வெள்ளி, அக்டோபர் 30, 2009

காலை வணக்கம் ..

நேற்றைய நமது சந்தைகள் சற்று உலக சந்தைகள் போக்கினை சற்று பிரதி பலித்தன . உலக சந்தைகள் சரிவினை காட்டிலும் சற்று சரிவுகள் நமது சந்தைகளில் அதிகமாகவே இருந்தன . நேற்றைய நமது சந்தைகள் துவக்கம் எதிர் பார்த்து போல 70 புள்ளிகள் சரிவில் துவங்கின பின்னர் சந்தைகள் சற்று மீள முயற்சித்தது . ஆனால் உலக சந்தைகள் போக்கினால் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல சரிவுகள் தொடர்வதால் நமது சந்தைகள் பலவீனமடைந்து சரிவுகளே எஞ்சின .........

நேற்றைய நமது சந்தைகள் வர்த்தக இடைவேளையின் பொழுது ஆசியா சந்தைகள் முடிவுக்கு வரும் பொழுதும் பெரிதாக சந்தைகள் இழப்பினை மீட்டெடுக்கும் என நம்பும்படியாக சந்தைகள் இல்லை ... நமது சந்தைகள் முடிவில் 75.60 புள்ளிகளை இழந்து 4750.50 என்ற நிலைகளில் முடிந்தன ..

ஆனால் நேற்றைய ஐரோப்பிய சந்தைகளில் சற்று பெரிய அளவில் சரிவுகள் இல்லை காரணம் நேற்று முன்தினம் ஐரோப்பிய சந்தைகள் சற்று பெரிய அளவிலான சரிவினை கண்டன . ஆதலால் சந்தைகள் சற்று சரிவுகள் அன்றி பிளாட் நிலைகளில் துவங்கி பின்னர் உயர்வுகளை நோக்கி செல்ல ஆரம்பித்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே உயர்வுகளில் வர்த்தகம் ஆயின . சந்தைகள் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக உயர்வுகளில் வர்த்தகம் நிலை பெற தொடங்கின . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 200 புள்ளிகள் அதிகரித்து சற்று அதிக பட்ச உயர்விலேயே வர்த்தகம் முடிந்தன ..

இன்றைய ஆசியா சந்தைகள் அமெரிக்கா சந்தைகளின் உயர்வுக்கு இணையாக சற்று அதிக பட்ச உயர்வுகளாக 2% - 3% வரை உயர்வுகளில் வர்த்தகத்தினை துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் அதே போக்கினை கடைபிடித்தே தீர வேண்டும் மேலும் இன்றைய தினம் பியுச்சர் வர்த்தகத்தின் முதல் தியதி ஆகவே சந்தைகளில் சற்று அதிக அளவிலலான பிரெஷ் லாங் பொசிசன் சந்தைகளில் அனைத்து துறை பங்குகள் மற்றும் இன்டெக்ஸ் ஆகிய அணிதிலும் உருவாகலாம் என கருதுகிறேன் ..

இன்றைய சந்தைகளில் வங்கித்துறை பங்குகள் , கட்டுமான துறை பங்குகளில் லாங் செல்லலாம் . நிப்டி ஐ பொறுத்த வரை ஓவர் செல்லிங் என வார வர்த்தக
நுட்பங்களில் தெரிய வருகிறது ஆதலால் செல்லிங் உள்ளது நல்லதல்ல ..

முடிந்தவரை இன்றைய தினம் லாங் நிலைகள் எடுக்கலாம் . ஷாட் பொசிசன் க்ளோஸ் செய்வது நலம் .

நிப்டி நிலைகள் :- ----

ஆதரவு ----- 4720 , 4700 , 4682 ....

எதிர்ப்பு ---- 4780 , 4820 , 4850 ....


நாளை சந்திக்கலாம் ....................