திங்கள், அக்டோபர் 12, 2009

வணக்கம் நண்பர்களே !!

இன்றைய நமது சந்தைகள் பிளாட் நிலைகளில் துவங்கலாம் என நினைக்கிறேன் காரணம் இன்றைக்கு ஜப்பானிய சந்தைகள் விடுமுறை ஆதலால் ஆசியா சந்தைகள் சில குழப்பமான சூழலில் வர்த்தகம் ஆகி வருகிறது .

இன்றைய ஐரோப்பிய சந்தைகளின் துவக்கத்திற்கு பிறகு தான் நமது சந்தைகள் சற்று சூடு பிடிக்க ஆரம்பமாகும் . அமெரிக்கா பியுச்சர் சந்தைகளும் சற்று சில புள்ளிகள் மட்டுமே அதிகரித்து வர்த்தகம் ஆகி வருகிறது . இது நமது சந்தைகளுக்கு பெரிய தாக்கத்தினை தராது .

அடடா முக்கியமான விஷயம் குறிச்சுக்கோங்க !!!!!!!

அணில் அம்பானி திடீரென முகேஷ் அம்பாநிகிட்ட சமரசமாக போக விருப்பமின்னு ஒரு செய்தி வந்து இருக்கு . அதனால் சந்தைகள் சற்று உயர்வு அடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன .

மேலும் நாளை நடக்கவுள்ள மகாராஷ்டிரா தேர்தல் சந்தைகளில் ஒரு கலக்கதினை ஏற்ப்படுத்தலாம் என கருதுகிறேன் .

எதற்கும் சந்தைகளில் ஷாட் நிலைகளில் உள்ளவர்கள் அனைத்து நிலைகளில் இருந்து வெளியேறுதல் நல்லது அல்லது ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் வைத்து வணிகம் செய்தல் நலம் என நினைக்கிறேன் .

தினசரி வணிகம் செய்பவர்கள் ரிலையன்ஸ் நிறுவன பங்குகளில் ஷார்ட் செல்ல வேண்டாம் . நிபிட்டி முக்கிய ஆதரவு நிலைகளான 4920 நிலைகள் உடைபடாமல் சந்தைகள் 4950 இக்கு மேல் துவங்கினால் சந்தைகள் 5000 புள்ளிகளை தொடமுயற்சிக்கலாம் . அல்லது 4920 புள்ளிகளை சந்தைகள் இழந்தால் 4860 வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளன .

எதற்கும் மேலே சொன்ன இரு விடயங்களை மனதில் கொள்ளவும் . அல்லது சந்தையினை விட்டு விலகி இருங்கள் இப்போதைக்கு இது தான் நல்லது ..

மேலும் நமது சந்தைகள் நாளைய தினம் விடுமுறை மேற்சொணன் இருவிடயங்களை வைத்துப்பார்த்தால் சந்தைகளுக்கு சாதகமாக அந்த செய்திகள் அமைந்தால் சந்தைகளில் ஒரு பெரிய உயர்வுகள் திடீரென நடக்கக் வாய்ப்புகள் அதிகம் உள்ளன

நன்றி !!

ரமேஸ்

ஞாயிறு, அக்டோபர் 11, 2009

விடுமுறை பதிவு - தீபாவளி

வணக்கமுங்கோ !!!

என்ன நண்பர்களே தீபாவளி நெருங்கி வருகிறது . பலகாரங்கள் இனிப்பு மற்றும் பட்டாசு புத்தாடைகள் வாங்கி விட்டீர்களா ,...

ஏதோ நரகசுரன் அழிக்கப்பட்டது என்னவோ ஒரு முறை தான் ... ஆனால் நம் மக்கள் எல்லோரும் பல ஆண்டுகளாக கொண்டாடி மகிழுந்து வருகின்றனர் . இருந்தாலும் இவ்வாறு கொண்டாடுவது கூட ஒரு முறையில் ஒரு நல்ல விஷயம் தான் எப்படி என்கிறீர்களா ?

ஒரு குடும்ப தலைவன் மனைவி மக்கள் உற்றார் உறவினர் உடன் சந்தோசமாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒரு அருமையான பண்டிகை தான்தீபாவளி ..

இவ்வாறு முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படும் பொழுது எந்தொரு மனிதனும் சில விசயங்ககளை திருத்தி கொள்ள வாய்ப்புகள் கிடைக்கிறது .உதாரணமாக சொந்த பந்தங்கள் அனைவரையும் சந்திக்க நேரும் பொழுது அனைவரது மனமும் லேசாகும் . சண்டை சச்சரவுகள் குறையும் ..பரஸ்பரம் அனைவர் உள்ளத்திலும் ஒரு அமைதி குடி கொள்ளும் ...

