செவ்வாய், ஜனவரி 12, 2010

வணக்கம் நண்பர்களே ,

அனேக எனது வலைதள வாசகர்களின் வேண்டுகோளின் படி எனது பழைய வலை தளமான http://rams-niftyfifty.blogspot.com இல் இருந்து சில முக்கிய பதிவுகளை இந்த வலையினுள் தர முடிவு செய்துள்ளேன் ..

தங்கள் ஆதரவிற்கு நன்றி ..

முக்கிய பதிவுகள் சிறிது சிறிதாக மீண்டும் இந்த தளத்தில் தினசரி வலைப்பூக்கள் ஆரம்பிக்கும் வரை வெளியிடப்படும்

நன்றி

ரமேஷ்

good bye --மிட் கேப்ஸ்

வணக்கம் !!!

ஒரு விழிப்புணர்வு பதிவு !!!!!!!!

முதலீட்டளர்களுக்கு மட்டும் .......

வணக்கம் அன்பு முதலீட்டாளர்களே !தற்போதைய சந்தைகளில் தங்களுக்கு விற்கலாமா வேண்டாமா என்று சந்தேகம் ஏற்படும் வகையில் சந்தைகள் தினம் உயர்த்தப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை தான் .ஆனால் சந்தைகள் இது போல தான் உயர்ந்து கொண்டே செல்லும் என சென்செக்ஸ் இன் அதிக பட்ச விலைகளில் நடந்தது நாம் அனைவரும் மறந்திருக்க மாட்டோம் .சரி விசயத்துக்கு வருவோம..

நமது சந்தைகள் வரலார்ருகானாத அளவு உயர்ந்து வருகிறது . சந்தைகளில் இந்த திடீர் உயர்வுகளில் உயர்ந்த மிட் கேப் பங்குகள் சரிவில் என்னவாகும் .தற்சமயம் திடீர் என உயர்த்தப்பட்டு வரும் பங்குகள் அடிக்கடி வாங்குபவர் மட்டும் இருக்கும் நிலைகள் இதே போல சந்தைகள் சரிவடையும் பொழுது செல்லர் மட்டும் இருக்கும் படியான வர்த்தகம் தான் நடைபெறும் .அவ்வாறு நடந்தால் தங்கள் பங்குகளை விற்க சில மாதங்கள் கூட ஆகலாம். அது வரை செல்லர் பிரீஸ் ஆகி கொண்டு இருந்தால் பங்குகளின் விலைகள் பெரிய சரிவுகளை காண நேரிடும் .

ஆகவே நண்பர்களே அது போல பங்குகளை இனம் கண்டு உயர்வில் வெளியேறுங்கள்.

மேலும் உங்கள் முதலீடு சரிவில் மட்டும் இருக்கட்டும் .

நன்றி !!!

சனி, ஜனவரி 02, 2010

உலக நிகழ்வுகள் சிறு பார்வை மறு பதிவு

வணக்கம் நண்பர்களே !

அனைவருக்கும் வணக்கம் .

எனது அறிவிப்பின் படி மின் மடல் செய்த நண்பர்கள் அனைவரும் கேட்டசந்தைகள் மற்றும் நிப்டி போக்குகள் பற்றி ஒரு பெரிய பதிவினை காணலாம் . முடிந்தால் ஒரே பதிவாக தர முயற்சிக்கிறேன் .........

நமது சந்தைகள் பற்றிய பேச்சை எடுத்தாலே என்னமோ அமெரிக்கா பொருளாதார பிரச்சனை சம்பந்தமாக எழுதுவது போல மிகவும் யோசித்து எழுத வேண்டி உள்ளது . கடந்த பல பதிவுகளில் நான் கூறியுள்ள பதிவுகளை சற்று ஆங்காங்கே நினைவு படுத்திக் கொள்ளவும் .

முதலில் இதற்குள் செல்லும் முன் உலக சந்தைகள் பற்றி சிறு விளக்கம் உலக சந்தைகள் பலவும் இழந்த புள்ளிகளை மீட்டு தொடர்ந்து உயர்ந்து வந்து கொண்டுள்ளன . இதை நல்லதொரு போக்காக வைத்துக் கொண்டாலும் பல சந்தைகளில் போக்குகள் அமெரிக்கா சந்தைகளை வைத்தே செல்வது நாம அறிந்த ஒன்று தன் இருந்த போதிலும் கடந்த 25 நாட்களாக அமெரிக்கா சந்தைகள் சற்று உயர்வுகளை தாண்டி செல்வதும் பின்னர் சில புள்ளிகள முடிவில் சரிவதுமாக உள்ளன ..

