட்டிடங்களுக்கு பணத்தேவைகள் அதிகமயின ..

இதன் பின்னர் தான் துபாய் அரசு அமெரிக்காவிற்கு தர வேண்டிய என்பது பில்லியன் டாலர் கடன் வெளியே தெரிய ஆரம்பித்தது . பின்னர் அதற்க்கு துபாய் அரசு இன்னும் ஆறு மத கால அவகாசம் கேட்பதாக வெளியே தகவல்கள் கசிய ஆரம்பித்தது அவ்வாறு வந்தால் அமெரிக்கா சற்று பொருளாதார நெருக்கடிகள் வரலாம் என்று கருதப்பட்டது...

உடனடியாக அந்த செய்தி உலக சந்தைகளில் சரிவுகள் மற்றும் கமாடிட்டி சந்தைகளில் சரிவுகள் என எல்லாம் ஒரே நாளில் மண்ணை கவ்வ செய்தன . பின்னர் துபாய்க்கு கை கொடுக்க அவன் வரான் இவன் வரான் என ஆறுதல் கூறி எல்லாம் சற்று உயர ஆரம்பித்தன ... தற்போதைய சூழ்நிலை என்னவென்றால் அபுதாபி உதவி செய்ய முன் வந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன .. ( இவங்க இப்படித்தான் எசமான் -- சொல்றத கேட்க ஆள் இருக்கு அப்புறம் என்ன கவலை -- அள்ளி விட வேண்டியது தான் )

அமெரிக்கா பற்றி எழுத எனக்கு இன்னும் அறிவு பத்தலைன்னு தான் நினைக்கிறேன் நண்பர்களே !!!

ஏன் என்றால் அங்கு வேலை இல்லாதோர் அறிவிப்பிற்கும் ( தொடர்ந்து வேலையிலந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது )மற்றும் நாட்டின் பொருளாதாரமும் சிறுதுளி கூட சம்பந்த மில்லை என்பது போலவும் நாம் டிபன் சாப்பிடுவது போல அங்கே நோட்டு அதாங்க டாலர் அச்சடிக்கறாங்க போல் தகவல் ... என்ன மேலே சொன்னது சரி தானா

மற்றபடி உலகின் பல நாடுகள் இன்னும் நல்லதொரு பொருளாதார சூழ்நிலைக்கு வரவில்லை என்றும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன என்பதும் ஒரு சிறிய தகவல் ...........

பதிவுகள் தொடரும் ....

நன்றி

புதன், டிசம்பர் 16, 2009

தங்கம் விலை எகிறக் காரணம் என்ன?

வணக்கம் நண்பர்களே ,,

குறிப்பு : - இந்த பதிவு எனது சொந்த பதிவு அல்ல

ஒரு கிராம் தங்கம் விலை 1,600 ரூபாயைத் தாண்டிவிட்டது. மிக விரைவில் கிராம் 2,000 ரூபாயையோ, சவரன் 20 ஆயிரம் ரூபாயையோ எட்டினால் வியப்பதற்கில்லை. அந்த உயரம், வெகு தூரமில்லை என்கின்றனர் நகை வியாபாரிகள்.

"இப்படி நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலைக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை;

மொத்தத்தையும் தீர்மானிப்பது, வெறும் 14 பேர் தான்' என்றால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான்.

இதுகுறித்து,

ஸ்ரீ குமரன் தங்க மாளிகை மேலாண் இயக்குனர் ஆறுமுகம் கூறியதாவது:

பிரிட்டன் தலைநகர் லண்டனில், புல்லியன் எக்சேஞ்ச் ஒன்று இருக்கிறது. நம்மூர் பங்குச் சந்தைகள் மாதிரி, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை இது தான். இதில் 14 வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன.
இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவுக்கேற்ப மார்க்கெட் விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான்.

இதில் அங்கத்தினர்களான வங்கிகள் கூடி, "இன்று இதுதான் விலை' என்று அறிவித்தால், உலகம் முழுவதும் அன்றைய விலையாக, அதுவே தீர்மானிக்கப்படுகிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும், அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. கையோடு, அன்றைய மார்க்கெட் விலையை, லண்டன் புல்லியன் அதிகரித்துவிடுகிறது.

தங்கம் விலை நிர்ணயத்தின் முக்கிய காரணியாக, ஆன்-லைன் வர்த்தகம் தான் செயல்படுகிறது. ஆன்-லைனில், எந்த நேரடி பணப் புழக்கமும் இல்லாமல், வெறுமனே, "இன்றைக்கு எனக்கு இத்தனை கிலோ தங்கம் ஒதுக்கிவையுங்கள்' என பதிவு செய்துவிட்டால், உங்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும்.

ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் தனி மனிதத் தேவைக்குப் பயன்படும் தங்கத்தை, அமெரிக்காவில் இருக்கும் ஒரே ஒரு வர்த்தகரே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துவிடுகிறார். இப்படித்தான், செயற்கை முறையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கப்படுகிறது.

இந்தியாவில் தங்கம் வாங்குவோரில், 80 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான்.
20 சதவீதம் வாடிக்கையாளர்கள் தான் செல்வந்தர்கள். விலை உயர்வால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது, நடுத்தர வர்த்தக மக்கள் தான். இந்த அதிரடி விலை உயர்வால், தங்கள் அவசியத் தேவைக்கு கூட தங்கம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

அந்த வகையில், தங்கம் விலையை 90 சதவீதம் ஆன்-லைன் வர்த்தகமும், 10 சதவீதம் மட்டுமே தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கிறது. இவ்வாறு ஆறுமுகம் கூறினார்.

தங்கத்தின் கதை: உலகின் மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்றான மெசபடோமியாவின் சுமேரிய நாகரிகத்தில் தான் (இப்போதைய ஈரான், ஈராக்) முதல் முதலில் தங்கம் ஓர் புனிதமான, ஆடம்பரமான, அலங்காரத்துக்கான நகையாக பயன்படுத்தப் பட்டது. கிட்டத்தட்ட அதே காலத்தில், தங்கம் உற்பத்தியில், முன்னணியில் இருந்த எகிப்தியர்களும், தங்கத்தை சுத்திகரிக்கும் கலையைக் கண்டுபிடித்தனர்.

அவர்களும் தங்கத்தை சொந்த உபயோகத்துக்குத் தான் பயன்படுத்தினர். நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில மன்னர்கள், தங்கத்தில் நாணயம் வெளியிட்டனர். முதன் முதலில், பெரிய அளவில் சுத்தமான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் கி.மு., 560 - கி.மு., 546ல் ஆண்ட லிடியா (இப்போதைய மேற்கு டர்க்கி) மன்னர் கிரீசஸ் தான். அதில், சிங்கம் மற்றும் காளையின் முகங்களைக் கொண்ட ராஜ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அந்த நாணயங்கள் தான் , உலகத்திலேயே முதல் முறையாக வர்த்தகப் பயன் பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.

மொத்தத் தங்கம்: தங்க வயல் சுரங்க சேவைகள் என்ற நிறுவனம் 2003ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, உலகத்தில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 500 டன் புழக்கத்தில் உள்ளது (இதில் உங்கள் வீட்டில் எவ்வளவு இருக்கிறது?). இதில் 61 சதவீதம், 1950ம் ஆண்டுக்குப் பிறகு பூமியிலிருந்து சுரண்டப்பட்டவை. மொத்த தங்கத்தையும் ஒரு கட்டியாகச் செய்தால், நான்கு புறமும் 19 மீட்டர் கொண்ட கனசதுரம் கிடைக்கும். அவ்வளவு தான்.

சொக்கத்தங்கம்: பொதுவாக, தங்கத்தின் மதிப்பு காரட் அடிப்படையில் அளவிடப்படுகிறது. காரட் என்ற வார்த்தை காரப் என்ற விதையில் இருந்து வந்தது. இந்த விதை, கீழ்திசை நாடுகளில், எடைக்கற்களாகப் பயன்படுத்தப்பட்டது. சொக்கத் தங்கம் என்றழைக்கப்படும் சுத்தமான தங்கம், 24 காரட் மதிப்புடையது.

நேர்த்தியான நிலையில், 100 சதவீதம் சுத்தமான இத்தங்கம், நகை செய்ய உகந்தது அல்ல. நகைக்கு பயன்படுத்தப்படும் தங்கம் 22 காரட் உடையது என பரவலாக சொல்லப்படுகிறது. இது 91.67 சதவீதம் சுத்தமான தங்கம். ஆனால், 75 சதவீதம் சுத்தத் தங்கமான 18 காரட்டைப் பயன்படுத்தினாலே பெரிய விஷயம் தான் என்கின்றனர் விவரம்
அறிந்தவர்கள் ...

மேற்கண்ட விபரம் நான் படித்ததில் பிடித்தது ஆகவே அதனை மறு பதிவு செய்துள்ளேன் ..ஆகவே நன்றியினை கீழே உள்ள லிங்க் ஐ கிளிக்கி நன்றியினை தெரிவிக்கவும்

Read more: http://therinjikko.blogspot.com/2009/12/blog-post_8866.html#ixzz0ZqHgiVKW

ஒரு சிறிய செய்தி நண்பர் மேலே சொன்னது போல உலக சந்தைகளில் மேற்சொன்ன காரணங்களின் படி வர்த்தக முறைகள் இருந்தாலும் on -line வர்த்தகம் மூலம் தான் தங்கத்தின் விலை அதிகரிக்கிறது என்பது உண்மை அல்ல .