உண்மையாக சொன்னால் எனக்கு தீபாவளி கொண்டாட பிடிக்காது . காரணம் மக்கள் கடிணமாகபல நாட்கள் உழைத்து சம்பாதித்த பணத்தினை சில நாட்களில் செலவு செய்வது .நம் மக்களிடையே இன்னும் சில தவறான பழக்கங்கள் உள்ளன . அவையாவன ஒரு சில செயல்கள் மட்டுமே வெளியில் கூற இயலும்

ஒரு பண்டிகை வந்தால் அடுத்த வீட்டுக்காரன் துணி எடுத்தால் அதன் பின்னர் அவனை விட 10 ரூபாய் சேர்த்து எடுத்தல் தான் திருப்தி அடைவான் ..

அடுத்த வீட்டு ராமசாமி குப்புசாமி எல்லாம் பட்டாசு 500 ரூபாய்க்கு வாங்கினால் இவன் 700 வாங்கினால் தான் திருப்தி

ஆனால் மேற்சொன்ன இரு விடயங்களிலும் நம் ஆட்கள் அவனது தன்மானம் மட்டுமே பார்ப்பானே தவிர மனைவி மக்கள் சந்தோசத்தினை பார்க்க மாட்டன் . (ஆனால் நான் கூறுவது பல ஆண்டுகளுக்கு முந்தய மக்கள் பழக்கத்தினை முந்தய பொருளாதார சூழலுக்கு பின்னர் இப்பொழுது மாறிவிட்டதாக கருதுகிறேன் )

இப்பொழுது மக்களிடையே எதை எவ்வாறு செய்வது என்ற அனுபவமும் மற்றும் சமுதாயத்திலே நன்றாக வர வேண்டும் என்ற எண்ணமும் நன்றாக வந்துள்ளது . நல்ல முறையில் நல்ல செயல்களை செய்து நற் பெயர் பெற்று இருந்தால் நமது சந்ததிகள் நல்ல முறையில் வாழ முடியும் ..

முடிந்த வரை அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள் . அனைவரையும் நேசியுங்கள் . வாழ்கை வாழ்வதற்கே என்று வீம்புடன் இருக்காதீர்கள் அது உங்களையும் உங்கள் சந்ததிகளையும் வாழ்கையில் சில இழப்புகளை சந்திக்க செய்யும்

முடிந்தால் இயற்கையை நேசியுங்கள் அது உங்களுக்கு பல பாடங்களை சொல்லி தரும் அதை வைத்து வாழ்வில் இனிமை பெறலாம்

நன்றி

இது போல் இன்னும் ஒரு -

நன்றி

ரமேஷ்

புதிய பதிவு - தலைப்பு விடுமுறை பதிவு

வணக்கம் நணபர்களே !
விடுமுறை பதிவு என்ன தலைப்பை பார்த்ததும் முடிவு செய்து இருப்பீர்களே அதே தான் பழைய எனது வலை பதிவில் அளித்த விழிப்புணர்வு இடுகைகள் போல இது முடித்த வரை வரும் வாரம் சந்தைகள் போல தொடர முயற்சிக்கிறேன் ..

இதில் முற்றிலும் சந்தைகள் பற்றிய விஷயம் இருக்காது . மற்ற பல விசயங்கள் நண்பர்களின் உரையாடல்கள் பற்றி செய்திகள் இன்னும் பல

தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

நன்றி

ரமேஷ்

சனி, அக்டோபர் 10, 2009

வரும் வாரம் சந்தைகள் - October 10, 2009

வணக்கம் நண்பர்களே !

கடந்த வாரத்திற்கு முந்தய வாரம் நமது சந்தைகள் சற்று அதிக பட்ச புள்ளிகளை நிலைகளாக வைத்து நமது சந்தைகள் வர்த்தகம் ஆனது நினைவிருக்கிறதா நண்பர்களே .. ஆம் நமது சந்தைகள் அந்த வாரத்தில் சற்று அதிக பட்ச அதாவது இவ்வருட உயர்ந்த புள்ளிகளுக்கு அருகில் வர்த்தகம் ஆகின உலக சந்தைகள் அனைத்தும் அந்த நாட்களில் சற்று அதிக பட்ச சரிவினை அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது .

