நண்பர்களே எனது இந்த பதிவில் கூறப்படும் கருத்துக்கள் மற்றும் அடிப்படை காரணங்கள் மற்றும் நுட்ப காரணிகளின் நிலைகள் அனைத்தும் எனது பார்வையில் கூறப்படுவது . இதைப்பின்பற்றி வரும் லாபம் மற்றும் இழப்பிற்கு நான் பொறுப்பாளி அல்ல ......
புதன், அக்டோபர் 07, 2009
நேற்றைய சந்தைகளில் நிப்டி கடந்தவார உலக சந்தைகளின் இழப்பினை ஈடு கட்டுவதாக முன்பு கூறியதை போல நேற்றைய சந்தைகள் இருந்தன ஆனால் எனது கணிப்பின் படி அது இந்த வார இறுதியில் இருக்கும் என எதிர் பார்த்தேன் .
ஆனால் சற்று கூற்று தவறாகி நேற்றைய சந்தைகளிலே அது நிகழ்த்தப்பட்டதாக கருதுகிறேன் . மேலும் நேற்றைய சந்தைகளில் நன்றாக வர்த்தகம் நடந்தன வர்த்தகத்தின் அளவும் சற்று அதிகப்படியாகவே நடந்துள்ளன .
நேற்றைய ஆசிய சந்தைகள் நமது சந்தைகளின் வர்த்தகத்திற்கு இடையிலும் மற்றும் வர்த்தகத்தின் முடிவிலும் ஒரே நிலைகளில் நின்று வர்த்தகம் ஆகி முடிந்தன . முடிவில் ஆசியா சந்தைகள் 2% - 2.5% வரை உயர்வில் முடிந்தன ...
நேற்றைய ஐரோப்பிய சந்தைகளும் துவக்கம் சற்று மந்தமாக இருந்தாலும் பின்னர் உயர்ந்த அமெரிக்கா ப்யுச்சர் சந்தைகளின் போக்கினை ஒட்டி சற்று வேகமாக உயர்ந்தன .
முடிவில் நமது சந்தைகள் சற்று சிறிய உயர்வுகளில் முடிந்தன . இருந்தாலும் அதிக அளவு உயர்த்தப்படவில்லை . ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 2% - 3% வரை உயந்து முடிந்தன .
நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே சற்று உயர்வில் வர்த்தகம் ஆகி பின்னர் படிப்படியாக அடுத்தடுத்த உயர்வுகளை தொட்டன . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 2 % - 3% உயர்வில் முடிந்தன ,,,
இன்றைய ஆசியா சந்தைகள் சற்று அமெரிக்கா சந்தைகளின் போக்கினை ஒட்டி சற்று உயர்வுகளில்வர்த்தகத்தினை துவங்கி உள்ளன . நமது சந்தைகள் சற்று மேற்கூறிய காரணங்களால் துவக்கத்தில் பெரிய அளவு உயர்வினை எதிபர்க்க இயலாது என்றே கருதுகிறேன் .
சந்தைகள் துவங்கிய பின்னரே சந்தையின் போக்குகள் சற்று பிடிபடும் இருந்தாலும் ஷார்ட் நிலைகளில் உள்ளவர்கள் இறுதி ஸ்டாப் லாஸ் ஆக 5088 ஐ வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் ஸ்டாப் லாஸ் இட வேண்டாம் , ஸ்டாப் லாஸ் இலக்கினை தாண்டி சந்தைகள் செல்லும் பட்சத்தில் ஷார்ட் ஐ கவர் செய்து விட்டு புதிய உயர்வுகளில் பிரெஷ் ஷர்ர்ட் செல்லலாம் . ஆனால் சந்தைகளின் உயர்வுகளில் லாங் பொசிசன் எடுக்க வேண்டாம்
இன்றைய சந்தைகள் சற்று அதிக ஏற்ற இறக்கங்களை எதிர் பார்க்கலாம் . முடிந்த வரை தினசரி வர்த்தகர்கள் கவனமாக இருக்க வேண்டும் ...
நிபிட்டி நிலைகள் :
ஆதரவு -- 5012 , 4980 , 4950 ...............
எதிர் --- 5088 , 5120 , 5150 ................
