புதன், அக்டோபர் 21, 2009

வணக்கம் நண்பர்களே ...

நேற்றைய ஆசியா சந்தைகள் சற்று முடிவில் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல அமெரிக்கா சந்தைகளின் தெளிவடையாத போக்கினை வைத்து பிளாட் நிலைகளில் நேற்றைய வர்த்தகம் முடிவுக்கு வந்தது .

நமது சந்தைகள் ஆசியா சந்தைகளின் முடிவின பின்னர் சரியா ஒரு நகர்வுகள் இன்றி சந்தைகள் சற்று சரிவினை கண்டன , மதியம் துவங்கிய ஐரோப்பிய சந்தைகளும் சரியான ஒரு நகர்வுகள் இன்றி சற்று சுணக்கம் கண்டன . நமது சந்தைகள் முடிவில் 27 புள்ளிகளை இழந்து 5114 .45 என்ற புள்ளிகளில் முடிவடைந்தன .

அதன் பின்னர் ஐரோப்பிய சந்தைகள் பெரிய அளவில் ஒரு நகர்வுகள் இன்றி சரிவிலேயே வர்த்தகம் ஆனது . ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 0.5 % வரை சரிவடைந்து முடிந்தன . மேலும் நேற்று அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் பெரிய அளவில் ஒரு நிலையில் வர்த்தகம் ஆகவில்லை என்பது குறிப்பிட தக்கது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் சற்று அதிக சரிவில் வர்த்தகம் துவங்கியது . பின்னர் சந்தைகள் ஓரளவு ஒரே நிலைகளில் வர்த்தகம் ஆயின பின்னர் அமெரிக்கா சந்தைகள் முடிவில் ஓரளவிற்கு உயர்வடைந்து சற்று இழப்பினை மீட்டு 0.5 % சரிவில் முடிந்தன .

இன்றைய ஆசியா சந்தைகள் வழக்கம் போல அமெரிக்கா சந்தைகளின் முடிவினை ஒட்டி துவங்கி உள்ளன . 0.5 % வரை சரிவில் துவங்கி உள்ளன . இன்றைய உலக சந்தைகள் அனைத்தும் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல அமெரிக்கா சந்தைகளில் ஒரு நகர்வுகள் நடந்தால் தான் நமது சந்தைகள் அடுத்த கட்ட நகர்வுகள் தெரியும் ..

இன்றைய சந்தைகள் நகர்வுகள் சற்று குறைவாகத்தான் இருக்க வாய்ப்புகள் உள்ளன .மேலும் அதிகரித்து வரும் கச்சா என்னை விலை , வீக்கமடைந்து வரும் டாலர் மதிப்பு . உலக சந்தைகள் உயர்வுகள் மற்றும் அதிக விலையிலும் தட்டுப்பாடுகள் வரும் அளவில் வர்த்தகம் ஆகும் உலோக பொருட்கள் மற்றும் தங்கம் வெள்ளி விலை உயர்வுகள் மற்றும் இவை அனைத்தின் அடுத்த கட்ட நகர்வுகளுக்காக அனைத்து சந்தைகளும் சற்று நிலுவையில் உள்ளன ..( வேகமின்றி )

நிபிட்டி நிலைகள் :----

ஆதரவு --- - 5120 , 5080, 5050 ....

எதிர்ப்பு ---- 5150 , 5185 , 5250 ...