வியாழன், அக்டோபர் 15, 2009

ஹாய் நண்பர்களே !!!

நேற்றைய நமதுசந்தைகள் எதிர் பார்த்ததை போல ஒரு திடீர் உயர்வினை அடைந்ததா @@@ இன்னும் பாக்கி உள்ளது . இன்றும் உயர்வு தான் . நேற்றைய நமது சந்தைகள் முக்கிய எதிர் நிலையினை கடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது . மேலும் நமது சந்தைகளில் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல அதிக ஷார்ட் கவரிங் காரணமாக சந்தைகள் தொடர்து உயர்ந்து வருகிறது .

நேற்றைய ஆசியா சந்தைகள் சற்று அதிகப்படியா உயர்வினில் முடிந்துள்ளன . அதிகபட்சமாக் 2 % வரையில் உயர்வினில் முடிந்தன . அதனை தொடர்ந்து துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் துவக்கமே GAP UP ஆக இருந்தன .

ஐரோப்பிய சந்தைகள் 1 % வரை உயர்வில் துவங்கி வர்த்தகம் ஆனது . அதன் பின்னர் அமெரிக்கா பியுச்சர் சந்தைகளின் போக்கினை பின் தொடர்ந்து ஐரோப்பிய சந்தைகளும் 2 % - 2.5% வரை உயர்வில் முடிந்தன .

டவ் எட்டியது 10000 ------------------------------------

நேற்றைய அமெரிக்கா சந்தையான டவ் ஜோன்ஸ் 10000 புள்ளிகளை கடந்து புதிய இவ்வாண்டு உயர்வினை கடந்தது
குறிப்பிட தக்கது . மேலும் நேற்றைய அமெரிக்கா சந்தைகளில் முக்கிய எதிர் நிலைகள் உடைபடுமா என்ற இரு வார சந்தேகங்கள் நேற்று முடிவுக்கு வந்தன ..

நேற்று வந்த ஹச் டி எப் சி காலாண்டு அறிக்கைகள் சற்று நன்றாக வந்துள்ள நிலையில் சந்தைகளில் அதன் தாக்கத்தினை இன்று எதிர் பார்க்கலாம் . மேலும் இன்று இன்பிலேசன் அறிவிப்புகள் உள்ளன . குறைந்து வரும் இன்பிலேசன் ஆதலால் அதை பற்றி குறிப்பிட எதுவும் இல்லை .

நமது சந்தைகள் நேற்றைய சந்தைகளில் 5100 புள்ளிகளை கடந்த 17 மாதங்களுக்கு பிறகு கடந்து புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிட தக்கது . கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் .................

உலக சந்தைகள் கூட அதே போல தான் ஒவ்வொரு சந்தைகளும் அதிக பட்ச உயர்வுகளில் வர்தகமாகி வருகின்றன என்பது குறி ---------- பிட தக்ககது .. ..
புரிகிறதா ...............

இன்றையஆசியா சந்தைகள் சற்று அமெரிக்கா சந்தைகளின் உயர்வினைபிரதிபளிப்பதாக துவக்கம் உள்ளது . ஆசிய சந்தைகள் 1.5 % - 2.5 % வரை உயர்வில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் அதனை பின் தொடர்ந்து உயர்வில் துவங்கலாம் .. நமது சந்தைகளின் இன்றைய போக்கு சற்று குழப்பமாகவே இருக்கும் ...

நிபிட்டி நிலைகள்

ஆதரவு -- 5120 , 5085 , 5050 ...

எதிர்ப்பு -- 5120 , 5150 , 5185 ...