வியாழன், அக்டோபர் 22, 2009

வணக்கம் நண்பர்களே ,

நேற்றைய சந்தைகள் சற்று சரிவடைந்தது ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் அல்ல . உலக சந்தைகள் சற்று உயர்வின் பொழுதும் அல்லது பிளாட் நிலைகளை கொண்டு வர்த்தகம் ஆகும் பொழுது நமது சந்தைகள் சற்று சரிவினை காண்பது ஒன்றும் புதிதல்ல ..

நேற்றைய நமது சந்தைகள் துவக்கம் முதலே சரியான இழுபறியாக வர்த்தகம் ஆகின . முக்கிய ஆதரவு நிலையான 5120 நிலையினை சந்தைகள் துவக்கத்தில் எட்டி பிடித்தாலும் பின்னர் தொடர்ச்சியான செல்லிங் காரணமாக சந்தைகள் சற்று சரிந்து அடுத்த ஆதரவு நிலையான 5080 புள்ளிகளை நீண்ட வர்த்தகத்திற்கு இடையில் உடைத்து கீழிறங்கியது .

இதன் மூலம் சந்தையின் பலவீனம் சற்று உறுதி செய்யபட்டுள்ளதாக கருதுகிறேன் . மேலும் சந்தைகளின் போக்கிலும் உலக சந்தைகளின் போக்கிலும் ஒரு சரியான நகர்வுகள் இல்லாவிடின் அடுத்த கட்ட நகர்வினை கணிக்க இயலாது என முன்னர் கூறியது நினைவு உள்ளதா ??

அதன் பின்னர் ஆசியா சந்தைகள் முடிவில் சிறிய அளவிலான சரிவில் முடிந்தன . ஆசியா சந்தைகள் நமது சந்தைகளில் நேற்று ஒன்றும் பெரிய தாக்கதினையோ அல்லது நகர்வினையோ உண்டாக்கவில்லை . மேலும் பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் சற்று வேகமாக சரிந்தன . அதன் பின்னர் நமது சந்தைகள் முக்கிய கட்டுபாட்டு புள்ளியான 5080 புள்ளிகளை இழந்தன .

முடிவில் நமது சந்தைகள் 50.85 புள்ளிகளை இழந்து 5063.60 புள்ளிகளில் முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் சற்று மதியம் முதலே சற்று சரிவுகள் அதிகமாக இருந்தன . பின்னர் சந்தைகள் துவக்கத்தின் பொழுது சந்தை இழப்பினை மீட்டு உயர்வுக்கு வரத்துவங்கின . மேலும் நேற்றைய பதிவில் குறிப்பிட்டது போல கம்மாடிட்டி சந்தையில் சற்று நகர்வுகள் மற்றும் அடுத்த இலக்குகள் சற்று தெளிவடைய ஆரம்பித்தன .

பின்னர் அமெரிக்கா சந்தைகள் மீண்டும் சரிவடைந்தன . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 1% வரை சரிவில் முடிந்தன .

இன்றைய ஆசியா சந்தைகள் துவக்கம் 1 % வரை சரிவடைந்து துவங்கி உள்ளன . இந்த இழப்புகள் அமெரிக்கா சந்தைகளின் முடிவினை வைத்து மேலும் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல அமெரிக்கா சந்தைகள் முந்தய இரு தினங்கள் 10000 புள்ளிகளுக்கு மேல் முடிந்தன . ஆனால் நேற்றைய சந்தைகள் சற்று 10000 புள்ளிகளை இழந்து முடிந்துள்ளன .

நமது சந்தைகளில் இன்று முக்கிய எதிர் பார்ப்பான மும்பை தேர்தல் முடிவுகள் வருள்ளன . மேலும் இன்று பணவீக்கம் பற்றிய அறிவுப்புகள் என முக்கிய இரண்டு அறிவிப்புகள் மேலும் உலக சந்தைகள் போக்கு (குறிப்பாக அமெரிக்கா பியுச்சர் சந்தை ) ஆகியவற்றினை வைத்து நமது சந்தைகளில் நகர்வுகள் இருக்கும் ..

தினசரி வர்த்தகர்களுக்கு : ---

சந்தை துவக்கத்திற்கு பின்னர் நிப்டி லாங் செல்லாம் ஸ்டாப் லாஸ் ஆக 5020 புள்ளிகளை வைத்துக் கொள்ளலாம் . அல்லது சந்தைகள் சரிவில் அல்லது மேற்குறிப்பிட்ட புள்ளிகளுக்கு அருகில் வரும் பொழுது ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் உடன் லாங் செல்லலாம் .

நிபிட்டி நிலைகள் :---

ஆதரவு ----- 5050 , 5020 , 4980 .....

எதிர்ப்பு ---- 5090 , 5120 , 5150 .....

நன்றி !!!

நண்பர்களுக்கு
ஒரு அன்பான வேண்டுகோள்

பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் அன்பர்களுக்கு தங்கள் வர்த்தக லாபத்தில் வாரம் ஒரு அன்னதானம் மாதம் ஒரு நலிவடைந்த குடும்பத்திற்கு சில உதவிகள் வருடம் ஒருவருக்கு கல்வி உத்வி செய்யுங்கள் ....

நீங்களும் மேன்மை அடைந்து நமது சமுதாய மற்றும் சமுதாய மக்களையும் மேன்மை அடைய செய்யுங்கள் ....

நன்றி
அன்புடன்

ரமேஷ்