வெள்ளி, அக்டோபர் 16, 2009

வணக்கம் நண்பர்களே ,

என்ன நேற்றைய சந்தைகள் எதிர் பார்த்ததை போல குழப்பமான வர்த்தகம் ஆனதா . ஆம் நண்பர்களே எனது கணிப்பின் படி உலக சந்தைகள் ஆண்டு உயர்வுகளில் சற்று திணறுவதாக கருதுகிறேன் ..


நேற்றைய நமது சந்தைகள் துவக்கம் முதலே சற்று சிறிய அளவிலான GAP UP இல் துவங்கி பின்னர் சற்று உயராமல் சரியதுவங்கின . பின்னர் ஆசியா சந்தைகளும் சற்று உயர்வில் இருந்து சரியதுவங்கியதும் நமது சந்தைகள் ஐரோப்பிய சந்தைகளை எதிர் நோக்கி காத்திருந்தன . ஆனால் ஐரோப்பிய சந்தைகளும் பெரிதாக உயர்வுகள் இன்றி சற்று சரிவிலேயே வர்த்தகத்தினை தொடங்கின ..

அதன் பின்னர் நமது சந்தைகள் சரிவினை காண ஆரம்பித்தன . பின்னர் நமது சந்தைகள் முடிவில் பிளாட் ( 5109 ) நிலைகளில் முடிந்தன .

ஐரோப்பிய சந்தைகள் நேற்றைய சந்தையில் சற்று பலமிலந்ததாக கருதுகிறேன் அதற்க்கு முந்தின உயர்வுகள் காரணமாக இருக்கலாம் .நேற்றைய ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 0.5 % அளவிற்கு சரிவில் முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே முக்கிய எதிர் நிலையான 10000 புள்ளிகளை கடக்க மிகுந்த சிரமம் ஏற்ப்பட்டது . ஆனால் இடையில் சந்தைகள் அந்த புள்ளிகளை கடந்து உயர்நிலைகளில் வர்த்தகம் நடந்தன ஆனால் தொடர்ச்சியான செல்லிங் காரணமாக சந்தைகள் சற்று உயர்வுகள் தடை பட்டன .. முடிவில் அமெரிக்கா சந்தைகள் 47 புள்ளிகள் மட்டும் அதிகரித்து முடிந்தன ..

இன்றைய ஆசியா சந்தைகள் நேற்று முன்தினம் போலவே சற்று உலக சந்தைகளின் போக்கினை எதிர் நோக்கி காத்துள்ளன . ஆக நமது சந்தைகளும் பிளாட் நிலைகளில் துவங்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன . இருந்தாலும் நாளைய தீபாவளி சிறப்பு வர்த்தகம் முதலீட்டாளர்களிடையே ஒரு ஈர்ப்பினை உருவாக்கி உள்ளது .

ஆக இன்றைய சந்தைகள் சற்று அதிக ஏற்ற இறக்கங்களை காண இயலாது என்றே கருதுகிறேன் . ஆனால் திங்களன்று சந்தைகள் விடுமுறை ஆதலால் அதிக ஷார்ர்ட் சந்தைகளில் வர வாய்ப்புகள் உள்ளன . அதே சமயம் தீபாவளி வர்த்தகம் அன்று சந்தைகள் ஒரு அதீத உயர்வினை காண போகின்றன என்று ஒரு சாரரும் அல்லது போன வருடத்திற்கு முந்தய வருடம்போல ஒரு பெரிய சரிவும் உள்ளது என்று சாராரும் எதிர் பார்த்துள்ளனர் ..

கவனம் தேவை ...

நன்றி !!!

நிப்டி நிலைகள் --

ஆதரவு ---- 5085, 5050 , 4980 ..

எதிர்ப்பு ---- 5120 , 5150 ,5185