வணக்கம் நண்பர்களே .
நேற்றைய நமது சந்தைகளில் முக்கிய எதிர் பரப்பான மராட்டிய மாநில தேர்தல் அறிவிப்புகள் மற்றும் இன்பிலேசன் அறிவிப்புகள் ஆகியன சந்தைகளில் ஒரு முக்கிய விஷயம் ஆகும் .. ஆனால் சந்தைகள் சற்று துவக்கம் முதலே சற்று சரிவுகளில் வர்த்தகம் ஆனது ..
பின்னர் வந்த அறிவிப்பில் தேர்தல் முடிவுகள் மற்றும் இன்பிலேசன் அறிவிப்புகள் சற்று சந்தைகளுக்கு சாதகமாக இருந்தும் சந்தைகள் சற்று சரிவினை காண ஆரம்பித்தது ..
ஆசியா சந்தைகளின் முடிவும் மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் துவக்கமும் நமது சந்தைகளுக்கு பெரிதாக ஒரு நகர்வுகளை தரவில்லை . ஒரே நிலைகள் மையமாக கொண்டு வர்த்தகம் ஆகின . பின்னர் சந்தைகள் முக்கிய ஆதரவு நிலையான 4980 நிலைகளை இழந்து சரிவுகள் சற்று குறைந்து பின்னர் முடிவில் சந்தைகள் 5000 புள்ளிகளுக்கு அருகில் முடிவுற்றது ..
நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் முதலே சற்று உயர்வில் துவங்கி வர்த்தகம் நடந்தது . பின்னர் சந்தைகளில் சரிவுகள் எதுவுமின்றி உயர்வுகலிலே முடிந்தன ..
இன்றைய ஆசியா சந்தைகள் துவக்க அமெரிக்கா சந்தைகளின் உயர்வினை ஒட்டியபடி 1% உயர்வில் துவங்கின , நமது சந்தைகளும் அதே போல துவங்கலாம் . ஆனால் சந்தைகளில் 5020 , நிலைகள் இன்றும் உடை பட்டாள் சந்தைகளின் பலவீனம் மற்றும் வார இறுதி வர்த்தகம் ஆகியன ஒன்று சேர்த்து சந்தைகளில் பெரிய சரிவினை உண்டாகலாம் என கருதுகிறேன் .
நிப்டி நிலைகள்
அதரவு --- 5020 , 4980 , 4950 ...
எதிர்ப்பு --- 5050 , 5088 , 5120 ...
நன்றி !!!!