புதன், பிப்ரவரி 03, 2010

கமாடிட்டி எனும் வணிக சந்தை

திங்கள், 23 மார்ச், 2009
கமாடிட்டி எனும் வணிக சந்தை !!!
கமாடிட்டி வணிகமும் பங்கு வணிகத்தினைபோல ஒரு ஊகவணிகமே .
ஆனால்பங்குகளாவது காரணமில்லாமல் தடால் எனவிழாது .
ஆனால் கமாடிட்டி சந்தையில்பொருட்களின் வரத்து மற்றும்
அதிக தயாரிப்புதரம் குறைவு ஆகியவற்றால் உடனுக்குடன்அதிகப்படியான ஏற்றமும் இறக்கமும் சந்தையில்உருவாக்கப்பட்டு பின்னர் பழைய நிலையையேகூட கொண்டு வருவார்கள் ..


இதில் ஈடுபட கமாடிட்டி டிரேடிங் அக்கௌன்ட்ஓபன் செய்ய வேண்டும் . (பங்கு வணிகத்தில்ஈடுபட அக்கௌன்ட் ஓபன் செய்வது போன்றேஇதற்க்கு பான் கார்டு , வீட்டு முகவரி சான்று ,வங்கி கணக்கு சான்று , ஆகியவை தேவை.)பின்னர் வணிகத்தில் ஈடுபடலாம் .

இதில் நாம் தேசிய பங்கு சந்தையில் பியுச்சர்வணிகத்தில் எப்படி வணிகம் செய்கிறோமோஅதே போல தான் "மார்ஜின் " தொகையை மட்டும்செலுத்தி கமாடிட்டி சந்தையில் வணிகமாகும்எந்த ஒரு பொருளையும் நாம் வணிகம்செய்யலாம் . அதே போல எந்த மாதஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருள்தேவையோ அந்த மாதத்தில் வாங்கலாம்விற்கலாம்.

மற்ற படி எந்த கட்டு படும் இல்லை . சந்தையில்விலை ஏற்றம் மற்றும் இறக்கம் நம்முடையது.அதற்க்கு உண்டான லாப நஷ்டம் நம்முடையது ..

நாம் எந்த மாத ஒப்பந்தத்தின் அடிப்படையில்பொருள் வாங்குகிறோமோ அந்த மாதம் முடிவுதினம் வரை வைத்து கொள்ளலாம் ( ?) இந்தகேள்விக் குறிக்கு விட கீழே .......

கமாடிட்டி வணிகத்தில் ஒப்பந்த முடிவு தேதிக்குமுன்னர் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும்கட்டாய டெலிவரி எடுக்க வேண்டும் என்றநிபந்தனை விதிக்கிறது .. மேலும் அதன் மார்ஜின்தொகையை அதிகப்படுத்துவர்கள் .

( உதா ; தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றைவியாபாரம் செய்யும் பொழுது யாருக்கு டெலிவரிதர வேண்டும் .. என்ற கணக்கிற்காக இந்த முறைகடை பிடிக்க படுகிறது .)

ஏன் எனில் கடைசி வர்த்தக தினத்தன்று உள்ளபொசிசனை வைத்து தான் சந்தையில் யார்யாருக்கு டெலிவரி யார் யார் விற்பனைசெய்யவார்கள் என்ற கணக்கு தெரியும் . ஆதலால்இந்த கட்டு பாடு ..

சரி நண்பர்களே !!!
சந்தை வியாபார முறை மற்றும் எப்படி உள்ளேவருவது போன்ற விபரங்களை பார்த்தோம் .. இனிஇதில் உள்ள வியாபார நுணுக்கங்களை மற்றும்சிக்கல்களை பார்ப்போம் ..

கமாடிட்டி சந்தையில் " 200 " க்கு அதிகமானபொருட்கள் வர்த்தகம் ஆகின்றன . நாம் அதிகம்உபயோகப்படுத்தும் பல பொருட்கள் வணிகத்தில்உள்ளன . நாம் கடைகளில் பார்க்கிறோமேஅதுபோல தான் பொருள் வரத்து அதிகரித்தால்எப்படி விலை சரியுமோ அது போல தான் இங்கும். ஆனால் சந்தையில் சரியும் விலையை விடஅதிகமா சரியும் அதேபோல பொருள் வரத்துகுறையும் போதும் கடைகளை விட அதிகமாகஏறும் . இந்த இரு நிலைகளையும் மாற்றி கூடசெய்வார்கள் .. பொருள் கடைகளில் குறையும்பொழுது சந்தையில் செயற்கையாக விலையைஅதிகப்படுத்துவர்கள் . அதே போல கடையில்பொருள் விலை அதிகரிக்கும் பொழுது சந்தையில்செயற்கையாக பொருள் விலை இறங்கும் ..இதுவும் நாம் பங்கு சந்தையில் கூறுவது போலஆபரேடர் கைங்கர்யம் தான் ....

நண்பர்களே கவனமிருக்கட்டும் !!!நாம் செய்வது பியுச்சர் வணிகம் எதிர் காலத்தைகணக்கில் கொண்டு வணிகம் செய்கிறோம் . (பின்னாளில் பொருள் சந்தை வரத்து குறைந்தால்அல்லது அதிகரித்தல் ) . ஆதலால் கவனம் அதிகம்தேவை .

மேலும் சந்தையில் வணிகமாகும் தங்கம்,வெள்ளி , காப்பர் , அலுமினியம் ,கச்சா என்னைபோன்ற முக்கியமான பொருட்களும் வணிகம்ஆகின்றன இந்த பொருட்கள் எல்லாம் உலகசந்தையில் வணிகமாகும் விலையின்அடிப்படையில் இங்கு வணிகம் ஆகின்றன . (உதா ; கச்சா என்னை , தங்கம் , வெள்ளி ,போன்றவை அமெரிக்காசந்தையில்வணிகமாகும் விலையின் அடிப்படையில் தான்இங்கு வணிகமாகும் . அதே போல காப்பர் மற்றும்மெட்டல் சம்பந்தமான பொருட்கள் விலைலண்டன் மற்றும் சீன சந்தை விலைகளைபொறுத்து வணிகமகும் .

ஆகவே நமது கவனம் உலக சந்தைகளைபார்த்தபடியே இருக்க வேண்டும் ..அதுவும்கமாடிட்டி சந்தைகளை ஒவ்வொரு சந்தையின்துவக்க நேரம் தெரிந்து கொண்டு தவறாதுகண்காணிக்க வேண்டும் . அப்படி கவனத்துடன்வணிகம் செய்தல் தான் கமாடிட்டி சந்தையில்லாபத்தினை ஈட்ட முடியும் ..

நமது சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கத்தினைதடுக்க சர்க்யுட் பில்ட்டர் உள்ளது போல கமாடிட்டிசந்தையிலும் சர்க்யுட் பில்ட்டர் உள்ளது ஆனால்நமது சந்தையில் வணிகம் நிறுத்தப்படுவதுபோல அங்கு வணிகம் நிறுத்த மாட்டார்கள்தொடர்ச்சியாக சர்க்யுட் பில்ட்டர்அதிகப்படுத்துவர்கள் . அதற்க்கு 15 நிமிடம்சம்பந்தப்பட்ட பொருள் வணிகம் ஆகாமல்நிறுத்தப்படும் பின்னர் தொடர்ந்து வணிகம் ஆகும்..

நன்றி நண்பர்களே தங்கள் மேலான கருத்துக்களைஅனுப்பவும் ..

அன்புடன்

ரமேஷ்