சனி, அக்டோபர் 10, 2009

வரும் வாரம் சந்தைகள் - October 10, 2009

வணக்கம் நண்பர்களே !

கடந்த வாரத்திற்கு முந்தய வாரம் நமது சந்தைகள் சற்று அதிக பட்ச புள்ளிகளை நிலைகளாக வைத்து நமது சந்தைகள் வர்த்தகம் ஆனது நினைவிருக்கிறதா நண்பர்களே .. ஆம் நமது சந்தைகள் அந்த வாரத்தில் சற்று அதிக பட்ச அதாவது இவ்வருட உயர்ந்த புள்ளிகளுக்கு அருகில் வர்த்தகம் ஆகின உலக சந்தைகள் அனைத்தும் அந்த நாட்களில் சற்று அதிக பட்ச சரிவினை அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது .

ஆக இந்தவார உலக சந்தைகளின் நிலைகளை வைத்து பார்த்தால் உலக சந்தைகள் அனைத்தும் இவ்வார வர்த்தகத்தில் கிட்டத்தட்ட அமெரிக்கா சந்தைகள் 3.5 % - 5% வரையிலும் ஐரோப்பிய சந்தைகள் 4% - 5% வரை உயர்ந்துள்ளன . ஆசியா சந்தைகளும் இத்தனை பிரதிபலிக்கும் விதமாக 3 % - 4% வரையிலும் மற்றும் ஜப்பானிய சந்தைகள் 3 % வரையிலும் உயர்வில் முடிந்துள்ளன . ஆனால் நமது சந்தைகள் சற்று சரிவடைந்து அதிக பட்ச சரிவாக 2 % வரை சரிவில் முடிந்துள்ளன ..

வரும் நாட்களிலும் மற்றும் உலக நாடுகளிலும் இது பண்டிகை காலம் என்பதால் தங்கத்தின் விலைகள் சற்று தொடர்ச்சியாக வரும் நாட்களில் உயர வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது . மேலும் தங்கத்தினை விட வெள்ளியில் முதலீடுகள் அதிகரித்து வருவத்தாகவும் தெரிகிறது . இவ்வாறு உலக சந்தைகளில் சற்று முதலீடு முறைகள் மாறும் பொழுது பங்கு சந்தைகளும் மற்றும் அதனை சார்ந்த திட்டங்களிலும் மக்கள் முதலீடுகள் சற்று குறையும் வாய்ப்புகள் சற்று உள்ளன .

ஆகவே உலக சந்தைகளின் போக்கினை சற்று உற்று நோக்கினால் அனைத்து சந்தைகளும் முக்கிய எதிர் நிலைகளை கடக்க இயலாமல் சற்று தடை படுகிறது மேலும் அந்த நிலைகளில் சற்று செல்லிங் அதிகரிக்கிறது . இது கடந்த சில நாட்களாக நமது சந்தைகளில் நடை பெற்று வருவதாக தெரிகிறது . இது நமது சந்தைகளில் மட்டுமல்லாது உலக சந்தைகளிலும் சற்று அதிகரித்து வருகிறது .

மேலும் ஆசியா சந்தைகள் மற்றும் ஜப்பானிய சந்தைகளும் சற்று சரிவினை காண வாய்ப்புகள் அதிகம் உள்ளன . ஏன் எனில் அந்த சந்தைகள் சற்று உயர்வுகளில் வர்த்தகம் ஆகி வருகிறது மேலும் அங்கு அந்த சந்தைகளில் நல்லதொரு உயர்வினை வைத்து வர்தகமாகிறது .

இப்போதைய சூழ்நிலையில் அமெரிக்கா சந்தைகள் முக்கிய எதிர் நிலையான 9858 நிலைகளை கடக்க முயன்றால் சந்தைகள் 10120 வரை செல்லும் வாய்ப்புகளை மறுக்க இயலாது .

அதே போல முன்பு கூறியது போல ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் சற்று அதே போக்கினை கடை பிடிக்கலாம் .

நமது சந்தைகளை பொறுத்த வரை முக்கிய எதிர் நிலைகளாக இருந்த 5088 நிலைகளை கடக்க இயலாம ல்சந்தைகள் சற்று தடுமாறுவது சற்று சரியான விஷயம் தான் . ஆனால் முக்கிய அதரவு நிலைகளான 4950 - 4920 நிலைகள் சற்று உடை பட்டால் சந்தைகளில் சரிவினை தடுக்க இயலாது என்றே கருதுகிறேன் .

மேலும் நமது சந்தைகள் சற்று இப்போதைய உயர் வர்த்தக சூழலில் முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரவுள்ளதால் சந்தைகள் போக்கினை அவ்வளவு எளிதாக யாரும் கணிக்க இயலாது என்றே கருதுகிறேன் . இருந்தாலும் நமது சந்தைகளில் முக்கிய ஆதரவு நிலையான 4920 நிலைகள் உடை பட்டால் சந்தைகள் 4860 வரை சரிவடையலாம் ..

கவனமாக இருங்கள்


முக்கிய க்ருசியல் நிலைகள்

ஆதரவு -- 4920 , 4850 , 4770 ------------

எதிர்ப்பு --- 4985 , 5020 , 5080 ............

நன்றி

அன்புடன்

ரமேஷ்