நன்றி
ரமேஷ்
செவ்வாய், அக்டோபர் 06, 2009
நேற்றைய சந்தைகளில் நமது சந்தைகள் சற்று கடந்த வார உலக சந்தைகளின் சரிவினை குறைந்த அளவில் சரி செய்துள்ளது என்றே கருதுகிறேன் . நேற்றைய நமது சந்தைகள் அந்த உலக வரிசையில் 1.5% மட்டும் சரிவில் துவங்கி வர்த்தகம் ஆகின .
நேற்றய ஆசிய சந்தைகள் சற்று சரிவுகளை நிலை நிறுத்தியே வர்த்தகம் ஆனது காரணம் அந்த சந்தைகள் கடந்த வாரங்களில் இழந்த புள்ளிகள் சற்றே அதிகம் ..
அதன் காரணமாக அந்த சந்தைகள் சில மணிநேரங்கள் துவக்கத்தின் நிலைகளிலேயே வர்த்தகம் நடந்து முடித்துக் கொண்டன .
பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் சற்று சரிவில் துவங்கி பின்னர் நமது சந்தைகள் முடிவின் பொழுது அவைகள் முழுவதும் மீண்டு உயர துவங்கின .நமது சந்தைகள் இருந்தாலும் அந்த கடந்த வார உலக சந்தைகளின் இழப்பில் பங்கெடுக்க அதே சரிவுகளில் சந்தைகள் முடிந்தன .
நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் முதலே சற்று உயர்வில் வர்த்தகம் ஆகின .பின்னர் அங்கு வந்த ஐ எஸ் எம் எனும் அறிவிப்பு சற்று சந்தைகளுக்கு ஊக்கத்தினை தந்தன . சந்தைகள் தொடர்ந்து உயர்விலேயே இருந்தன . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 1% - 1.5% வரை உயர்வில் முடிந்தன .
இன்றைய ஆசிய மற்றும் ஜப்பானிய சந்தைகள் சற்று தடுமாட்டமான நிலைகளில் சற்று உயர்வில் துவங்கி உள்ளன .அனேகமாக இன்றைய அமெரிக்கா சந்தைகள் அல்லது அமெரிக்கா பியுச்சர் சந்தைகளின் போக்கினை வைத்தும் மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் போக்கினை வைத்து ஆசியா மற்றும் நமது சந்தைகளின் போக்கு இருக்கலாம் ...
நமது சந்தைகள் இன்றைய நிலைகள்
ஆதரவு ---- 4980,4950,4910
எதிர்ப்பு ---- 5012,5040,5088
நன்றி !
திங்கள், அக்டோபர் 05, 2009
இன்றைக்கு பலமான எதிர் பார்ப்பில் துவங்கி உள்ளன ஆசியா சந்தைகள் அமெரிக்கா சந்தைகளின் வீழ்ச்சியும் மற்றும் வரும் வார சந்தைகளின் போக்கும் இன்றைய உலக சந்தைகளின் நிலையினை பொறுத்தே அமையும் என எதிர் பார்க்கிறேன் .
அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் தற்பொழுது + 30 புள்ளிகளில் வர்தகமாகி வருகிறது ஆதலால் ஆசியா மற்றும் ஜப்பானிய சந்தைகள் சற்று சரிவில் இருந்து மீள்வதை இன்று காணலாம் என கருதுகிறேன் . மேலும் ஆசியா சந்தைகள் சற்று அதிகமாகவே சரிவடைந்துள்ளன .
கடந்த வெள்ளியன்று நமது சந்தைகளுக்கு விடுமுறை ஆதலால் நமது சந்தைகள் கிட்டத்தட்ட உலக வரிசைகளின் படி 3 % வீழ்ச்சி ஐ இன்று கட்டாயம் சந்தித்தாக வேண்டும் . மேலும் உலக சந்தைகள் பிளாட் நிலைகளில் வர்த்தகம் நடப்பதால் நமது சந்தைகள் அந்தளவுக்கு வீழ்ச்சியை காணுவது சற்று கடினம் என்றே கருதுகிறேன் ..
மேலும் ஆசியா சந்தைகள் அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் சற்று சரிவடையாத வரை சரிவடைவது சற்று கடினமே . எது எப்படியாகினும் நமது சந்தைகள் மற்றும் ஆசியா சந்தைகளின் முடிவும் போக்கும் ஐரோப்பிய சந்தைகள் துவக்கத்தினை எதிர் பார்த்து இருக்கலாம் ..