அதே போக்கினை ஆசியா , மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் கடை பிடித்து வந்துள்ள சூழலில் ........


..............அடுத்தது துபாய் பிரச்சனை -துபாய் பிரச்சனை பற்றிய சிறு விளக்கம் பிரச்சனை என்னவென்றால் துபாய் அரசு ஒன்றும் பெரிய அளவிலான கச்சா எண்ணெய் கிணறுகளை வைத்திருக்கவில்லை . மேலும் உள்ள கச்சா எண்ணெய் கிணறுகளை வைத்து சில வருடங்கள் தான் காலத்தினை ஓட்ட முடியும் என்ற சூழ்நிலை ....

இத்தனை பெரிய சிக்கல் வந்தால் துபாய் மண்ணை கவ்வ வேண்டி வரும் என்பதால் அந்நாட்டு மன்னர் பலே பாண்டிய மாதிரி ஒரு வேலையினை செய்துள்ளார் . துபைக்கு வரும் அந்நிய முதலீடுகளுக்கு குறிப்பாக கட்டுமான துறைக்கு அளவில்லாத சலுகைகள் மற்றும் அந்நிய கரன்சிகள் கள்ளத்தனமாக அதிக அளவில் உள்ளே வர அனுமதி வழங்கியது . அதுவும் வரியில்லாமல் ..

மேலும் துபாய் நாட்டினை ஒரு சுற்றுலா மையமாக கொண்டுவர பல முயற்சிகள் செய்தன . அவை அளவுகடந்த சலுகைகள் ஆகின உலகம் முழுவதிலும் உள்ள பண முதலைகளை துபைக்கு வரவழைத்தது மற்றும் கணக்கற்ற முதலீடுகள் என டாலரை அள்ளி கொட்டி கட்டுமான துறையில் சில வெளிநாட்டு நிறுவனக்கள் வந்து துபையில் கூடாரம் போட்டன .

பின்னர் அரசு தான் செய்து வந்த ஒரு பெரிய முட்டாள் தனமான செயல் உலகிலேயே சிறந்த கட்டிடம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியன பெரும் பொருட் செலவில் கட்டி முடிக்கப்படாத நிலையில் பல கட்டிடங்களுக்கு பணத்தேவைகள் அதிகமயின ..

இதன் பின்னர் தான் துபாய் அரசு அமெரிக்காவிற்கு தர வேண்டிய என்பது பில்லியன் டாலர் கடன் வெளியே தெரிய ஆரம்பித்தது . பின்னர் அதற்க்கு துபாய் அரசு இன்னும் ஆறு மத கால அவகாசம் கேட்பதாக வெளியே தகவல்கள் கசிய ஆரம்பித்தது அவ்வாறு வந்தால் அமெரிக்கா சற்று பொருளாதார நெருக்கடிகள் வரலாம் என்று கருதப்பட்டது..

.உடனடியாக அந்த செய்தி உலக சந்தைகளில் சரிவுகள் மற்றும் கமாடிட்டி சந்தைகளில் சரிவுகள் என எல்லாம் ஒரே நாளில் மண்ணை கவ்வ செய்தன . பின்னர் துபாய்க்கு கை கொடுக்க அவன் வரான் இவன் வரான் என ஆறுதல் கூறி எல்லாம் சற்று உயர ஆரம்பித்தன ... தற்போதைய சூழ்நிலை என்னவென்றால் அபுதாபி உதவி செய்ய முன் வந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன .. ( இவங்க இப்படித்தான் எசமான் -- சொல்றத கேட்க ஆள் இருக்கு அப்புறம் என்ன கவலை -- அள்ளி விட வேண்டியது தான் )

அமெரிக்கா பற்றி எழுத எனக்கு இன்னும் அறிவு பத்தலைன்னு தான் நினைக்கிறேன் நண்பர்களே !!!ஏன் என்றால் அங்கு வேலை இல்லாதோர் அறிவிப்பிற்கும் ( தொடர்ந்து வேலையிலந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது )மற்றும் நாட்டின் பொருளாதாரமும் சிறுதுளி கூட சம்பந்த மில்லை என்பது போலவும் நாம் டிபன் சாப்பிடுவது போல அங்கே நோட்டு அதாங்க டாலர் அச்சடிக்கறாங்க போல் தகவல் ...
என்ன மேலே சொன்னது சரி தானாமற்றபடி உலகின் பல நாடுகள் இன்னும் நல்லதொரு பொருளாதார சூழ்நிலைக்கு வரவில்லை என்றும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன என்பதும் ஒரு சிறிய தகவல் ...........

பதிவுகள் தொடரும் ....