புதன், அக்டோபர் 14, 2009

வணக்கம் நண்பர்களே .

ஒரு வர்த்தக தின விடுமுறைக்கு பின் துவங்கப்போகும் சந்தைகளுக்காக மிகுந்த எதிர் பார்ப்புடன் இருப்பீர்கள் என நினைக்கிறேன் . ஒன்றும் கவலை வேண்டாம் சந்தைகள் சற்று உயரத்தான் போகிறது அதை பற்றி பின்பு ..

செவ்வாய் யன்று ஐரோப்பிய சந்தைகள் நமது சந்தைகள் முடிந்ததும் சற்று அதிகமாக உயர்ந்து முடிந்தன . அமெரிக்கா சந்தைகள் சற்று பிளாட் நிலைகளில் வர்த்தகம் ஆகி பின்னர் முடிவிலும் பிளாட் நிலைகளிலே முடிந்தன .

நேற்றைய ஆசியா சந்தைகள் சற்று உயர்வினை கண்டன ஆசியா சந்தைகள் 1 % - 2% வரை உயர்வினில் வர்தகமாகி முடிந்தன . நமது சந்தைகள் நேற்று வர்த்தக விடுமுறை ..

இன்றைய ஆசியா சந்தைகள் சற்று உயர்வினை துவக்கமாக வைத்து துவங்கி உள்ளன . அனைத்தும் 1 % - 2 % வரை உயர்வில் வர்தகமாகி வருகிறது .. மேலும் அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் சற்று அதிக உயர்வினை கொண்டு துவங்கி உள்ளன . அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் தற்சமயம் 61 புள்ளிகள் உயர்வில் வர்தகமாகி வருவது குறிப்பிட தக்கது ..

நமது சந்தைகள் துவக்கம் கிட்டத்தட்ட 30 - 45 புள்ளிகள் வரை உயர்வில் துவங்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன . அவ்வாறு துவங்குமானால் சந்தைகள் GAP UP ஐ பில் செய்ய முயற்சித்தால் சந்தைகளில் பிரெஷ் லாங் செல்லலாம் . ஆனால் ஷார்ட் வேண்டாம் . நமது சந்தைகளில் இன்றைய வர்த்தகம் முழுவதும் ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் போக்கினை தொடர்ந்தே இருக்கும் . மேலும் திங்களன்று வந்த ஐ ஐ பி அறிவிப்புகள் சந்தைகளுக்கு சாதகமாகவே வந்துள்ளன .

அதனை தொடர்ந்தே அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது ஷாட் பொசிசனை கவரிங் செய்துள்ளார்கள் . அதனால் திங்களன்று சந்தைகள் ஒரு திடீர் உயர்வினை கண்டுள்ளன . இன்றைய சந்தைகளும் வரும் நாட்களிலும் ஒரு திடீர் உயர்வுகள் வரலாம் .

மேலும் திங்களன்று அந்நிய முதலீட்டாளர்களும் மற்றும் நமது உள்நாட்டு பரஸ்பர நிதியகங்களும் புதிய வாங்குதல் படலத்தில் இறங்கி உள்ளன . ஆகவே நிபிட்டி புதிதாக வர்த்தகம் செய்பவர்களுக்கும் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் இது ஏற்ற தருணம் அல்ல . தயவு செய்து சந்தையில் இருந்து விலகி இருங்கள் ..

இன்றைய நமது சந்தைகளில் வர்த்தகத்தினை மேற்க்கொள்ளும் முன் மேற்சொன்ன அனைத்து காரணங்களையும் மனதில் வைத்து வர்த்தகம் செய்ய்யுங்கள் . ( நிபிட்டி இன் ஆண்டு உயர்வு , relainace சமரசம் , அற்புதமான் ஐ ஐ பி அறிவிப்பு , குறைந்து வரும் இன்பிலேசன் , அந்நிய முதலீட்டாளர்களின் தொடர் வாங்கும் படலம் )

நிபிட்டி நிலைகள்;

அதரவு --- 5012 , 4980 , 4950 ---- 4880 .

எதிர்ப்பு ---- 5040 , 5088 , 5120 ---- 5150 .

நன்றி @

ரமேஷ்