இன்றைய சந்தைகளில் முக்கிய செய்தியாக வங்கிகள் இணைப்பு பற்றிய செய்திகள் வந்தால் சற்று வங்கி துறை பங்குகள் சற்று உயர வாய்ப்புகள் அதிகம் உள்ளன . கவனம் தேவை வங்கி துறை பங்குகளில் ஷார்ட் செல்ல வேண்டாம் . வங்கி துறை இன்டெக்ஸ் இல் சற்று கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் இருபுறமும் நகர்வுகள் சற்று அதிகமாக இருக்கலாம் .
நமது சந்தைகள் இன்று முக்கிய அதரவு நிலைகள் இரண்டினை உடைக்க வாய்ப்புகள் சற்று அதிகம் உள்ளன . 4950 , 4932 , ஆகவே அந்த நிலைகளில் சற்று லாங் பொசிசன் உள்ள நண்பர்கள் கவனமாக இருங்கள் .
எதிர் நிலைகளாக 5040 , 5088 உள்ளன . ஆகா சார்ட் நிலைகளில் உள்ள நண்பர்கள் சந்தைகள் GAP DOWN ஆக துவங்கும் பட்சத்தில் 5040 ஸ்டாப் லாஸ் இடவும் பின்னர் சந்தைகள் 5080 புள்ளிகளை தாண்டும் பட்சத்தில் அந்த நிலைகளில் பிரெஷ் ஷார்ட் செல்லலாம் ஆனால் அதற்க்கு ஸ்டாப் லாஸ் இட தேவை இல்லை .
ஏன் எனில் சந்தைகள் அந்த நிலைகளை தாண்ட சற்று வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன .. என்று கருதுகிறேன் ........
நன்றி @!!!!!!!!!!!!!
அன்புடன்
ரமேஷ்
ஞாயிறு, அக்டோபர் 04, 2009
வரும் வாரம் உலக சந்தைகள் - October 04, 2009
வணக்கம் நண்பர்களே @!
போன வாரம் கடுமையான சரிவுகள் அடைந்து முடிந்த உலக சந்தைகளை பார்த்தும் உங்களின் தூக்கம் சற்று பறி போய் தான் இருக்கும் . அனைத்து உலக சந்தைகளும் கடந்த வாரத்தில் கிட்ட தட்ட 3.5 % - 6 % வரை சரிவடைந்து முடிந்தன .
நமது சந்தைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை ஆதலால் திங்கள் ஒரு gap down எதிர் பார்க்கலாம் , ஆனால் அந்த சந்தைகளின் வரிசைப் படி பார்த்தால் நமது சந்தைகள் கிட்டத்தட்ட 4 % வரை சரிவடைத்து துவங்க வேண்டும் . ஆனால் அதற்க்கு சாத்திய கூறுகள் சற்று குறைவாகவே இருக்கும் என கருத்து கிறேன் .
மேலும் நமது சந்தைகளை பொறுத்த வரை ஹாங்க்செங் சந்தையையே முழுவதுமாக பின் தொடர்கிறது , பின்னர் ஐரோப்பிய சந்தைகளை பின் தொடர்கிறது . மேலும் கடந்த வார சரிவுகளில் மாட்டிய இந்த சந்தைகள் சற்று உயரவே செய்யும் , ஆக நமது சந்தைகள் சற்று நாடகத்தினை நடத்தலாம் .
உலக சந்தைகளை பொறுத்த வரை இந்த வாரம் பல தெளிவுகள் கிடைக்கலாம் இது பண்டிகை கால சீசன் என்பதால் தங்கம் சற்று விலை மேலும் உயரும் என கருதுகிறேன் . மேலும் இதே சீசன் காலங்களில் பல உற்ப்பத்தி பொருட்களின் நிறுவனங்கள் விடுமுறை என்பதால் கமாடிட்டி சம்பந்தமான பொருட்கள்விலைகள் சற்று அதிகரிக்க வாய்ப்புகள் சற்று அதிகம் உள்ளன .
