வணக்கம் !!
என்னடா இது புதுமையா காலையில் தானே பதிவினை படித்தோம் உடன் திரும்பவுமா !!!!
ஆம் நண்பர்களே @@@@@@@@@
இது ஒரு விழிப்புணர்வு பதிவு இந்த பதிவினை எழுத நேற்று முன்தினமே தயாராகி விட்டேன் .இருந்தாலும் இன்றைக்கு எழுதினால் தான் சரிவரும் என முடிவெடுத்து இன்று எழுதுகிறேன் . இது சற்று சந்தைகளின் பலவீனமான போக்கை காட்டலாம் ,
மன்னிக்கவும் ...
கடந்த சில வாரங்களாக சந்தைகள் சற்று ஆண்டு உயர்வுகளில் வர்தகமாகி வருவது தாங்கள் அறிந்ததே . இருந்த போதிலும் சந்தைகளின் தற்காலிக வளர்ச்சி சற்று அதிகப்படியானது என்பதினை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் .
உலக சந்தைகளும் சற்று அதே நிலைகளில் வர்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது ..இப்பொழுது நான் பேச விரும்பும் விஷயம் என்னவென்றால் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல கடந்தவார வர்த்தக தினங்களில் இருந்தே நான் சந்தையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன் .
ஒரு நாளில் முடிவடைந்த புள்ளிகளில் இருந்து அடுத்த நாள் அதிகரித்து முடிந்துள்ளன . அதே போல சந்தைகளில் முதலீட்டாளர்களின் மன போக்கினையும் சற்று மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது .அதாவது அனைவரின் கவனத்தினையும் வாங்குவதன் பக்கமாக திருப்ப முயற்சிக்கப்படுவதாக கருதுகிறேன் .
உதாரணம் : ----
நமது சந்தைகள் கடந்த சில தினங்களாக உயர்நிலைகளில் முடிக்கப்படுவதும் அந்த உயர் நிலைகளை அடுத்த நாள் தாண்டி செல்லவும் செய்கின்றனர் . அவ்வாறு செய்யப்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ஏற்கனவே நமது சந்தைகள் கடந்து வந்த உயர்வின் அளவிற்கு பங்குகளின் விலைகள் உயரவில்லை என்ற ஆதங்கம் உள்ளது .
இந்நிலையில் சந்தைகள் மேலும் மேலும் உயர்வினை அடைவது சற்று எனக்கு சந்தேகத்தினை வலுக்கிறது . காரணம் இவ்வாறு ஏற்ப்படும் உயர்வுகள் சமயத்தில் சந்தைகளில் பெரிய தாக்கத்தினை ( சரிவினை ) உண்டாக்கலாம் . சந்தையின் உயர்வினை உறுதி செய்வது போல் மேலும் மேலும் மீடியாக்களின் மூலமாக நுட்ப வரை படங்களின் படி சந்தைகளின் இலக்குகள் சற்று அதிகரித்துக் கொண்டே வருவது குறிப்பிட தக்கது ..
மேலும் எனது கணிப்பின் படி சந்தைகள் தொடர்ச்சியாக உயர்வுகளில் அதிகரித்து செல்லப்படுவது சற்று ஆச்சர்யத்தை அளிக்கிறது .ஏன் என்றால்சந்தைகளில் கடந்த வார மற்றும் இம்மாத நுட்ப காரணி வரை படங்களை வைத்து பார்த்தால் சந்தைகள் சற்று மிகப் பெரிய ஆபத்தினை எதிர் நோக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன ..
நிப்டி கேப் உயர்வு ---
நமது சந்தைகள் கடந்த வாரம் முதல் இந்த மாதம் முழுவதும் சற்று கேப் அப் வர்த்தகத்தினை மூன்று நாட்கள் நடத்தி உள்ளன .
அவையாவன
1. 5049.22 to 5085.27
2. 4917.04 to 4925.04
3. 4551.41 to 4570.29
இவ்வாறு மூன்று கேப் அப் இந்த மாதத்தில உருவாக்கி
உள்ளது .. மேலும் மக்கள் அனைவரும் இவ்வாண்டு தீபாவளி அன்று சந்தைகள் கட்டாயம் உயர்த்தப்படும் என எதிர் பார்ப்பில் உள்ளனர் , மேலும் நான் முன்பு கூறியது போல சந்தைகள் ஒரு நாள் உயர்வுகள் ஒரு நாள் தாண்டி செல்வது சந்தைகளின் போக்கினை சற்று உயர்வு என்று கூற வைக்கும் படி உள்ளது .
அவ்வாறு 4980 . 5020 , 5040 , 5100 ஆகிய உயரிய புள்ளிகளை கடந்து சந்தைகள் சில நாட்களாக முடிக்கப்பட்டுள்ளன . இன்றைய சந்தைகள் சற்று அதையும் மீறி 5150 புள்ளிகளுக்கு மேல் முடிந்தாலும் ஆச்சர்யப்படுவதர்க்கில்லை .
இன்றைய நிலவரப்படி முதலீட்டாளர்கள் நாளை அதிக அளவில் உள்ளே புதிய முதலீட்டாளர்கள் , நமது பழைய முதலீட்டாளர்கள் சந்தையில் வர்த்தகம் செய்ய ஆவலுடன் உள்ளதாக அறிகிறேன் ..
எதற்கும் நாளைய தினம் கவனமாக இருங்கள் .
சந்தைகளின் போக்கில் சென்று உடன் லாபத்தினை உறுதி செய்யுங்கள் ..
நன்றி !!
ரமேஷ் ..
( இந்த பதிவு முதலீட்டாளர்களின் விழிப்புணர்வுக்காக மட்டுமே )