திங்கள், அக்டோபர் 26, 2009

வணக்கம் நண்பர்களே

வெள்ளியன்று நமது சந்தைகள் அதிக உயர்வில் துவங்கின உலக சந்தைகளின் போக்கினை ஒட்டி ஆனால் சந்தைகளில் வந்த தொடர் செல்லிங் காரணமாக சந்தைகள் சரிந்தன . பின்னர் முக்கிய ஆதரவு நிலையான 5020 .4980 புள்ளிகளையும் சந்தைகள் இழந்து முடிவில் 4997.50 புள்ளிகளில் முடிவடைந்தன ..

உலக சந்தைகளின் போக்கும் வெள்ளியன்று சற்று சுணக்கம் கண்டது . ஐரோப்பிய சந்தைகள் சற்று பிளாட் நிலைகளில் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன . அதன் பின்னர் அமெரிக்கா சந்தைகளின் போக்கிலும் சற்று சரிவுகளே தொடர்ந்தன .அமெரிக்கா சந்தைகள் முடிவில் சற்று அதிக சரிவாக dow 109 புள்ளிகளை இழந்து வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன .

இன்றைய ஆசியா சந்தைகளில் hang seng விடுமுறை ஆதலால் ஆசியா சந்தைகளின் போக்கில் ஒரு உறுதியான நிலைகள் காணப்படவில்லை . மேலும் உலக சந்தைகள் பியுச்சர் துவக்கம் சற்று குறைவான புள்ளிகளில் பாசிடிவ் நிலைகளில் வர்த்தகம் நடந்து வருகிறது ..

இன்றைய நமது சந்தைகள் சற்று கேப் அபில் துவங்கும் வாய்ப்புகள் உள்ளன , அதிக பட்சம் 20 - 25 புள்ளிகளில் துவங்கலாம் . சந்தைகளில் இன்றைய நகர்வுகள் சற்று குறைவாகவே இருக்க வாய்ப்புகள் உள்ளன . மதியம் ஐரோப்பிய சந்தைகள் துவக்கத்தினை வைத்து தான் சந்தைகள் போக்கு சற்று பிடிபடும் ....

நிப்டி நிலைகள் : -

ஆதரவு : -- 4980,4950,4920 ...

எதிர்ப்பு : -- 5020 , 5050 ,5088 ...