சந்தைகளை பொறுத்த வரை உலக வரிசை படி நமது சந்தைகள் கிட்ட தட்ட 4 % சரிவினைகட்டயம் கட்டியாக வேண்டிய சூழலில் உள்ளது . மேலும் அதே பண்டிகை கால விடுமுறை செலவினங்களை ஒட்டி சந்தைகள் சற்று லாபத்தினை முதலீட்டாளர்கள் உறுதி செய்வார்கள் என்று கருதுகிறேன் .
அவ்வாறு நடக்கும் பட்சத்தில் நமது சந்தைகள் மட்டுமல்ல உடன் உலக சந்தைகள் பலவும் சரிவினை நோக்கலாம் .. மேலும் உலக மற்றும் நமது சந்தைகள் வர்த்தகம் ஆவது ஆண்டு உயர்வில் என்பதினை மறந்து விட வேண்டாம் ......
நமது சந்தைகள் இவ்வார வர்த்தகத்தில் அதரவு நிலைகளாக 4950 , 4932 4880. ஆகிய நிலைகளும் எதிர்ப்பு நிலைகளாக 4980 ,5012 , 5040 , 5088 ஆகியன இருக்கும் .முடிந்த வரை சந்தையின் போக்கில் செல்லுங்கள் ..
உயர்வில் செல்லிங் செய்யலாம் ஸ்டாப் லாஸ் மேற்கோரிய எதிர் நிலைகளின் அருகாமையில் செல் செய்து அடுத்த எதிர் நிலையில் ஸ்டாப் லாஸ் போடலாம்
கீழ் நிலைகளில் லாங் செல்ல விரும்புபவர்கள் ஆதரவு நிலைகளுக்கு அருகாமையில் வாங்கி அடுத்த ஆதரவு நிலைகளில் ஸ்டாப் லாஸ் போடவும் .
ஒரு வேலை நமது சந்தைகள் உலக சந்தைகள் சரிவின் பொழுது சரியாமல் நின்றால் அடுத்த உலக சந்தைகளின் உயர்வில் கவனமாக இருங்கள் . நமக்கு பெரிய சரிவு காத்திருக்கலாம் ........
நன்றி
அன்புடன்
ரமேஷ்
உலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும்
உலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும் தொடர்கிறது
முந்தய பதிவினை படித்து விட்டு தொடருங்கள் அன்பு நண்பர்களே !
அமெரிக்கா அதிபர் தேர்தல் தியதி அறிவிக்கப்பட்டதும் மக்களிடமும் மற்ற உலக நாடுகளிடமும் வந்த ஒரே எதிர் பார்ப்பு புதிய அதிபராக திரு ஒபாமா வந்தால் சிறப்பாக இருக்கும் என நம்பினார்கள் . அவர்கள் நினைப்பின் படி புதிய அதிபராக ஒபாமா தேர்ந்து எடுக்கப்பட்டார் . அதிபரான பின்னர் ஒபமாவும் சில நல்ல அறிவிப்புகளை வெளியிட்டார் .
அதன் படி உலக தர வரிசையில் அமெரிக்காவை மேலும் வளமைபடுத்துவது மற்றும் அமெரிக்கா வின் பொருளாதார சிக்கலை சரி செய்வது மற்றும் அங்குள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு பதிலாக அனைத்து பிரிவுகளிலும் அமெரிக்கர்களுக்கு முதலிடம் போன்ற தேர்தல் அறிவிப்புகளால் மக்கள் செல்வாக்கு பெருகி அதிபராக திரு ஒபாமா அதிகார பூர்வமாக தேர்ந்து எடுக்கப்பட்டார் .
அதற்க்கு முன்னரே புஷ் அரசின் செயல் பாடுகள் அவரது ஆதரவாளர் களாலேயே சற்று முடக்கப்பட்டன . அதுவும் பொருளாதார சிக்கல்களை சமாளிக்கும் விதத்தில் அறிவிக்கப்பட்ட ஊக்க அறிவிப்புகளான பெயில் அவுட் விஷயம் சற்றும் முனைப்பு காட்டாமல் முடக்கப்பட்டது . முடக்கப்பட்டது என்பதை விட புஷ் அரசு எதிர் கால சிக்கலில் மாட்டி கொள்ள விரும்பவில்லை .