ஆக இந்தவார உலக சந்தைகளின் நிலைகளை வைத்து பார்த்தால் உலக சந்தைகள் அனைத்தும் இவ்வார வர்த்தகத்தில் கிட்டத்தட்ட அமெரிக்கா சந்தைகள் 3.5 % - 5% வரையிலும் ஐரோப்பிய சந்தைகள் 4% - 5% வரை உயர்ந்துள்ளன . ஆசியா சந்தைகளும் இத்தனை பிரதிபலிக்கும் விதமாக 3 % - 4% வரையிலும் மற்றும் ஜப்பானிய சந்தைகள் 3 % வரையிலும் உயர்வில் முடிந்துள்ளன . ஆனால் நமது சந்தைகள் சற்று சரிவடைந்து அதிக பட்ச சரிவாக 2 % வரை சரிவில் முடிந்துள்ளன ..

வரும் நாட்களிலும் மற்றும் உலக நாடுகளிலும் இது பண்டிகை காலம் என்பதால் தங்கத்தின் விலைகள் சற்று தொடர்ச்சியாக வரும் நாட்களில் உயர வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது . மேலும் தங்கத்தினை விட வெள்ளியில் முதலீடுகள் அதிகரித்து வருவத்தாகவும் தெரிகிறது . இவ்வாறு உலக சந்தைகளில் சற்று முதலீடு முறைகள் மாறும் பொழுது பங்கு சந்தைகளும் மற்றும் அதனை சார்ந்த திட்டங்களிலும் மக்கள் முதலீடுகள் சற்று குறையும் வாய்ப்புகள் சற்று உள்ளன .

ஆகவே உலக சந்தைகளின் போக்கினை சற்று உற்று நோக்கினால் அனைத்து சந்தைகளும் முக்கிய எதிர் நிலைகளை கடக்க இயலாமல் சற்று தடை படுகிறது மேலும் அந்த நிலைகளில் சற்று செல்லிங் அதிகரிக்கிறது . இது கடந்த சில நாட்களாக நமது சந்தைகளில் நடை பெற்று வருவதாக தெரிகிறது . இது நமது சந்தைகளில் மட்டுமல்லாது உலக சந்தைகளிலும் சற்று அதிகரித்து வருகிறது .

மேலும் ஆசியா சந்தைகள் மற்றும் ஜப்பானிய சந்தைகளும் சற்று சரிவினை காண வாய்ப்புகள் அதிகம் உள்ளன . ஏன் எனில் அந்த சந்தைகள் சற்று உயர்வுகளில் வர்த்தகம் ஆகி வருகிறது மேலும் அங்கு அந்த சந்தைகளில் நல்லதொரு உயர்வினை வைத்து வர்தகமாகிறது .

இப்போதைய சூழ்நிலையில் அமெரிக்கா சந்தைகள் முக்கிய எதிர் நிலையான 9858 நிலைகளை கடக்க முயன்றால் சந்தைகள் 10120 வரை செல்லும் வாய்ப்புகளை மறுக்க இயலாது .

அதே போல முன்பு கூறியது போல ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் சற்று அதே போக்கினை கடை பிடிக்கலாம் .

நமது சந்தைகளை பொறுத்த வரை முக்கிய எதிர் நிலைகளாக இருந்த 5088 நிலைகளை கடக்க இயலாம ல்சந்தைகள் சற்று தடுமாறுவது சற்று சரியான விஷயம் தான் . ஆனால் முக்கிய அதரவு நிலைகளான 4950 - 4920 நிலைகள் சற்று உடை பட்டால் சந்தைகளில் சரிவினை தடுக்க இயலாது என்றே கருதுகிறேன் .

மேலும் நமது சந்தைகள் சற்று இப்போதைய உயர் வர்த்தக சூழலில் முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரவுள்ளதால் சந்தைகள் போக்கினை அவ்வளவு எளிதாக யாரும் கணிக்க இயலாது என்றே கருதுகிறேன் . இருந்தாலும் நமது சந்தைகளில் முக்கிய ஆதரவு நிலையான 4920 நிலைகள் உடை பட்டால் சந்தைகள் 4860 வரை சரிவடையலாம் ..

கவனமாக இருங்கள்


முக்கிய க்ருசியல் நிலைகள்

ஆதரவு -- 4920 , 4850 , 4770 ------------

எதிர்ப்பு --- 4985 , 5020 , 5080 ............

