திங்கள், அக்டோபர் 12, 2009

என் அன்பு முதலீட்டாளர்களே

நமது சந்தைகள் பற்றிய வழக்கம் போல ஒரு காரமான பதிவு பல முக்கிய செய்தியினை பேசலாம் என முடிவெடுத்துள்ளேன் . உங்கள் கருத்துக்களை கூறுங்கள் ...

நமது சந்தைகள் பொறுத்தவரை நல்லவர்களுக்கு காலமில்லை , ஆமாம் நண்பர்களே நானும் கடந்த சில ஆண்டுகால வர்த்தகத்திலும் சில பண்டமண்டல் ஆய்வுகளிலும் பல விசயங்கள் யோசித்து பார்த்துள்ளேன் ,

நமது சந்தைகள் என்ன தான் செபியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சந்தைகளில் பல சமயங்கள் ஆப்ரட்டிங் செயல்கள் சிறப்பாக நடக்கின்றன . அதுவும் முதலீட்டாளர்களை பங்குகளை அதிகவிலைக்கு பங்குகளை வாங்க வைத்து முடிப்பது அவர்கள் விற்கவே முடியாது ...

தினசரி முதலீட்டளர்களுக்கு அந்த தொல்லை இல்லை அதிக பட்சம் ஒரு சில வாரங்கள் தான் அதற்குள் சந்தையினை விட்டே அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் . அந்நிய முதலீட்டாளர்களை வைத்து சந்தையினை தொடர்ச்சியாக நடத்த முயற்சிக்கிறதா இந்த அரசு ??

ஒரு பதிவு போட தெரிந்த எனக்கு மற்றும் மக்களுக்கு தெரிந்த இந்த ஆபரேட்டிங் விசயங்கள் அரசுக்கும் மற்றும் செபிக்கு தெரியாதா அல்லது தெரியாதது போல செபி நடந்து கொள்கிறதா ..........

இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் அந்நிய முதலீட்டளர்களுக்கு செபி மற்றும் அரசும் அடிபணிந்து விட்டதா ? நான் கேட்கிறேன் அந்நிய முதலீட்டாளர்களை உள்ளங்கையில் வைத்து பார்க்கும் நீங்கள் ஒரு நிமிடம் மக்கள் நமது மக்கள் ஏமாளி முதலீட்டாளர்களையும் பாருங்கள் அவ்வாறு பார்க்கும் வாய்ப்புகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை .

அவர்கள் நமது மக்களை சந்தைகளை விட்டே ஒழிக்கும் முன்னாவது மக்களின் நியாயமான கேள்விகளை ஏற்று பதிலளிக்கும் நிதி அமைச்சகம் ? ...

நமது சந்தைகள் ஒரேஅடியாக சரிந்த பொழுது நமது நிதியமைச்சர் கூறியது இந்திய பொருளாதாரம் நன்றாக உள்ளது பயம் வேண்டாம் என்றார் . அதன் பின்னர் தான் சந்தைகள் அதிகமாக சரிந்து உயரதுவங்கின . சரி அப்படி தான் சரிந்தாலும் என்ன பங்குகள் விலைகள் 80 % - 90 % வரை சரிவடையுமா ?

மக்கள் சந்தைக்குள் வர பயப்படும் 2008 இல் வெளியான பி நோட்ஸ் விவகாரத்தில் அரசு இன்றும் பல விசயங்களை பகிரங்கப்படுத்த மறுப்பது ஏன் ?

மக்களுக்கு தெரிய தா ? சந்தைகளில் நடப்பது ? ஏன் வெளியிடவில்லை ? இல்லை வெளியிட முடியாத வாறு செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் அந்நிய முதலீட்டளர்களுக்கு வழங்க்கப்பட்டுவிட்டதா ?

மேலும் நான் பார்த்தவரை இந்த " buy back " அறிவிப்புகள் சந்தைகள் மிக குறைந்த புள்ளிகளில் அறிவிப்புகள் வெளியிடப்படும் . அதுவும் போனால் போகட்டும் என்பது போல நிறுவனங்கள் செபியிடம் அனுமதி கேட்டுள்ளதாக் செய்திகள் வரும் ஏன் உயர்வில் அந்த வேலையினை செய்யவேண்டியது தானே ?