அவ்வாறு அதிபராக திரு ஒபாமா வந்ததும் அரச சபை மற்றும் பிற செயல் பாடுகளில் அவரது அறிவிப்பிர்கேற்ப பல விசயங்கள் நடைமுறை படுத்தப்பட்டன . பின்னர் அங்கு அப்பொழுது இருந்த முக்கிய பிரச்சனையான பெயில் அவுட் பற்றிய விஷயம் எடுக்கப்பட்டதும் . மக்களிடம் அதரவு கேட்கப்பட்டது .
மக்களும் திரு ஒபாமா அவர்களின் மீதுள்ள நம்பிக்கையால் கஜானாவில் இருந்த தொகையினை ஊதாரிதனமாக செலவு செய்த நிறுவனக்களுக்கு வாரி வழங்க நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது . அதில் ஆதரவு பெருகியது மக்களின் அப்போதைய ஒரே நம்பிக்கை பொருளாதார சிக்கல்களை ஒபாமா விரைவாக சரி செய்வார் என நம்பினார்கள் .
அவரும் அதன் பின்னர் மஞ்சள் பத்திரிக்கை தர இருக்கும் நிறுவனங்களை வர சொல்லி பேசினார் . அவர்கள் தொடர்ந்து நிறுவனங்களை நடத்த வேண்டும் என்ற உத்தரவின் பெயரில் கிட்டத்தட்ட ஆறாயிரம் நிறுவனங்கள் கணக்கில் வந்தன . அதில் சில வங்கிகளும் அடக்கம் . இந்த மாதிரியான சூழ்நிலையில் சில நிறுவனங்கள் அந்த நல்ல வாய்ப்பினை தவறாக பயன்படுத்த திட்டமிட்டன .
அது என்னவென்றால் அங்குள்ள சட்ட மசோதாவின் படி மஞ்சள் பத்திரிக்கை தர விரும்புபவர்கள் நேரடியாக அரசிடம் மனு செய்யலாம் . ஒரு முறை மனு நிராகரிக்க பட்டால் அதன் பின்னர் சட்டப்படி அங்குள்ள நீதி மன்றங்களில் மனு செய்யலாம் . அவர்கள் கட்டாயம் அந்த மனுவினை ஏற்றுக்கொள்ள வேண்டும்
அமெரிக்கா அதிபரின் பெயில் அவுட் தொகை 720 பில்லியன் என அறிவிக்கப்பட்டதும் அந்த தொகையினை பெற ஒட்டு மொத்த அமெரிக்கா மக்களும் மற்ற நிறுவனங்களும் மற்றும் வங்கிகளும் நாள் தோறும் வந்த வண்ணம் இருந்தன . முதலில் வந்த நிறுவனங்கள் சில சொன்னதை செய்ய முயற்சித்தன .
ஆனால் பின்னர் வந்த பல நிறுவனங்கள் பணத்தை பெற்றுக் கொண்டு நிறுவனத்தினை மூட முடிவெடுத்தன .
அதே போல மூடவும் செய்தன சில நிறுவனங்கள் இதை அறிந்த அரசு அவ்வாறு ஊக்க தொகை பெற்றால் நிறுவனத்தினை மூட மாட்டோம் என்ற உறுதி மொழியினை பெற்றுக் கொண்டு பணத்தினை வழங்கியது . அதையும் பெற்றுக் கொண்டு மக்கள் அரசிடம் செல்லாமல் நீதி மன்றங்களில் வழக்கு தொடுத்து மஞ்சள் பத்திரிக்கை கொடுத்தனர் . முன்பே கூறியது போல தவிர்க்க முடியாத அரசும் அவற்றை பெற்றுக் கொண்டது .
பல் வேறு நிறுவனங்கள் மூடப்பட்டதும் பலர் வேலை யின்றி தவித்தனர் , இதில் சில அப்பாவி மக்களும் நிறுவனங்களும் மாட்டி கொண்டன சரியாக செயல் பட விரும்பும் நிறுவனங்களுக்கு கூட ஊக்க தொகை கிடைக்க வில்லை ..
அதன் பின்னர் அதிருப்தியை அடைந்த ஒபாமா அரசு தான் செய்த பெயில் அவுட் தவறினை அறிந்து இனி ஊக்க தொகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது .. மேலும் நான் எதிர் பார்த்து போல பொருளாதார சவால்களை உடனடியாக தீர்க்க முடியாது ஆக அனைவரும் சேர்ந்து படு பட்டு அமெரிக்கா பொருளாதார சிக்கல்களை சரி செய்து உலக நாடுகளுக்கு நல்ல வழி காட்டுவோம் என இறுதி யாக ஒபமாவின் அறிவிப்பு வந்த்து .