நன்றி

அன்புடன்

ரமேஷ்

வணக்கம்
நேற்றைய நமது சந்தைகள் நல்லதொரு பாடத்தினை நமக்கு கற்றுக் கொடுத்தது என்றே சொல்லலாம் ஏன் என்றால் நல்ல காலாண்டு அறிக்கை என எதிர் பார்க்கப்பட்ட இன்போசிஸ் பங்குகள் சற்று உயர்வில் துவங்கி சந்தையையும் சற்று உயர்விற்கு கொண்டு சென்றது . பின்னர் சந்தைகள் சற்று சரிய துவங்கின ...

நேற்றைய ஆசியா சந்தைகள் பிளாட் நிலைகளில் துவங்கி அதே நிலைகளில் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன . நமது சந்தைகள் எதிர் பார்த்ததை போல ஆசியா சந்தைகளின் போக்கினை நேற்று பின்பற்றவில்லை . காரணம் தெரியவில்லை . ஏன் எனில் ஆசியா சந்தைகளை பின்பற்றி இருந்தால் சந்தைகள் சரிவு இருக்காது .

பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகளும் சற்று சரிவில் துவங்கி பிளாட் மற்றும் சிறிய சரிவு போன்ற நிலைகளில் வர்த்தகம் ஆனது . நமது சந்தைகள் ஐரோப்பிய சந்தைகளையும் பின்பற்றவில்லை . அனேகமாக நான் புதன் பதிவில் கூறியது போல சந்தைகள் போன வர உலக சந்தைகளின் இழப்பினை இந்தவாரம் நமது சந்தைகள் ஈடு கட்டி இருக்கலாம் என கருதுகிறேன் ...

மேலும் நமது சந்தைகள் நேற்று முக்கிய ஆதரவு நிலைகளான 4950 மற்றும் முக்கிய குரூசியல் நிலையான 4932 -4920 இதில் 4932 நிலைகள் உடை பட்டுள்ளது சற்று சரிவின் ஆரம்பம் தான் என கருதுகிறேன் . வரும் நாளில் 4920 மட்டுமே முக்கிய க்ருசியல் புள்ளியாக இருக்கும் என கருதுகிறேன் .. முடிவுகளில் கூட நமது சந்தைகளில் மீறிய அளவில் ஒரு ஷார்ட் கவரிங்கோ அல்லது பிரெஷ் பையிங்கோ இல்லாதது சற்று ஆச்சர்யதினை ஏற்பபடுதுக்கிறது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று உயர்வுகளில் வர்த்தகத்தினை துவங்கி சற்று அதே நிலைகளில் வெகு நேரம் சந்தைகள் வர்த்தகம் ஆகின . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 0.80 % - 1 % வரை உயர்வில் முடிந்தன .அமெரிக்கா சந்தைகளும் கடந்த சில நாட்களாக முக்கிய எதிர் நிலையினை கடக்க இயலவில்லை என்பது குறிப்பிடும் படியான விஷயம் ஆகும் ..

நன்றி !!

வெள்ளி, அக்டோபர் 09, 2009

வணக்கம் நண்பர்களே !!

நேற்றைய நமது சந்தைகள் சற்று உயர்வில் துவங்கின .நேற்று முன்தினம் வந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சற்று சந்தைகளுக்கு சாதகமாக வந்தது நல்ல விஷயம் தான் ..

மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் தனது மொத்த லாபத்தில் சற்று சரிந்துள்ளது ஆனால் விற்ப்பனையில் சற்று அதிகரித்துள்ளது .ஆக இந்த செய்தி சற்று ஊக்கம் தரும் விஷயம் தான் மேலும் தனது பங்கு தாரர்களுக்கு ஒரு பங்குக்கு ஒரு பங்கு போனஸ் அறிவித்துள்ளது..

சந்தைகளில் சற்று நல்ல விஷயம் தான் .அதனால் சந்தைகள் சற்று உயர்வில் வர்த்தகம் ஆகின .

நேற்றைய ஆசியா சந்தைகள் முடிவில் சற்று குறைவான உயர்வுகளில் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன . அதன் பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் சற்று அதிக உயர்வில் துவங்கின .

ஆனால் நமது சந்தைகள் முடிவில் சற்று குழப்பத்தில் வர்த்தகம் நடைபெற்றது காரணம் இன்று வரவுள்ள இன்போசிஸ் நிறுவன காலாண்டு அறிக்கைதான் ஏன் எனில் ஒவ்வொரு காலாண்டிலும் இன்போசிஸ் நிறுவனம் தான் முதலில் காலாண்டு அறிக்கைகளை வெளியிடும் அதை வைத்து மொத்த நிறுவனங்களும் சற்று அதனை பின் தொடர் வரும் என கருதப்பட்டது .

