செவ்வாய், அக்டோபர் 27, 2009

வணக்கம் நண்பர்களே ,

நேற்றைய சரிவுகளை பார்த்து ஆச்சர்யமா ! ???

இன்றைய சந்தைகள் போக்கி அதை விட சற்று சரிவுகள் அதிகம் ஆகலாம் . அதை பற்றி பின்பு .....

நேற்றைய நமது சந்தைகள் துவக்கம் சற்று உயர்வுகளில் துவங்கின . பின்னர் சந்தைகள் சற்று ஆசியா சந்தைகளின் போக்கினை பின்பற்றி சற்று சரிவுகள் தவிர்க்க இயலாது போனது போலும் .....

நேற்றைய ஆசியா சந்தைகள் முடிவின் பொழுதும் ஐரோப்பிய சந்தைகள் துவக்கத்தின் பொழுதும் நமது சந்தைகள் பெரிதாக ஒன்றும் சரிவில் இருந்து மீள வில்லை . உலக சந்தைகள் அனைத்தும் உயர்வுகளில் தடுமாட்டம் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது நினைவு இருக்கலாம் ......

நேற்றைய நமது சந்தைகள் முடிவில் 26 புள்ளிகளை இழந்து 4970.90 புள்ளிகளில் முடிந்தது . நேற்றைய ஆசியா சந்தைகள் முடிவில் சிறிய அளவிலான உயர்வுகளில் முடிந்தன . ஐரோப்பிய சந்தைகள் துவக்கம் முதலே சற்று ஒரே நிலைகளுக்குள் வர்த்தகம் நடந்தது . ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 1 % வரை சரிவில் முடிந்தன .

அமெரிக்கா சந்தைகள் துவக்கம் சற்று சரிவில் இருந்தது அமெரிக்கா சந்தைகள் கச்சா என்னை விலைகள் கடந்த சில நாட்களாக ஒரு பெரிய ஏற்ற இறக்கங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது . மேலும் சந்தைகளும் சற்று சிறிய அளவிலான சரிவுகளை கண்டு வருகிறது . அமெரிக்கா சந்தைகள் நேற்றைய வர்த்தக முடிவில் 1 % வரை சரிவடைந்து முடிந்தன .

இன்றைய ஆசியா சந்தைகள் சற்று அமெரிக்கா சந்தைகளின் பிரதிபலிப்பானாக 1% வரை சரிவில் துவங்கி உள்ளன . வர்த்தக நேரத்தில் சந்தைகள் சற்று குறிப்பிட்ட புள்ளிகளுக்கு இடையே வர்த்தகம் நடந்து வருகிறது .

நமது சந்தைகள் ஆசியா மற்றும் அமெரிக்கா சந்தைகளின் போக்குகளை அப்படியே பிரதி பலிக்கலாம் .ஆனால் சந்தைக்ள துவக்கத்தில் உடன் லாங் செல்லலாம் . ஷார்ட் செல்ல வேண்டாம் . சந்தைகள் உடன் இழப்புகளில் இருந்து மீண்டு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன . கவனம் தேவை ....

வரும் நாட்களில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு சில கடன் மற்றும் வட்டி சம்பந்தமான் பாலிசி வெளிவரும் என எதிர் பார்க்கப்படுகிறது . ஆதலால் வங்கித்துறை பங்குகளில் லாபத்தினை உறுதி செய்யுங்கள் . புதியதாக முதலீட்டாளர்கள் லாங் மற்றும் முதக்லீடுகள் செல்ல வேண்டாம் .

தினசரி வர்த்தகர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் உபயோகிங்கள் ...

சந்தையின் போக்கில் வர்த்தகம் செய்யுங்கள் , குழப்பமான சூழ்நிலைகளில் சந்தையில் இருக்க வேண்டாம் ....

நிப்டி நிலைகள் : ---

ஆதரவு ---- 4950 , 4920 ,4880 ....

எதிர்ப்பு ---- 4980 , 5020 , 5050 ....

நன்றி !!!