அதன் பின்னர் தான் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் மூடல் வேலை இழப்பு அதிகரித்து கொண்டே வந்தது , அதிலும் குறிப்பாக வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டு வந்தன . அதனை அறிந்த ஒபாமா அரசு வேலை வாய்ப்புக்களை புதிதாக உருவாக்கியது . வேலை இழந்தோர் அறிவிப்பை குறைக்க முயற்சித்தது அது சற்று சில மாதங்களுக்கு வேலை இல்லாதோர் அதிகரிப்பது சற்று குறைந்து வந்தது .
தற்போதைய நிலவர படி அங்கு கிட்டத்தட்ட 100 வங்கிகள் மூடல் மேலும் பல ஆயிரம் பேர்கள் வேலை இழந்தவர்களாக மற்றும் பல நிறுவனங்கள் மேலும் நஷ்டமடைந்து வருகின்றது . ஆனால் அரசு இவை அனைத்தையும் பெரிய விசயமாக கருதாமல் ஆறப்போட்டு வருகிறது . இந்த சூழ்நிலையில் நல்ல விசயங்களை மட்டும் வைத்து சந்தைகளும் உயர்த்தப்படுகின்றன . இது என்றைக்கு இருந்தாலும் ஒரு பெரிய ஆபத்தினை கொண்டு வரும் ......
அது உலக சந்தைகளையும் சற்று உயர்த்து கிறது ஆனால் நிபுணர்களின் கணிப்பின் படி இன்னும் அங்கு பொருளாதார சிக்கல்கள் சரியாக வில்லை ..
ஒரு வேலை வரும் காலங்களில் இன்னும் சில வங்கிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக தெரிகிறது .அவ்வாறு மூடப்பட்டால் அமெரிக்க கதி கலங்கி விடும் என்பது மட்டும் உண்மை ..........
தற்போதைய சூழ் நிலை நிலவரங்களின் படி இன்னும் அடுத்த ஆறு மாதங்களில்
150 வங்கிகள் வரை திவாலாகும் என தெரிகிறது ,, தற்போதைய நிலவர படி 400 இக்கும் அதிகமான வங்கிகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் தகவல்கள் வருக்கின்றன .
அதனை ஒட்டி இதே பொருளாதார சிக்கல் கொண்ட நாடுகள் வரிசையில் ஐரோப்பிய மற்றும் ஆசியா நாடுகள் உள்ளன மற்றபடி அந்தந்த நாடுகளில் அமெரிக்காவில் உள்ளது போல பெரிய அளவில் பொருளாதார சிக்கல்கள் இல்லை ..
அந்த நாடுகளிலும் பொருளாதார சிக்கல்கள் உள்ளன ஆனால் அதனை அந்த நாடுகள் சமாளிக்கும் விதத்தில் சில ஏற்ப்பாடுகளை செய்து வருக்கின்றன . எது எப்படியாகினும் அமெரிகாவில் பிரச்சனை என்றால் அது கட்டாயம் உலக நாடுகள் பலவற்றையும் பாதிக்கும் என்பதில் ஐய்யமில்லை ..........
நன்றி
வழக்கம் போல தங்களது ஓட்டினை வழங்குங்கள் கடந்த சில நாட்களா ஒட்டு வழங்காத நண்பர்களுக்கும் மற்ற இணைய தள ங்களுக்கும் நன்றி !!!!
அன்புடன்
ரமேஷ்
வெள்ளி, அக்டோபர் 02, 2009
உலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும்
இந்த இனிய விடுமுறையிலே உலக விஷயம் பற்றி எழுதலாம் என முடிவு செய்து மேற்கண்ட தலைப்பிலே தொடருகிறேன் . இதில் சந்தை பற்றிய செய்தி சிறிய அளவில் தான் இடம் பெரும் ...............
அக்டோபர் 2008 ஐ அவ்வளவு சீக்கிரம் நாம் யாரும் மறந்திருக்க முடியாது உலகம் முழுவதிலும் பொருளாதார சிக்கல்களின் ஆரம்பம் . ஒருபுறம் அமெரிக்கா பெரும் பொருளாதார ஆபத்தில் சிக்கி திணறிக் கொண்டு இருந்தது .