ஆனால் இம்முறை அதுபோல அல்லாமல் முதலில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது .ஆதலால் நமது சந்தைகள் முடிவில் அனேக நபர்கள் சந்தையில் இருது வெளியேறியதால் சற்று சந்தைகள் கீழிறங்கின .

ஆசியா சந்தைகள் முடிவில் சற்று நல்ல ஒரு உயர்வில் முடிந்துள்ளன .அதன் பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் சற்று அதிக உயர்வில் துவங்கின .பின்னர் ஐரோப்பிய சந்தைகள் அதே நிலைகளில் நின்று வர்த்தகம் ஆகின .

நமது சந்தைகள் சற்று மேற்கூறிய காரணங்களால் சந்தைகள் சற்று முடிவில் சரிந்தன ..நமது சந்தைகளை பொறுத்த வரை கடந்த சில வர்த்தக தினங்களாக முக்கிய எதிர் நிலை மற்றும் ஆதரவு நிலைகள் தொடர்ச்சியா ஸ்டாப் லாஸ் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிட தக்கது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று உயர்வுஇல் துவங்கி அதே உயர்வுகளில் வர்த்தகம் ஆகின . அங்கு வந்த ஜாப் லாஸ் அறிவிப்புகள் சற்று சந்தைகளுக்கு சாதகமாக வந்துள்ளது .முடிவில் அமெரிக்கா சந்தைகள் இழுபறியான எதிர்நிலைகளை கடக்க இயலாமல் சற்று உயர்வில் சரிந்து முடிந்தன .

இன்றைய ஆசியா சந்தைகள் சற்று குழப்பமான சூழலில் வர்த்தகத்தினை துவங்கி உள்ளன . காரணம் நேற்றய அமெரிக்கா சந்தைகள் எதிர் நிலைகளை கடக்க இயலாமல் போனதாக இருக்கலாம் என கருதுகிறேன் .

ஜப்பானிய சந்தைகள் 1% உயர்விலும் மற்றும் சீன சந்தைகள் சற்று அதிக அளவு உயர்ந்துள்ளன . சீன சந்தைகள் அதிக பட்ச தினசரி அடைந்துள்ள சூழலில் சந்தைகள் நிறுத்தப்பட்டுள்ளன .

இன்றைய முக்கிய எதிர் பார்ப்பான இன்போசிஸ் காலாண்டு அறிக்கைகள் சற்று நன்றாக வந்துள்ளன . அதனை வைத்து நமது சந்தைகள் வர்த்தகம் இருக்கும் இருந்தாலும் சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் .


நன்றி

வியாழன், அக்டோபர் 08, 2009

வணக்கம் நண்பர்களே ,

நேற்றைய நமது சந்தைகள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிவிப்பிர்க்காக சற்று மதியம் வரை நிலைகள் மாறாமல் வர்த்தகம் ஆனது . பின்னர் ஆசியா சந்தைகள் முடிவுகள் சற்று சாதகமாக இல்லாததால் சந்தைகள் சற்று சரிந்தன .

மேலும் நமது சந்தைகள் கடந்த சில நாட்களாக முக்கிய ஆதரவு மற்றும் எதிர் நிலை புள்ளிகளை கடந்த வகையில் ஒரு குழப்பமான வர்த்தகமே சந்தைகளில் நடை பெறுகிறது .

நேற்றைய ஐரோப்பிய சந்தைகள் குறிப்பிடும் படியான ஒரு உயர்வினையோ அல்லது சரிவினையோ காணவில்லை ..

இன்றைய ஆசியா சந்தைகள் சற்று உயர்வில் துவங்கி உள்ளன .நமது சந்தைகள் துவக்கம் சற்று பிளாட் நிலைகளில் இருக்கவே வாய்ப்புகள் அதிகம் . பெரிய அளவிலான சரிவிகள் இருக்காது .

இன்றைய சந்தைகளை பொறுத்த வரை சந்தைகள் துவங்கி ரிலையன்ஸ் இன் போக்கினை வைத்து தான் மொத சந்தையின் போக்கினையும் காண இயலும்

இன்றைய நிலைகள்

ஆதரவு -- - - 5012 , 4980 , 4950 .

எதிர்ப்பு - ---- 5040,5088,5150

நன்றி !!!