அதுவும் அப்பொழுது தான் நிறுவனம் காலாண்டு முடிவுகள் போட்டு முதலீட்டாளர்கள் தலையில் மிளகாய் அரைக்க முடியும் . அப்பொழுது தான் நிறுவன ப்ரமொட்டர்கள் தங்களிடம் உள்ள பங்குகளின் எண்ணிகையை அதிகரிப்பார்கள் இதை கவனித்ததா அரசு ? திருப்பி யாரேனும் கேட்டால் அந்த பங்கு 0 கே சென்று விடும் என்பது போல செபி அறிவிப்பு வெளியிடும் ....

இதே போல அதிக பட்ச புள்ளிகளில் தான் போனஸ் மற்றும் நிறுவனங்களை இணைத்தல் போன்ற செயல்களுக்கு நிறுவனங்கள் ஈடு படும் . செபியும் அனுமதி அளிக்கும் ஏன் செபி இதை தடுக்க கூடாதா ? அல்லது செபிக்கு இதிலும் சம்பந்தம் உள்ளதா ? ( எனக்கு விளங்கவில்லை )

சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் செல்லிங் அதிகரித்து விட்டது அதனால் அண்ட் நிறுவனம் buy back செய்கிறது என்று பதில் வரும் ஏன் தெரியாதா அரசுக்கு அந்நிய முதலீட்டளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தான் பங்குகள் வாங்கி விற்க அனுமதி உண்டு என்று ........

மேலும் அவ்வாறு அந்நிய முதலீட்டளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது மேலும் சில பல விசயங்களில் அதிகரித்துக் கொண்டே வருவது ஏன் ?

இப்பொழுது உள்நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூட அந்நிய முதலீட்டலர்களுடன் கை கோர்க்கிறது ... ஏன் இந்த அநாகரீகமற்ற செயல்கள் உள்நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனதினர்களே ??

மேலும் சந்தைகளின் வர்த்தக நேரத்தில் செபி பங்குகளின் தாறுமாறாக உயர்வது கண்டும் அதனுக்குரிய உடனடி நடவடிக்கை எடுக்காமல் பங்குகளின் வர்த்தகத்தில் ------------------------------------------

மாற்றங்களை உடனடியா செய்தி வெளியிட்டு லோ பரீஸ் ஆகி விடும் மக்கள் அந்த பங்கினை விற்க படாதபாடு பட வேண்டும் . உதாரணம் பிரமிட் , ஆஸ்த்ரால் கோக் சத்யம் எக்ஸ்ல் டேலேகோம் நிசான் காப்பர் , -- இந்த மாதிரியான பிரச்சனைகளையும் உடன் வெளியிடாமல் மக்களுக்கு சாதகமாக நல்லதொரு முடிவினை நிறுவனத்திடம் பேசி முடிவு கண்டவுடன் தவறான செய்திகளை வெளியிட வேண்டும் .

அவ்வாறு செய்வதில்லை உடன் தவறான செய்திகளை பரப்பி எல்லாம் ....................

ஒரு நிறுவனம் புதிதாக பங்கு வெளிஎட்டில் இறங்கும் பொழுது செபி தானே அவர்களது ஆவங்களை பார்த்து அனுமதி வழங்குகிறது . அவர்களுக்கு தெரியாத மேற்சொன்ன பிரச்சனைகள் ..............

இவ்வளவும் இருக்க நமது மக்களை இன்னும் சூடேற்ற நலல் செய்திகளை பரப்பும் மீடியாக்கள் ( அவனுகளை உயிரோட கொளுத்தனும் மன்னித்து விடுங்கள் கோபத்தினை கட்டுப்படுத்த முடியவில்லை , பரதேசிகள் என்னமோ சந்தைகள் அவங்கப்பன் சொத்து மாதிரி தான் எல்லா பரபரப்பையும் வெளியிட்டு மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் ..... என் மக்கள் காப்பற்றப்பட வேண்டும் என்ற ஆதங்கதிலே சற்று கோபம் .........

மீடிய நிறுவனங்கள் பல இதே போல தான் செய்திகளை தவறாக வெளியிடுவது மற்றும் மேற்சொன்ன பரபரப்புகளை வெளியிட்டு சந்தைகளில் சில குளறுபடிகளை உண்டாக்குகிறார்கள் . அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் மறுக்கிறதா அல்லது புகார்கள் எதுவும் இல்லையா ?

மேற்கூறிய விசயங்கள் அனைத்தும் தாங்கள் அறிந்ததே அனைவரும் சேர்ந்து இதை அரசுக்கு புகார் இட வேண்டும் அப்பொழுது தான் நான் எதிர் பார்த்து மாதிரி நம் மண்ணின் மணிகள் காப்பாற்ற படுவார்கள் ....

செய்வீர்களா ................

நன்றி !!

ரமேஷ்