அமெரிக்கா சந்தையான நியு யார்க் மெர்கண்டைல் சந்தை மற்றும் காமக்ஸ் சந்தை ஆகியன தான் தங்கத்தின் விலையினை நிர்ணயம் செய்கிறார்கள் என்பது தான் உண்மை . அங்கு தங்கத்தின் விலையில் ஏற்ப்படும் ஏற்ற இறக்கம் தான் நமது கமாடிட்டி சந்தையிலும் மற்றும் அதனை தொடர்ந்து நமது ஸ்பாட் சந்தைகளிலும் எதிரொலிக்கின்றன ..
நன்றி

அன்புடன்
ரமேஷ்

செவ்வாய், டிசம்பர் 15, 2009

முக்கிய அறிவிப்பு -----

வணக்கம நண்பர்களே ,

இனிய வணக்கத்துடன் (நல்ல உடல் நலத்திற்கு பின்னர் -- நண்பர்கள் பலர் கேட்டதிற்கிணங்க முதல் பதிவினை துவங்குகிறேன் ) . கடந்த பதிவில் கூறியது போல் நண்பர்களின் ஏகோபித்த கருத்து மற்றும் கேள்விகள் மற்றும் எனக்கு வந்த மின் அஞ்சல்கள் அனைத்தும் நிபிட்டி மற்றும் அதன் போக்குகள் பற்றியே வந்துள்ளன ,,

ஏன் நண்பர்களே துறை வாரியான பங்குகளை வர்த்தகம் செய்ய வில்லையா அல்லது செய்யும் அளவிற்கு அவற்றின் போக்குகள் இல்லையா ??

மேலும் எனது முக்கிய தொடர் வலை வாசகர்களின் வேண்டுகோளின் படி எனது வலைதளத்தில் உரையாடல் பகுதி என்கிற வசதியினை வாசகர்களாகிய உங்களுக்காக ஏற்ப்படுத்தி உள்ளேன் . பயன் படுத்திக் கொள்ளுங்கள் .

சரியான விதத்தில் பயன் படுத்தினால் மாட்டு சாணம் கூட உபயோகப்படும் ..

அது போல உங்கள் கருத்துக்குவியலை மற்றும் உங்கள் சந்தேகங்களை எனது வலைதளத்தின் வாசகர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் ..

முடிந்தால் நான் வலையினுள் இருந்தால் தங்கள் சந்தேகங்களை தீர்த்து வைக்க முயற்சிக்கிறேன் ..

நிபிட்டி மற்றும் சந்தைகள் பற்றிய போக்குகள் பற்றிய பதிவு தயாராகி வருகிறது அதனை நாளை முடிக்க முயற்சிக்கிறேன் அது வெளிவந்த பின்னர் வலை பூ தொடர்ச்சியாக செயல் படும் என்பதினை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் .

இத்துணை நாள் பொறுமை காத்த அன்பு வாசகர்களுக்கு நன்றி

நன்றி

அன்புடன்

ramesh

திங்கள், டிசம்பர் 07, 2009

பதிவு மீண்டும் துவக்கம் அறிவிப்பு

வணக்கம் நண்பர்களே ..................
அனைவரும் நலமா .......

உடல் நலம் நன்றாகி நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை சந்திக்க விரைவில் வர உள்ளேன் . சந்தைகளின் போக்கினை கடந்த சில நாட்களாக தான் கவனித்து வருகிறேன் . ஆகவே நண்பர்களே தாங்கள் எனக்கு இன்னும் சில தினங்கள் மட்டும் விடுப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ..

மேலும் தங்களுக்கு சந்தைகள் பற்றிய சந்தேகங்களுக்கு என்றே தனியாக ஒரு வாரம் ஒவ்வொரு நபருக்காகவும் பதிவெழுத முடிவெடுத்துள்ளேன் .. ஆகவே தங்கள் சந்தேகத்திற்குரிய தலைப்பினை எனது மின் அஞ்சல் முகவரியான mailto:sriramramesh123@gmail.com அல்லது mailto:sriramramesh123@yahoo.co.in ஆகிய முகவரியில் இந்தவார வெள்ளிக்கிழமை இக்கு முன் அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன் ..

மேலும் கடந்த சில வாரங்களாக எனது பதிவினை எதிர் பார்த்து காத்திருந்த நண்பர்களுக்கு மற்றும் வலைப்பதிவு வாசகர்கள் அனைவருக்கும் எனது வருத்தத்தினை தெரிவித்து கொள்கிறேன் ..

நன்றி @
ரமேஷ்