ஒரு புறம் அமெரிக்கா நிறுவனங்கள் தொடர்ச்சியாக இழுத்து மூடப்பட்டு வந்தன .மக்கள் வேலையின்றி தவித்து வந்தனர் . இந்த பிரச்சனைகளின் ஆரம்பத்திற்கு முன் சில வருடம் அமெரிக்காவை பின்னோக்கி பார்ப்போம்
அமெரிக்காவை பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் இருந்தே சேமிப்பு என்பது அங்கு துளி அளவும் இல்லை . மக்கள் கிடைத்த வரை செலவு செய்து சுக போக வாழ்கை வாழ்வதில் அமெரிக்கர்களுக்கு ஈடு இணை உலகில் யாரும் இல்லை. இவ்வாறு இருக்க அமெரிக்காவில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பல விசயங்களில் அரசு சலுகைகளை மக்களுக்கு வழங்கிக்கொண்டே வந்தது . சில முதலீட்டு விசயங்களில் பல சலுகைகளை அரசு கொண்டுவந்தது .
அதன் படி முதலில் இன்சூரன்ஸ் துறையில் அதிக அளவில் முதலீடுகள் இடம் பெற தொடங்கின . அதன் பின்னர் அந்த நிறுவனங்கள் மக்களுக்காக வழங்கப்படும் கடன்களை அதிகரித்தன .அதுவும் வீடுகளின் மேல் அதிக கடன்களாக வழங்க ஆரம்பித்தன .
அந்த நிறுவனங்களும் உள்ள காசை வைத்துக்கொண்டு மக்களிடம் வட்டி அதிகம் பெறலாம் என்ற ஆசையில் மக்களிடம் அளவுக்கு அதிகமாக கடன் தர ஆரம்பித்தன . அந்த கடன்களையும் அரசும் மற்றும் தனியர்நிருவனங்களும் வீடுகளின் மேல் தர ஆரம்பித்தன .
மேலும் அப்பொழுது அமெரிக்காவில் பல நாடுகளை சேர்ந்தவர்களும் பணிக்காக அங்கு சென்று வாழவேண்டிய சூழல் பின்னர் அந்த நிலையில் வீடுகளின் மதிப்பு உயர உயர வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் வீட்டின் மேல் வழங்கப்பட்ட கடன் தொகையினை அதிகரித்து வழங்க ஆரம்பித்தன .
மக்கள் வாங்கும் கடனும் வளர அவர்களுக்கு வீடுகளின் மதிப்பும் உயர நிறுவங்களும் மற்றும் அதிகாரிகளையும் இவற்றை பற்றி கவனிக்க வில்லை . அவர்களுக்கு ஒரு சூழ் நிலையில் யாரும் கடனை கட்ட வில்லை என்றால் கூட பரவாயில்லை எனும் அளவிற்கு வீடுகளை விலைகள் தாறு மாறாக உயர்ந்தன .
மக்கள் வீடுகளின் மேல் வாங்கும் கடன் அளவு அதிகரித்துக் கொண்டே செல்ல நிறுவனங்களும் தொழில் செய்யாமலே வட்டி வரும் என மேலும் மேலும் அள்ளி கொடுத்தது . இந்த விஷயம் ஒரு பிரச்சனையாக மாறும் என எந்த அமெரிக்கா நிறுவனமோ அல்லது மக்களோ நினைக்கவில்லை .
அதன் படியே பிரச்சனை வர ஆரம்பித்தது . அது புஷ் அரசின் கடைசி வருட ஆட்சியின் பொழுது புஷ் அரசு அப்போதைய சூழ்நிலையில் இந்த பிரச்சனைகளையும் மக்களுக்கு காட்டியது . மக்களும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை .
நாம் உலகின் வல்லரசு நாடு நாம் பின்னாளில் ஒரு பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்ள போகிறோம் என எச்சரித்தது . ஆனால் நிறுவனங்களோ அல்லது மக்களோ கேட்பதாக தெரிய வில்லை .
அமெரிக்காவில் சில மேல் மட்ட புள்ளிகள் மற்றும் பெரிய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த வர்களுக்கு தெரிய ஆரம்பித்தது . அதன் பின்னர் சிக்கலில் உள்ள பெரிய நிறுவனக்கள் சில உடனடியாக செயலில் இறங்கி கடனை கட்ட சொல்ல கடன் தொகைகள் வரவில்லை .
