வணக்கம் நணபர்களே !!
இனிய தீபாவளி திரு நாளை கொண்டாடி மகிழ்ந்தீர்களா ....
நான் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல சரியாக தீபாவளி அன்று சந்தைகளை சற்று இறக்கி பார்த்து சந்தோஷமடைந்துள்ளனர் . இருந்தாலும் இது ஒன்றும் பெரிய சரிவு அல்ல .. பியுச்சர் சந்தைகள் மட்டும் சரிந்து பிரிமியமில் இருந்து டிஸ்கவுன்ட் க்கு வந்துள்ளது அதுவும் 15 புள்ளிகள் வரை .......
வெள்ளியன்று அமெரிக்கா மற்றும்ஆசியா சந்தைகள் பெரிதாக ஒன்றும் நகர்வுகள் இல்லை .. அனைத்து உலக சந்தைகளும் 0.5 % வரை சரிவடைந்து முடிந்தன . திங்களன்று நமது சந்தைகள் விடுமுறை ...
நேற்றைய ஆசியா சந்தைகள் துவக்கம் முதலே நமது சந்தைகள் இல்லாததாலோ என்னவோ ஒரே வர்த்தக புள்ளிகளை வைத்து முடித்துக்கொண்டன . வர்த்தக முடிவில் ஆசியா சந்தைகள் 0.5 % வரை உயர்ந்து முடிந்தன . ஜப்பானிய சந்தைகளும் அதே போல சற்று உயர்வில் முடிந்தன .
நேற்றைய ஐரோப்பிய சந்தைகள் சற்று துவக்கம் முதலே நல்லதொரு உயர்வில் வர்த்தகத்தினை தொடங்கி வர்த்தகம் ஆயின பின்னர் சந்தைகள் அந்த உயர்வுகளை தாண்டி சென்று புதிய உயர்வுகளை எட்ட தொடங்கின அதற்க்கு ஏற்றார் போல் அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் சற்று 0.5 % வரை உயர்வில் வர்த்தகம் ஆனது . அதனை தொடர்ந்து ஐரோப்பிய சந்தைகள் சற்று உயர் அளவிலே வர்த்தகம் ஆகி பின்னர் 1.5 % - 2 % வரை உயர்வில் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன .
நேற்றைய அமெரிக்கா சந்தைகள் மீண்டும் தான் இழந்த 10000 புள்ளிகளை மீட்டது . சந்தைகள் துவக்கம் முதலே உயர்வுகளில் வர்த்தகம் ஆகின . பினர் அமெரிக்கா சந்தைகள் 1 % உயர்வில் முடிந்தன ..
இன்றைய ஆசியா மற்றும்ஜப்பானிய சந்தைகள் அமெரிக்கா சந்தைகளின் போக்கினை தொடர்ந்து ஒரு நல்ல உயர்வில் துவங்கி உள்ளன . ஆனால் சந்தைகளில் அடுத்த கட்ட நகர்வுகள் இனி சற்று குழப்பமாகவே இருக்கலாம் . ஆசியா சந்தைகளில் முடிவுகள் கூட இன்று சற்று குழப்பமாகவே முடியும் என கருத்து கிறேன் .
இன்றைய நமது சந்தைகள் சற்று சிறிய அளவிலான உயர்வுகளில் துவங்கலாம் . மேலும் நமது சந்தைகள் கடின இலக்கான 5250 நிலைகளை எட்டுவது சற்று கடினம் என்றே நினைக்கிறேன் . மேலும் அமெரிக்கா சந்தைகளின் அடுத்த கட்ட நகர்வுகள் தான் உலக சந்தைகளில் பெரிதும் எதிர் பார்க்கப்படலாம் .
நமது சந்தைகளில் இன்று ரிலியான்ஸ் நிறுவனத்தின் கோர்ட் சம்பந்தமான அறிவிப்புகள் உள்ளன .. கவனம் தேவை ....
இன்றைய நமது சந்தைகள் சற்று ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் போக்கினை பின் பற்றலாம் ...
நிபிட்டி நிலைகள் ----
ஆதரவு ---- 5120 , 5080 , 5050 ....
எதிர்ப்பு --- 5150 , 5185 , 5210 ... ....
நன்றி !!!
ரமேஷ்
எதிரியிடமும் அன்பு செலுத்துங்கள் .. அது எதிரியை கூட நல் வழிப்படுத்தும் நம்மையும் நல் வழிப்படுத்தும் ....