வியாழன், அக்டோபர் 29, 2009

அனைவருக்கும் காலை வணக்கம் ....

நேற்றைய உலக சந்தைகள் பலவும் கடுமையான சரிவினை கண்டன . நமது சந்தைகள் மற்றும் ஆசியா சந்தைகள் அனைத்தும் சற்று சரிவுகலிலே வர்த்தகத்தினை தொடங்கின . நமது சந்தைகள் துவக்கம் சற்று GAP DOWN இல் துவங்கிய போதிலும் சந்தைகள் சற்று சரிவில் இருந்து மீண்டு வந்தது . மீண்டு சந்தைகள் + ஆனது குறிப்பிடத்தக்கது .

நமது சந்தைகள் கடந்த இரு தினங்களாக முக்கிய நிலைகள் உடைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது . மேலும் உலக சந்தைகள் அனைத்திலும் சற்று செல்லிங் அதிகரித்து வந்தே உள்ளன . அது நமது சந்தைகளிலும் எதிரொலிக்கின்றன .. என்பதினை மறுக்க முடியாது ...

நேற்றைய ஆசியா சந்தைகள் முழுவதும் சற்று அதிக சரிவினை கண்டன அதன் பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகளும் சற்று சரிவுகளிலேயே துவங்கியது நமது சந்தைகள் சற்று அதே போக்கினை கடைபிடிக்காதது சற்று ஆச்சர்யமே அல்லது நமது சந்தைகள் அதற்கு முந்தய வர்த்தக தினங்களில் சற்று அளவுக்கு அதிகமாக சரிந்தது கூட காரணமாக இருக்கலாம் ..

நமது சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தில் 20.50 புள்ளிகள் சரிந்து 4826 புள்ளிகளில் நிலை பெற்றன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் சற்று சரிவுகளில் இருந்தன அதன் பின்னர் சந்தைகளில்மீட்சி என்பது சற்று மருந்துக்கு கூட அல்லாமல் மீளும் மீளும் சரிவும் கண்டது . முடிவில் அமெரிக்கா சந்தையான டவ் ஜோன்ஸ் 1% வரையில் சரிவில் முடிந்தன ...

இன்றைய ஆசியா சந்தைகள் சற்று துவக்கத்திலேயே சற்று அதிக புள்ளிகளை இழந்து துவங்கியுள்ளது குறிப்பிட தக்கது . மேலும் உலக சந்தைகள் பலவும் லோவ் பரீஸ் ஆகியுள்ளது குறிப்பிட தக்கது . ஆசியா சந்தைகள் 2 % - 3% வரையிலும் சரிவடைந்து துவங்கி உள்ளன .

நமது சந்தைகள் அதே போல சரிவுகளில் ஆசியா சந்தைகளின் போக்கினை கொண்டே தொடரும் மேலும் இன்று பியுச்சர் வர்த்தகம் கடைசி தினம் மற்றும் இன்பிலேசன் அறிவிப்புகள் என முக்கிய நாளாக இருப்பதால் சந்தைகள் நகர்வுகள் சற்று அதிகமாக இருக்கலாம் .. நமது சந்தைகள் துவக்கம் 70 - 80 புள்ளிகள் சரிவில் துவங்கலாம் ..

கவனமாக இருங்கள் ...

நிப்டி நிலைகள் :------

ஆதரவு : ---- 4805 , 4770 , 4750 ....

எதிர்ப்பு : ---- 4850 , 4880 , 4920 ...

நன்றி !!!