வணக்கம் நண்பர்களே >
நேற்றைய சந்தைகள் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் சரிவு சரிவு என சரிந்து விட்டது . நேற்றைய உலக சந்தைகள் பெரிய அளவில் சரிவுகள் கண்டன ஆதலால் நமது சந்தைகள் சரிந்தது . எப்போது நான் கூறி வருவது போல உலக சந்தைகள் சிறிய சரிவின் பொழுது நமது சந்தைகள் நன்றாக சரிந்துள்ளன .
( மேலும் நமது சந்தைகளில்எதிர் பார்க்கப்பட்ட ரிசர்வ் வங்கி பாலிசி அறிவிப்பு சந்தைகளுக்கு பாதகம் அல்லாத போதிலும் கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைகளில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்ற செய்தி சந்தைகள் சரியா காரணம் ஆகும் . இதனுடன் வங்கித்துறை பங்குகளும் சற்று அதிகமாகவே சரிந்தன ... )
நேற்றைய சந்தைகள் துவக்கம் சற்று உயர்வில் இருந்தது பின்னர் சிறிது சிறிதாக சந்தைகள் சரிந்த வண்ணம் இருந்தன . ஆசியா சந்தைகள் முடிவில் 2 % வரை சரிந்துள்ளன . பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் சற்று நமது சந்தைகளுக்கு ஆதரவாக துவக்கம் சற்று பிளாட் நிலைகளில் இருந்தன . ஆனால் நமது சந்தைகளில் வந்த அதிக செல்லிங் காரணமாக சந்தைகள் சரிவில் இருந்து மீள முடியவில்லை .
மேலும் முக்கிய ஆதரவு நிலைகளான 4880 , 4850 .. ஆகிய இரு நிலைகளும் நேற்று உடைக்கப்பட்டு இருப்பது சந்தைகளின் பலவீனத்தினை காட்டுகிறது . ஆனாலும் நேற்று வந்த சரிவுகள் சற்று அதிகம் தான் என கருதுகிறேன் . மேலும் சந்தைகளில் இது போன்ற சரிவுகளின் பொழுது மக்கள் சற்று பதட்டம் அடைந்து விற்ப்பது தற்சமயம் அதிர்கரித்து வருவது குறிப்பிட தக்கது ....
நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே தடுமாட்டதுடன் வர்த்தகம் நடை பெற்றது . மேலும் அமெரிக்கா சந்தைகள் 10000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகத்தினை தொடர முடியாத சூழ்நிலை அங்கு ஏற்ப்பட்டுள்ளதாக கருதுகிறேன் ... வர்த்தக முடிவில் அமெரிக்கா சந்தைகள் பிளாட் நிலைகளில் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன .
இன்றைய ஆசியா சந்தைகள் சற்று காரணமின்றி சரிவுகளில் துவக்கம் ஆகி வர்த்தகம் நடை பெற்று வருகிறது . ஜப்பானிய சந்தைகள் சற்று சிறிய அளவிலான சரிவுகளில் வர்த்தகம் .. ஆனால் ஆசியா சந்தைகள் 1.5 % சரிவில் வர்த்தகம் நடந்து வருகிறது ...
இன்றைய நமது சந்தைகள் ஆசியா சந்தைகளின் போக்கினை பின்பற்றலாம் . மேலும் நாளை மறுதினம் பியுச்சர் சந்தைகள் முடிவுக்கு வருவதால் சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கங்களை காண முடியாது . மேலும் சந்தைகள் முக்கிய குருசியல் ஆதரவு நிலையான 4770 நிலைகள் மட்டுமே தற்பொழுது மிக முக்கியமானதாக இருக்கிறது என நான் கருதுகிறேன் ...
இன்றைய சந்தைகள் துவக்கம் சற்று ஆசியா சந்தைகளின் நகர்வுகளை ஒட்டியபடி இருக்கலாம் . ஆகவே GAP WOWN வரலாம் .. கவனமாக இருங்கள் நேற்றைய சரிவில் இருந்து சந்தைகள் கட்டாயம் மீளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன ..
முடிந்த வரை சந்தைகளின் போக்கில் செல்லுங்கள் ......
நிப்டி நிலைகள் : -----
ஆதரவு : ---- 4805 , 4770 , 4750 ....
எதிர்ப்பு : ---- 4850 , 4880 , 4920 ....
நன்றி !!!!