அதன் பின்னர் தகவல் தொழில் நுட்ப துறைகளுக்கான பணிகள் குறைய ஆரம்பித்தன .அதன் பின்னர் அமெரிக்காவில் மட்டுமலல் உலகின் பல நாடுகளில் வீடுகளில் விலைகள் தாறு மாறாக குறைய ஆரம்பித்தன . பின்னர் விழித்துக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து அரசிடம் வழி கேட்டது .
எங்களால் நிறுவனங்களை தொடர்ந்து நடத்த இயலாது அல்லது அரசு அந்த கடன் பெற்ற நபர்களின் கணக்கில் இருந்து கடன் தொகைகளை திருப பெற வழிவகை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டது .
ஆனால் அன்றைய சூழலில் மக்கள் யாரும் தாமாக முன்வந்து கடனை செலுத்த வில்லை . அவர்கள் கூறியது வீட்டினை வைத்து வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் கடன் பெற்றோம் . ஆனால் தற்போதைய சூழலில் கடன் செலுத்த இயலவில்லை அந்தந்த நிறுவனங்களே வீடுகளை விற்று அந்தந்த நிறுவனங்களே கடனை சரி செய்து கொள்ள வேண்டியது தான் என மக்களிடம் இருந்து ஒரு சேர குரல்கள் ஒலித்தது ...
பின்னர் அரசும் இந்த விசயத்தில் தனி கவனம் எடுத்து தனி நபர்களின் பிரச்சனைகளாக கருதாமல் நாட்டின் பிரச்சனையாக கருதி சில நடவடிக்கைகள் எடுத்தது . ஆனால் எதுவும் சரிவரவில்லை . பின்னர் அரசிடம் நிறுவனங்கள் முறையிட்டன ..
நலிவடைந்த நிறுவனங்கள் பல அரசிடம் பணம் கேட்டது . ஆனால் முதலில் அரசு அதை மறுத்து விட்டது .. ஆனால் புஷ் அரசு கஜானாவில் இருந்து பணத்தை எடுத்து தர மறுத்து பின்னர் பலரது வேண்டுகோளுக்கிணங்க திரும்ப எல்லா நஷ்டமடைந்த நிறுவனங்களுக்கு திரும்ப நிறுவனங்கள் நடக்க அரசு பணம் தந்தாள் தான் முடியும் என கூறியதோடு நிற்காமல் பல நிறுவனங்கள் மஞ்சள் பத்திரிக்கை தர ஆரம்பித்தன ..
ஆனால் புஷ் அரசு அதை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாம திரும்ப அதற்கு நடவடிக்கை எடுப்பது போல சில நடவடிக்கை எடுத்தது ஆனால் அமெரிக்காவை பொறுத்த வரை ஒரு பெரிய முடிவுகள் எடுப்பதாக முடிவெடுத்தால் அதற்க்கு அங்குள்ள் மூத்த குடிமக்கள் இதை செய்யலாம் என வாக்களிக்க வேண்டும் ..
ஆனால் மூன்று முறை நடந்த அந்த வாக்களிப்பில் ஆதரவாக வாக்குகள் கிடைக்க வில்லை . ஆனால் இது ஒரு புறம் நடக்க அப்பொழுது தான் புஷ் அரசின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது , மக்களும் அதிபராக ஒபாமாவை தேர்ந்து எடுத்தால் நன்றாக இந்த பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வருவார் என உலக அளவிலும் எதிர் பார்க்கப்பட்டது .
எதிர் பார்த்து போலவே திரு ஒபாமா அவர்கள் அதிபராக பதவி ஏற்றதும் மக்கள் அவர் இந்த பிரச்சனை யை முடிப்பார் என எதிர் பார்த்தனர் . அவர் வந்ததும் அந்த பிரச்சனைகளையும் மிக சீக்கிரம் முடித்தார் ..
ஆனால் அதன் பின்னர் தான் அமெரிக்காவில் பிரச்சனைகள் தலை தூக்கின .....
தொடரும் ,,,
இதே தலைப்பில் அடுத்த பதிவாக ...........
நன்றி
அன்புடன்